புதன், 29 ஜனவரி, 2014

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டியனின் மீன் சின்னம்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும்

உள்ள உறவு விளங்கும்..











ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும் உள்ள உறவு விளங்கும்.

இரண்டு மீன்களுக்கும் இடையே உள்ள குறியீடை கவனிங்க அதில் ஒரு ரகசியம் இருக்கு

மன்னருக்கும் கொத்தர் பரம்பரைக்கும் அர்சகருக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் இப்போது பலருக்கும் தெரியும்.



ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை

அர்ச்சகர் ரவி குருக்கள்


ஆன்மீக ஆர்வலர் டெலிபோன் மனோகரன்



ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை...ராவணன் ஒரு தமிழன்..ஆரியர்கள் இவனை ஒரு அரக்கனாய் சித்தரித்து உள்ளனர்...நீண்ட காலமாய் ஆயிரம்கால் மண்டபத்தில் இருந்த ராவணன் (மரத்தால் ஆன சிற்பம்) சிதைந்ததால் பின்னர் பிரித்து எரித்துவிட்டனர் விறகாய்..ஒரு .தமிழனுக்க்கு நேர்ந்த அவலம் இது....,.ராவணன் ஒரு மிக சிறந்த சிவ பக்தன் என்பதால் அவரின் சிற்பம் இங்கு நிறுவபட்டு இருக்க கூடும்..வாண கோவரையன் மன்னர்கள் காலத்தில் இது செய்யப்பட்டு இருக்கலாம்...இது ராவணன் என உறுதி செய்தவர்கள் காமநாதீஸ்வரர் ஆலய குருக்கள் சபேச ரவி..ஆன்மிக ஆர்வலர் டெலிபோன் மனோகரன்...

அழிந்துவிட்ட ராவணன் சிலை


ஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவரையர் சிலை

 வாண கோவைரைய மன்னன்

வாண கோவரையன் தேவி


ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அந்த ஆலயத்துக்கு திருப்பணி செய்து ஆறகழூரை தலை நகராய் கொண்டு மகத நாட்டை ஆண்ட வாண கோவரையன் வம்சத்து அரசன்,அரசி சிலை உள்ளது ..இவர்கள் பெயர் என்ன என்பதை இன்னும் அறிய முடியவில்லை....வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க...


செவ்வாய், 28 ஜனவரி, 2014

ஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்

ஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்

--------------------------------------------------------------

ஆறகழூர் முற்காலத்தில் மகத நாட்டின் தலைநகராய் விளங்கியது..

வாணர் குலத்தை சார்ந்தவர்கள் ஆறகழூரை ஆண்டு வந்தனர்..அந்த வாணர் குல பெருமையையும் வீரத்தையும்

ரா.பி.சேதுபிள்ளை என்ற தமிழ் அறிஞர் தமிழர்களின் வீரம் என்ற நூலின் ஒரு பகுதியில் எழுதியுள்ளார்...அதை கீழே படிங்க........

----------------------------------------------------------------------------------------------
தமிழர் வீரம் : ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை 1947

பெண்ணை நாட்டுப் பெருவீரர்

வாணர்குல வீரம்


மகத நாடு


தமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.[6]

வாணர்குலப் பெருமை


தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் "மாவலி மருமான் சீர்கெழு திருமகள்" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.

ஆறைக் கோட்டை


வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.[7]

பஞ்சநதி வாணன்


தமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன்.[8] அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ?

பாண்டிப் போர்


வாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.[9]

பாணனுக்குப் பாண்டிநாடு


நெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனை யும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, "அருந் தமிழ் விருந்து" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, "உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்" என்றான்.[10] கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. "நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.
-----

பாணனது நாணம்


சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, "அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா? பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்தி நின்றான்.

பாண்டிப் போரில் வாணகோவரசன்


பாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.

வாணனும் பாணனும்


ஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்?' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,"ஐயனே! அருந்தமிழ் வாணனே! அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ?" என்று நயமுறப் பாடினான் பாணன்.[11]

வாணன் குறும்பு


பின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன்! வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; "உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் "கிருது" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, "அண்ணலே! கலை வள்ளலே! உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே! வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை?" என்று வினயமாகப் பாடினான்.(12) அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.

ஏகம்பவாணன்


இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். "வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ?" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர்.[13] வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.

[6]. பெருந்தொகை, 1158,1159.

வாணர் குலத்தை சார்ந்த அரசனும் அரசியும்...ஆறகழூரை தலைநகராக கொண்டு மகத நாட்டை ஆண்டவர்கள் ..இவர்களின் சிலை இன்றும் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது...
[7]. பெருந்தொகை, 1185.
[8]. கலிங்கத்துப்பரணி, 365
[9]. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது.
[10]. "மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்" என்று குலோத்துங்க சோழன் மெய்கீர்த்தி கூறுகின்றது.
[11]. பெருந்தொகை, 1188.
[12]. "உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால் கொலைக்குரிய வேழம் கொடுத்தான் - கலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப் பாணனோடு என்ன பகை." - பெருந்தொகை, 1188.
[13]. "வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழ்உரையா வாய் உண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு." - பெருந்தொகை, 1181.

65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட்டம் நடந்த போது...




குடியரசு தினத்தை முன்னிட்டு (26-012014) ஆறகழூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது..பொதுமக்கள் தங்கள் கருத்தை வந்து தெரிவிக்கலாம்.......

விவாதிக்கப்படும் பொருட்கள்..

----------------------------------------------------

1...2014-2014ம் ஆண்டுக்கான இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல்

2...உணவுப்பொருள் வழகுதல் மற்றும் பாதுகாப்புத்துறை நியாய விலைக்கடை கணக்குகளை சமூக தணிக்கைக்கு சமர்பித்தல்

3..2014-2015-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த பணி தேர்வு செய்தல் தொடர்பாக..

4...பாரத சுகாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டுதல்

5..மகிளா சபா கூட்ட தீர்மானத்தை அங்கீகரித்தல்

6..தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி விவாதித்தல்

7...அக்டோபர்2013 முதல் டிசம்பர் 2013 வரை ஊராட்சியின் வரவு செலவுகளை விவாதித்தல்

8..2014-2015 ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பயனாளிகளை தேர்வு செய்தல்....

வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஆறகழூரில் கிராம சபை கூட்டம்

ஆறகழூர் செய்திகள்..

-----------------------------------

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு (26-012014) ஆறகழூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது..பொதுமக்கள் தங்கள் கருத்தை வந்து தெரிவிக்கலாம்.......

விவாதிக்கப்படும் பொருட்கள்..

----------------------------------------------------

1...2014-2014ம் ஆண்டுக்கான இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளிகளை தேர்வு செய்தல்
2...உணவுப்பொருள் வழகுதல் மற்றும் பாதுகாப்புத்துறை நியாய விலைக்கடை கணக்குகளை சமூக தணிக்கைக்கு சமர்பித்தல்
3..2014-2015-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த பணி தேர்வு செய்தல் தொடர்பாக..
4...பாரத சுகாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டுதல்
5..மகிளா சபா கூட்ட தீர்மானத்தை அங்கீகரித்தல்
6..தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி விவாதித்தல்
7...அக்டோபர்2013 முதல் டிசம்பர் 2013 வரை ஊராட்சியின் வரவு செலவுகளை விவாதித்தல்
8..2014-2015 ஆம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பயனாளிகளை தேர்வு செய்தல்....

ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் அரச முத்திரை

பெரியநாயகி அம்மன் கோவிலின் முன்பு

கீழே காணப்படும் சதுர அமைப்பும் அதில் சில வேலைப்பாடும் குறியீடுகளும் நிறைய தூண்களில் உள்ளது..

இது பெரியநாயகி கோவிலின் வெளிப்புற தோற்றம்...கருவறை துவங்கி வெளி மண்டம் வரை உட் புறத்தில் விஜயநகர முத்திரை தெரிகிறது...

இழந்த பெருமையை கோவிலும் ஊரும் இப்போது மீட்டெடுத்து கொண்டு உள்ளது...பைரவர் பூசை,கார்த்திகை தீபம்,மற்ற சிறப்பு நாட்களில் கிட்டதட்ட 50,000 மக்கள் கூடுகிறார்கள்..காலை 7 மணி முதல் இரவு 1 மணி வரை இந்த மக்கள் வருகை கணக்கு..இதில் 95% வெளியூர் மக்கள்..சேலம்.,ஆத்தூர் ,கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,கடலூர்,ஈரோடு..கோவையில் இருந்து கூட வருகிறார்கள் பெரும்பாலானோர் தனி வண்டியில் உணவோடு வருகிறார்கள்..பஸ்நிலையத்தில் இருந்து கோவில் வரை தற்காலிக உணவகங்கள் 30க்கும் மேல் பைரவர் பூசை அன்று மட்டும் செயல்படுகிறது..சுத்தமான குடிநீரும் விற்பனக்கு கிடைக்கிறது..உள்ளூர்வாசிகள் பலருக்கு அன்று ஓரளவு வருவாய் கிடைக்கிறது....
ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது.

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது.

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..
இதன் அருமை தெரியாமல் இதன் மீது சுண்ணாம்ம்பு பூசி வைத்திருக்கிறார்கள்..சிலர் செங்கலால் கீறியும் வைத்திருக்கிறார்கள்...இதை கழுவினால் பிறை நிலாவும் தெரியும்.இப்போதும் கூட புணரமைப்பு பணிகள் நடக்குது...ஆனா காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கு கல்வெட்டு அரச முத்திரையின் அருமை தெரிவதில்லை..சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகளையே சிமெண்ட் தளம் போட்டு மூடி விட்டார்கள்..அதை மீட்க என்ன செய்வது..?

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்

ஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது அஷ்டபுஷ பைரவர் தோற்றம்...



ஆறகழூர் செய்திகள்:

நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது  பைரவர் தோற்றம்...

ஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு

@ஆறகழூர் செய்திகள்

:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது அஷ்டபுஷ பைரவர் தோற்றம்...

செவ்வாய், 7 ஜனவரி, 2014

Aragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஓட்டுனர் மனோகரன் ஆசிரியர் ரவி குடும்பத்தினர் பூஜையின் போது



https://www.facebook.com/venkatesanpon/media_set?set=a.417052055065236.1073741849.100002813356056&type=3

aragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்


Aragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடையாம் தெரியாதவர் தற்கொலை

ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் 50 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார் அருகே மது பாட்டில்கள் விஷம் இருந்ததாய் சொல்கிறார்கள் நேற்றைய தினத்தந்தியில் அவர் புகைப்படம் வந்தது...
-----------------------------------------------------------------------------------------------
தலைவாசல் ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைவாசல் அருகே தியாகனூரில் உள்ள ஏரியில் நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தார். இது குறித்து, விஏஓ சாந்தி கொடுத்த புகாரின் பேரில், தலைவாசல் போலீசார், அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர், வெள்ளை சட்டை, பனியனும் கட்டம் போட்ட லுங்கியும், கழுத்தில் கருப்பு கயிற்றில் கட்டப்பட்ட ஓம் என்ற சில்வர் செயினும் அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

aragalur-ஆறகழூர் செய்திகள்

ஆறகழூர் செய்திகள்...ஆறகழூரில் தொடர் கொள்ளை....................ராமசாமி ஆசிரியர் வீட்டில் 10 புவன் கொள்ளை
-----------------------------------------------------------------------------------
ஆறகழூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் 2 வீடுகளிலும் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:–

தலைமை ஆசிரியர்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் ஆதித்திராவிடர் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பேச்சியம்மாள். ராமசாமி புதுச்சேரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று விட்டார். அவரது மனைவி பேச்சியம்மாள் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டில் கதவு திறந்த நிலையில் கிடந்தது. உடனே இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். மேலும் ராமசாமிக்கும் இது பற்றி தகவல் கொடுத்தனர். உடனே ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவவேளியப்பன், தலைவாசல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளை

வெளியூர் சென்று இருந்த ராமசாமி வந்து வீட்டை பார்த்தார். அப்போது பீரோவின் இருந்த 10¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார்.

கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு அந்த வழியாக ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இன்னொரு சம்பவம்

அந்த பகுதியில் ஓய்வு பெற்ற காவலாளி அம்பாயிரம் குடியிருந்து வருகிறார். அவரது மகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். அவரது மனைவி ராஜேஸ்வரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் அம்பாயிரம் தூங்கிக் கொண்டு இருந்த போது நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் வெளியே தாழ்போட்டு விட்டு அருகில் உள்ள அவரது மகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர்.

அங்கு நகை– பணம் ஏதும் சிக்கவில்லை. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.

மற்றொரு சம்பவம்

அந்த பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சுலோச்சனா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்று தெரிய வில்லை.

இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்–இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 6 ஜனவரி, 2014

Aragalur- ஆறகழூர் வரலாறு





ஆறு அகழிகளை தன் பாதுகாப்பு அரணாக கொண்டு அமைந்ததால்
ஆறு+அகழி+ஊர்= ஆறகழூர் என பெயர் பெற்றது...முற்காலத்தில் இது மகத நாட்டின் தலை நகராக விளங்கியது...
      காமநாத ஈஸ்வரன் கோவில்..(காலபைரவர்)
    
இவை இங்கு புகழ் பெற்ற ஆன்மீக தலங்கள்..
கரி வரதராஜ பெருமாள் கோவில்