வியாழன், 4 ஜூன், 2015

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்
இது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது



தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் பழங்கால எல்லைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல உள்ளது. அப்பொழுது ÷ காயில்களின் நிலங்களுக்காக எல்லைக்கல் நடப்பட்டது. குலப்பிரமாணம் என்ற அளவை முறை மட்டும் அப்பொழுதிருந்ததால் நான்கெல்லைகளாக நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், தோப்பு, ஆறு ஆகியவைகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் குழிக்கல், குத்துக்கல், எல்லைக்கல், சக்கரக்கல் ஆகியவைகளும் ஆலமரம், புளியமரம், பழைய கோட்டை, மக்களது பயன்பாட்டிலிருந்த பெரு வழிகள் ஆகியவைகளும் இந்த எல்லைகளாக இடம் பெற்றுள்ளன.
தேனி மாவட்டம் அ.வாடிப்பட்டி மற்றும் முதலக்கம்பட்டியை ஆண்ட குறுநில மன்னர்கள் தங்கள் பெயர் பொறித்த கல்லை அவர்களுடைய எல்லையில் நட்டு வைத்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் அருகே உள்ள கந்தர்வக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண் கொண்ட மைல் கல் லும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிநாயக்கன்பட்டியில் தமிழ் மற்றும் அரபி எண் கொண்ட மைல் கல்லும் கண்டுபிடித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மைல்கற்கள் 18 ஆம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை குறிக்கிறது. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைப் பகுதியில் தமிழ், ரோமன் மற்றும் அரபி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக