புதன், 16 செப்டம்பர், 2015

aragalur-கி.பி.12 ஆம் நூற்றாண்டை சார்ந்த (ஸ்ரீ கோயில்) சமண பள்ளி ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு


கி.பி.12 ஆம் நூற்றாண்டை சார்ந்த (ஸ்ரீ கோயில்) சமண பள்ளி ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு---வணிக குழு கல்வெட்டை அகழ்தெடுத்தபோது எனக்கு கிடைத்த புதையல் இது

--------------------------------------------------------------------------------------
.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகழூர் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருகாமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது.எட்டு பைரவர்களும் ஒரே கோவிலில் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு மேலும் 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலும் இங்கு உள்ளது.ஆறகளூருக்கு அருகே உள்ள தியாகனூரில் தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு புத்தர் சிலையும் அதைவிட சற்று உயரம் குறைந்த மற்றொரு புத்தர் சிலையும் உள்ளது..5 அடி உயர புத்தர் சிலை ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திருடு போய்விட்டது
11ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநிலமன்னர் மகதை மண்டலம் என்ற நாட்டை ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தார்..இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் குறுநில மன்னராகவும் குலோத்துங்க சோழனின் படைதளபதியாகவும் பணியாற்றியவர்.இவரின் கல்வெட்டுக்கள் ஆறகளூர்,கூகையூர் ,திருவண்ணாமலை,சிதம்பரம் மற்றும் பழைய தென்னார்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைக்கிறது.
கடந்த வாரம் என்னால் ஆறகழூர் பகுதியில் வணிக குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்தது.
இந்த வணிககல் 2 அடி உயரத்துக்கு மட்டுமே வெளியில் தெரிந்தது.
இந்த வணிக கல்வெட்டின் கீழ் எழுத்துக்கள் இருக்கலாம் என்ற என்ணியதால் ஆறகழூர் மகதை மண்டலம் நண்பர்கள் என்ற வாட்ஸப் குழு நண்பர்கள் பொன்.வெங்கடேசன், வே.சந்தோஷ்,R.வேலு,ர.அரவிந் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழு கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் ,மங்கை வீரராகவன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டை தோண்டி எடுத்த போது
அதில் 8 வரிகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது..இந்த கல் உயரம் எட்டு அடி அகலம் ஒன்றரை அடி தடிமன் ஆறு இஞ்ச் அளவுடையது
அந்த கல்வெட்டை கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் படித்து..படி எடுத்தார்
சென்னை கல்வெட்டு ஆய்வாளர்கள் பேராசிரியர் அய்யா Rajagopal Subbiah Padmavathy Anaiappan அம்மா அவர்களால் கல்வெட்டு படிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது..கல்வெட்டில் உள்ள வாசகங்கள்
 12 ஆம் நூறாண்டில் இருந்த மகதை பெரு வழியின் தற்போதைய தோற்றம்
 பழைய பானை ஓடுகள்

 அகழ்ந்து எடுக்கப்படும் முன் நாற்பத்தெண்ணாயிரவர் வணிக குழு கல்வெட்டு
 தியாகனூர் தியாமண்டபத்தில் உள்ள புத்தர்
 ஆறகழூரில் உள்ள சமண தீர்த்தங்கரர்
 சங்க கால சில்லி-ஆறகழூர்

 மகதை மண்டலத்து மன்னர் பொன்பரப்பின வானகோவரையன்
 சமண தீர்த்தங்கரர்- ஆறகழூர்


 சங்ககால கறுப்பு நிற சில்லி-ஆறகழூர்

 சுடுமண் பொம்மை-ஆறகழூர்

 செல்வன் சிவத்தொண்டன் ஆறகழூர்

 வெள்ளைக்கல் சமண அருகர்

 வணிககுழு  கல்வெட்டை மீண்டும் நான் நிறுவிய பின்

 வெள்ளைக்கல் சமணர்-அருகர்-ஆறகழூர்

 வணிக குழு கல்வெட்டு-சமண ஜிநாலயம் இருந்ததற்கான ஆதாரம்
 வணிக குழு கல்வெட்டுடன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்(நான்)
 பொன்பரப்பின வானகோவரையர்
 தியாகனூர் புத்தர்
பானை ஓடு

1.ஸ்வஸ்திஸ்ரீ இந்த2.ஸ்ரீ கோயில் பொன்3.பரப்பின பெருமாள்4.ஜிநாலயாமான5.நாற்பத்தெண்ணா6.யிரப்பெரும்பள்ளி7.நாற்பத்தெண்ணா8.யிரவர் ரக்ஷை

ஆறகளூர் அருகே உள்ள தியாகனூரில் பௌத்தம் தொடர்பான புத்தர் ஏற்கனவே உள்ளது. கூடுதலாக சமணக் கோயிலும் இருந்த செய்தி இக்கல்வெட்டால் அறியக் கிடைக்கிறது. சமணக்கோயில்(ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால்
கல்வெட்டுள்ள இடத்தில் எற்படுத்தப்பட்டது. அக்கோயில் மன்னன் பெயரிலும் வணிகர் பெயரிலும் இணைந்து'பொன்பரப்பின பெருமாள் ஜிநாலயாமான என்று அந்த சமணபள்ளிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
.
இதுவே இந்த கல்வெட்டில் உள்ள செய்தி ஜினாலயம் என்பது மிகப்பெரிய சமண கோயிலை குறிக்கும்
இந்த கல்வெட்டு ஆறகழூரை ஆண்ட பொன்பரப்பின மகதை பெருமாள் என்பவரால் பொறிக்கப்பட்டுள்ளது. சமணக்கோயில்(ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால் இந்த சமணப்பள்ளி 
கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்
மேலும் இந்த இடத்துக்கு அருகே 6 அடி உயத்தில் புத்தரை போன்ற தோற்றமுடைய இரண்டு சிலைகள் இருந்ததாகவும்அச்சிலைகளின் தலையில் ஒரு கூடையை கவிழ்த்தது போன்று தோற்றம் இருந்ததாகவும் அதை தோட்டி சிலை,,தோட்டிச்சி சிலை எனவும் ஊர் மக்கள் அழைத்து வந்ததாக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.இது அங்கிருந்து அழிந்து போன சமண ஜிநாலத்தில் இருந்த சிலைகளாக இருக்கலாம்.இந்த சிலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த கல்வெட்டு இருந்த இடம் 12 ஆம் நூற்றாண்டில் மகதேசன் பெருவழி காஞ்சிபுரம் என்ற பெருவழி பாதையில் அமைந்துள்ளது..மகதேன் பெருவழி காஞ்சிபுரம் என்ற மைல்கல் ஆறகளூர் திருகாமநாதேஸ்வரன் கோயிலில் இருந்தது.இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
மேலும் ஆறகழூர் காமநாதேஸ்வரன் கோவிலில் 1207ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் ஆறகளூரை சேர்ந்த செல்வனான சிவதொண்டன் என்பவர் 5,000 காசுகளை கொடையாக வழங்கியுள்ளார் அதில் திருப்பள்ளிதாமம் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த திருப்பள்ளிதாமம் என்பது சமணபள்ளிகளுக்கு வழங்கும் கொடையை குறிக்கும்.
திரு காமநாதேஸ்வரர் கோயிலில் வெள்ளைக்கல்லால் ஆன ஒரு சமணர்(அருகர்) சிலையும் ,உலோகத்தால் ஆன ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலையும் உள்ளது..இது வணிககுழு கல்வெட்டின் அருகே இருந்து அழிந்து போன சமணபள்ளி ஜிநாலயத்தில் இருந்த சிலைகளாக இருக்கலாம்.
மேலும் இந்த வணிக கல்வெட்டு உள்ள இடத்தின் அருகே உள்ள வயலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் காணப்படுகிறது..2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தின் சுடுமண் பொம்மையின் உடைந்த பகுதி, பெண்கள் விளையாடும் சில்லிகள் கிடைத்துள்ளது..இப்போது விளைநிலமாக உள்ள இந்த பகுதி சங்ககாலத்திலே மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதி என இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.12ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் சைவம்,வைணவம்,பெளத்தம்,சமணம் ஆகிய மதங்கள் ஆறகளூரில் சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது.
மேலும் தொல்லியல் துறையினர் ஆராய்ந்தால்மேலும் பல விவரங்கள் கிடைக்க கூடும் .
என் ஊரின் பெருமையை நான் உணர்ந்த மகத்தான தருணம் இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக