சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் -2
சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள்
வரும் மே 14 ஞாயிற்றுகிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் #சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் என்ற தலைப்பில் திரு ஆய்வாளர் அய்யா பூங்குன்றன்(துறை தலைவர் ஓய்வு) அவர்கள் பேச உள்ளார்..அனைவரும் வந்து கலந்து கொண்டு பயனுற வேண்டுகிறோம்.
சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராமாவடிகள் என்ற மன்னர் ஆத்தூர் பகுதிகளை ஆட்சி செய்ததை பார்த்தோம். இந்த பதிவில் 12 ஆம் நூற்றாண்ட சேர்ந்த குறு நில மன்னரை பார்ப்போம்.
12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு, விழுப்பும் மாவட்டத்தின் மேற்க்கு ,திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்க்கு பகுதிகள், கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேர்ந்தது மகதை நாடாகும். இந்த மகதை நாட்டை வாணகோவரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலை நகரம் ஆறகளூர்.
இந்த வாணகோவரையர்களில் புகழ் பெற்றவர் பொன்பரப்பின வாண கோவரையன் .இவரின் கல்வெட்டுக்கள் ஆறகழூர், பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. திருவண்ணாமலையில் இவரின் பாடல்கள் கல்வெட்டு வடிவில் உள்ளது.மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவரின் படைத்தளபதியாக இருந்தவர் இவர். பாண்டியர்களுக்கு எதிராக நடந்த போரில் சோழனின் படைத்தளபதியாய் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். மூன்றாம் இராசராசனின் மாமனார் இவர். பிற்கால சோழர்களின் வீழ்சிக்கு குறுநில மன்னர்களே முக்கிய காரணம். இதில் வாணகோவரையர்களின் பங்கு மிக அதிகம்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக