பொன்பரப்பின மகதை பெருமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்பரப்பின மகதை பெருமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 மே, 2017

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் 2


                  சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் -2





சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள்
வரும் மே 14 ஞாயிற்றுகிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் #சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் என்ற தலைப்பில் திரு ஆய்வாளர் அய்யா பூங்குன்றன்(துறை தலைவர் ஓய்வு) அவர்கள் பேச உள்ளார்..அனைவரும் வந்து கலந்து கொண்டு பயனுற வேண்டுகிறோம்.


சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராமாவடிகள் என்ற மன்னர் ஆத்தூர் பகுதிகளை ஆட்சி செய்ததை பார்த்தோம். இந்த பதிவில் 12 ஆம் நூற்றாண்ட சேர்ந்த குறு நில மன்னரை பார்ப்போம்.

12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு, விழுப்பும் மாவட்டத்தின் மேற்க்கு ,திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்க்கு பகுதிகள், கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேர்ந்தது மகதை நாடாகும். இந்த மகதை நாட்டை வாணகோவரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலை நகரம் ஆறகளூர்.



இந்த வாணகோவரையர்களில் புகழ் பெற்றவர் பொன்பரப்பின வாண கோவரையன் .இவரின் கல்வெட்டுக்கள் ஆறகழூர், பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. திருவண்ணாமலையில் இவரின் பாடல்கள் கல்வெட்டு வடிவில் உள்ளது.மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவரின் படைத்தளபதியாக இருந்தவர் இவர். பாண்டியர்களுக்கு எதிராக நடந்த போரில் சோழனின் படைத்தளபதியாய் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். மூன்றாம் இராசராசனின் மாமனார் இவர். பிற்கால சோழர்களின் வீழ்சிக்கு குறுநில மன்னர்களே முக்கிய காரணம். இதில் வாணகோவரையர்களின் பங்கு மிக அதிகம்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும்

Village ஊர் Taluk Year Insc_No
1 Adamankottai அதமன்கோட்டை Dharmapuri 1910 200
2 Agaram அகரம் Krishnagiri 1963-64 289
3 Akkaraipatti Pudupalaiyam அக்கரைப்பட்டிப் புதுப்பாளையம் Rasipuram 1985-86 379
4 Alagarmalai Hills அழகர்மலை Rasipuram 1980-81 224
5 Alattur ஆலத்தூர் Rasipuram 1979-80 261
6 Alavaypatti ஆலவாய்ப்பட்டி Rasipuram 1980-81 225
7 Amaragundi அமரகுண்டி Omalur 1955-56 312
8 Ammankoilpatti அம்மன்கோயில்பட்டி Omalur 1979-80 258
9 Ammapalayam அம்மாபாளையம் Salem 1933-34 155
10 Ananthakavundanpalayam அனந்தகவுண்டன்பாளையம் Rasipuram 1929-30 509

11 Aragalur ஆறகலூர் Attur 1913 408

12 Athimuttil அத்திமுட்டில் Dharmapuri 1926 482
13 Attur ஆத்தூர் Attur 1892 1
14 Attur ஆத்தூர் Attur 1913 403
15 Aypalayam ஆய்பாளையம் Rasipuram 1985-86 380
16 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-39 321
17 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-40 366
18 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1965-66 292
19 Buddireddipatti புட்டிரெட்டிப்பட்டி Harur 1905 155
20 Budimatlu புடிமட்லு Hosur 1911 210
Aragalur-இல்.

செவ்வாய், 18 மார்ச், 2014

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்திகள்----1

-----------------------------------------------------------------------------------------
இடம்:ஆத்தூர் வட்டம்,ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மகா மண்டபம்-தென் சுவர்..
செய்தி; வாணகோவரையன்,கோவில் பச்சைக்குப் பத்து பசுக்களையும் ஏனைய பசுக்களையும் கோவில் திருப்பணிக்குமாக விடப்பட்ட செய்தி..
-------------------------------------------------------------------------------------------

கல்வெட்டு:

ஸ்வஸ்தை யாண்டு ஏழாவது முதல் நம்ப

சுக்களிற் கேக்களிகுல ஆண்டு தோறும் பத்

துச்சே... பமாக விடவும் நீக்கி நின்ற .. சே

க்கள் திருக்காமீச்வ ரருடைய நாயனார்கோ

யில் பொன்பரப்பின பெருமாள் திருமதி

க்கும் உட்பட்ட திருப்பணிகளுக்கும்

சந்திராதித்த

வரையும் குடத்தோம். வாணகோவ

ரையன் எழுத்து. இனவ வில்லவராயன்

எழுந்தருளிய


...
----------------------------------------------------------------------------------
இந்த கல்வெட்டின் படி கோவிலுக்கு பூசைக்காக வாணகோவரையன் மகதை பெருமாளும் அவன் திருமதி(மனைவியை குறிக்கிறதா?)பசுக்களை தானமாக கொடுத்தது தெரிகிறது..இந்த கல்வெட்டின் படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மகதை பெருமாள் பொன் வேய்தது உறுதியாகிறது....காமநாதீஸ்வரர் கோவிலில் இருப்பது பொன்பரப்பின மகதை பெருமானும் அவர் துணைவியாகவும் இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது....

திங்கள், 17 மார்ச், 2014

பொன் பரப்பின மகதை பெருமான்

ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட பொன்பரப்பின மகதை பெருமான் பற்றி திருவண்ணாமலை கல்வெட்டுகளில் உள்ளன ..அது பற்றி விக்கிபீடியாவில் உள்ள செய்தி..ஆறகழூர் காமநாதீஸ்வரன் கோவிலில் உள்ள சிலை இந்த பொன்பரப்பின மகதை பெருமானாகத்தான் இருக்க கூடும்..
இவருக்கு செம்பை ராச ராச தேவன் என்ற பெயர் இருந்ததாகவும் தெரிகிறது...
----------------------------------------------------------------------------------------------
மகதைப் பெருமாள்
http://ta.wikipedia.org/s/e0g


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத் தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர் இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.[1]வடநாட்டிலுள்ள மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று. மகதைப் பெருமாள் திருவண்ணாமலைக் கோயிலில் பொன் வேய்ந்தான். இவனைப் போற்றும் 22 பாடல்கள் (வெண்பாக்கள்) திருவண்ணாமலைக் கோயில் சுவரில் கல்வெட்டுகளாக உள்ளன.
அவற்றில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல்.

தாரும் முடியும் முரசும் தமக்குரிய
பாரும் உடன்பெறுவர் பார்வேந்தர் – வீரப்
பெருமாள் மகதேசன் பேர்எழுதித் தத்தம்
திருமார்பில் ஆளோலை செய்து.[2]

இப்பாடல் சொல்லும் செய்தி
தார், முடி, முரசு, ஆளும் நிலம் போன்றவற்றைத்தான் பார்வேந்தர் பெறுவர். மகதை வீரப்பெருமாள் காலத்திலோ இவன் பேரை எழுதிய ஆள்மாலை (ஒன்று) செய்தும் அணிந்துகொள்வர் (மகதைப் பெருமாளோ தன் மார்பில் பலர் எழுதிய ஓலைகளை (விழுப்புண்களை) அணிந்துகொண்டிருக்கிறான் எனினும் அமையும்.)

பார்வேந்தர்கள் மகதேசனை நாடிச்சென்று தார், முடி, முரசு, தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெறுவர். மேலும் மகதேசனுக்கு தாங்கள் அடிமை என தம் மார்பில் ஆளோலை எழுதி அணிவர். என்னும் பொருளிலும் அமையும்.

கருவிநூல்
• மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
மேற்கோள்கள்
1. Jump up ↑ நூ. த. லோகசுந்தரமுதலி,கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1, தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
2. Jump up ↑ http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0311.html