காமக்காபாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7
காமக்காபாளையம்
வீரராகவன் ஐயாவும் நானும்

காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர் Tvenkatesan Tvenkatesan எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம்
நண்பர்களுடன்
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது
கல்வெட்டு
.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
தானம் செய்தவர்
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம்.
மைப்படி
காமக்காபாளையம் கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் கருவரை முன் மண்டபத்தின் தென்புற சுவரில
காலம்:
பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டு
செய்தி:
அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை
செலவுக்காக இவ்வூரை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன்
நமச்சிவாயபிள்ளை சுத்த கிரயமாக 15 குழி நிலம் வாங்கி
கொடுத்த செய்தியை தெரிவிக்கிறது.
கோயிலின் முன்புறம்
கல்வெட்டு பாடம்:
1. ஆறுமுக ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தைமாதம் ஸ்ரீ
வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறிதி வருடம் தை மாதம் 5
காமக்காபாளையத்திலிருக்கும்
ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாயபிள்ளை தான் சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் . இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ(யே)
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்யாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேஷ கட்டளை செலவுக்கு தான் சாசனம் கொடுத்தேன்.
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பெற காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ
9. வாராகவும். தர்மம் - - - - விதமாக செந்திர சூரியாதியள சாஷி தெவிக்காய்

#ஆறகழூர்பொன்.வெங்கடேசன்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 6
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு
என் கல்வெட்டு தேடலில் இது ஒரு முக்கியமான கல்வெட்டு. இது வரை தமிழில் மட்டுமே கல்வெட்டுகளை பார்த்த நான் முதன் முதலில் கன்னட மொழியில் கண்டறிந்த கல்வெட்டு இது.
சென்ற பதிவில் குறிப்பிட்டதை போல் வேலி முள்ளுக்கு நடுவே தனித்தனியாக இரண்டு கற்கள் கல்வெட்டாய் கன்னட மொழியில் இருந்தது. இதை புகைப்படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கிட்டவே நெருங்க முடியாத சூழலில் முள் சட்டையை கிழிக்க உடலிலும் கீறி இரத்தம் வர வர போட்டோ எடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து நானும் விழுப்புரம் வீரராகவன் அய்யாவும் படி எடுக்க சென்றோம். காமக்காபாளையத்தில் இருக்கும் என் நண்பரும் உறவினருமான Tvenkatesan Tvenkatesan அவர்கள் முள்ளை எல்லாம் ஆள் வைத்து வெட்டி சுத்தம் செய்து கொடுத்தார்.
கல்வெட்டு 2 துண்டாய் உடைந்து நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி சப்போட்டுக்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்து. அன்று கொஞ்சம் கவனகுறைவாக இருந்திருந்தால் எங்க கதை முடிந்திருக்கும். ஒரு கல்லை புரட்டியபோது கல்லுக்குள் இருந்து 10க்கும் மேற்பட்ட பெரிய தேள்கள் வெளிவந்தன. பயந்திட்டு தூர ஓடினோம். பின் அந்த கல்வெட்டை படி எடுத்து முடிக்கும் போது மாலை ஆகி விட்டது. 6 மாதம் அதை படிக்க முடியாமல் தடுமாறினோம். அப்புறம் Manonmani Pudhuezuthu சாரின் உதவியுடன் மைசூர் பேராசிரியர் திரு சாமி அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டு செய்திதாள் மற்றும் ஆவணம் 2017ல் பதிவு செய்யப்பட்டது.
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் அருகே செல்வமணி ரெட்டியார் என்பவர்
விளை நிலத்துக்கு அருகே இரண்டாய் உடைந்த
நிலையில் கன்னட மொழியில் உள்ள பலகைக்கல்
காலம்:
பொ.ஆ.1673+78= 1751 , 18 ஆம் நூற்றாண்டு ,மைசூர் இம்மடி
கிருஷ்ணராஜ உடையார்
செய்தி:
கல்வெட்டின் மேல் பகுதியில் சூரியன் பிறை நிலா அதன் கீழ் சங்கு, சக்கரமும் நடுவில் நாமமும் காணப்படுகிறது.கன்னட மொழியில் கன்னட வரி வடிவில் கல்வெட்டு உள்ளது. சகவருடம் 1673 கலியுகம் 4818 ல் வெட்டப்பட்டுள்ளது.மைசூர் மன்னர் உடையார்
இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் காஞ்சி தலத்தின் பத்து கோவில்களுக்கு அன்றாட நைவேத்தியம், மாத, வருட உற்சவங்களுக்கு காமக்காபாளையத்தில் வசூலான வரி வருவாய் 73,991 பணம் 792 பொன்னும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
கல்வெட்டுபாடம் :
1. ஸ்ரீ மது ராமாநுஜா (ய) நமஹ
2. ஸ்வஸ்திஸ்ரீ விஜாய பியூதய
3. சாலிவாகன சகாப்த
4. 1673 கலியுக 4818 சந்த
5. வர்த்தமான வாதா பிரஜோத்பத்தி சம்
6. வத்சரதமாக பகுல 5லு ஸ்ரீமான்
7. மகாராஜ ராஜாதி ராஜ
8. பரமேஸ்வர பிரவுட பிரதாப நரப
9. தி வீரஸ்ரீ அப்பிரதிம கிருஷ்ணராஜ
10. உடையரயளு ஸ்ரீ ரங்கப்பா
11. ட்டனதள்ளி ரத்ன சிம்மாசனாரூடரா
12. கி பிருதீவி சா(0) ராஜ்யம் யத்திரளு
13. கஞ்சி ஸ்தலதள்ளி இருவ ஸ்ரீ பார்த்த
14. சாரதி ஸ்வாமிய - - - - தூ - -
15. ஸ்வாமி - - - - அஸ்டபுஜ ஸ்வா
16. மியவரு வி[ஸ்வ] பிரகாச ஸ்வாமி
17. யவரு காமானிகா ர சம்ஹா [ர] ஸ்வா
18. மீ யவரு திரி விக்ரம ஸ்வாமியவ
19.ரு மரகத வர்ண ஸ்வாமியவரு
20. பிரவாள வர்ண ஸ்வாமியவரு வைகுந்
21. ட ஸ்வாமியவரு ஸ்ரீ பாஷ்யக்கார ஸ்வா
22. மிய வரிகே சக நம்ம கை(0) கர்ய
23. வாகி படிதர தீபாராதனே நித்யோத்
24. ஸவ பக்சோத்ஸவ மாசோத்ஸவ
25. சம்வத்ரோத்ஸவ முன் தாத உத்
26. ஸவகரு நடேயளிக்கே பக்கே நிம்ன
27.அவாளு அகரகஜ்ஜின சாவடி
28. ஹோபளி அனந்தகிரி ஸ்தலதளு
29. பெ(ரியேரி) வழித தா காமக்கா பாள்ய
30. த கிராமவனு தாரேயரது
31. கொட்டு இத்தேவேயாத காரன
32. - - - -
33. பிரோமத சம்வத்சரத ஹட்டு
34. வழி கோபால க 73991. 0
35. சுங்க பொம்மு (7) 921 உப
36. யம் கோபால க 7412 ரி 0 சந்த வு
37. டு வழி கிராமவன்று சர்வ மான்ய
38. வாகி நடசி கொண்டு பருவ ஆகே
39. கட்ல மாடிபி இதிது ஆப்பிரசார
40. கே கஞ்சி ஸ்தலதலி இடுவ பார்த்த
41. சாரதி ஸ்வாமி யவரு முந்நா
42. த ஈ அத்து தேவஸ்தான களிகே சதா
43. படிதரா தீபாராதனே நித்யோத்சவ
44. பக்சோத்சவ மாசோத்சவ சம்வத்ஸ
45. ரோத்ஸவ முந்தாத சாபே பக்யே
46. ஈ காமக்கா பாள்யத கிராமத ய
47. ல சதுர்சீமேகம் சங்க சக்ரந சிலா
48. பிரதிஷ்டையன்று மாடிசி கொட்டு ச
49. ந்தர சூர்யாதி வரைகு சாஸ்வத நிரு
50. பாதிகா சர்வமான்யவாகி கம்சி
51. [ஊரி] கே மணவாள பராக்கு ஸர
52. மாறு [பீச்சி]ய் யரவரா மடத
53. அவறிலிகே நடசிக்கொண்டு ப
54.ரோது
நன்றி : சுகவனமுருகன், மைசூர் பேராசிரியர் சாமி

சனி, 16 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

தினமணி 16/12/2017

தினமலர் 16/12/2017

காலைக்கதிர் 16/12/2017

கன்னட கல்வெட்டு

கோயில் கல்வெட்டு

தானத்தார்

காமக்காபாளையம் கல்வெட்டு

பைக் மெல்ல தலைவாசல் வீரகனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. கண்கள் ரோட்டின் இருபுறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தது..ஏதாவது கல்வெட்டு கிடைக்குமா நடுகல் கிடைக்குமா என பார்த்துக்கொண்டே பயணித்தேன். ஆறகழூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் காமக்காபாளையம். ஆறகழூருக்கும் காமக்காபாளையத்துக்கும் நீண்ட நாளாகவே தொடர்பு உண்டு. மெல்ல வண்டி காமக்காபாளையத்தை நோக்கி பயணித்தது. வழியில் நிறைய சுமை தாங்கி கற்கள் கண்ணில் பட்டது. காமக்காபாளையம் அடைந்ததும் அங்கிருந்த பெரியவரிடம் விசாரித்தேன்
அய்யா இங்க ஏதாவது கல்வெட்டு நடுகல் இருக்கா..?
புரியலப்பா...
கல்லுல எழுத்து அடிச்சிருப்பாங்க..அதான் கல்வெட்டு
ஒரு வீரன் கையில வில் இல்லனா கத்தி வச்சிருப்பான். அது நடுகல். அந்த மாதிரி ஏதாவது இருக்குங்களா...?
தெரியலப்பா..இப்படியே நேரா போனா அங்க சிவன் கோயிலு இருக்கு. அங்க போய் கேட்டு பாரு..
வண்டி கோயிலை நோக்கி திரும்பியது. கோயில் பூட்டியிருந்தது. கோயிலுக்கு முன்னாடி ஒரு அம்மா நெல் காய வைத்து கொண்டிருந்தார். நெல்லின் வாசம் நாசியில் புகுந்து கடந்து சென்றது.
ஏங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே...
கல்லுல எழுத்து எழுதியிருப்பாங்கம்மா..
ஓ...அதுவா...அந்த வயலுகிட்ட நிறைய முள்ளு மொளச்சி கெடக்கே அதுக்குள்ள ஒரு கல்லு இருக்கு..
போய் பாருங்க...
கோயில் எப்ப திறப்பாங்க...?
இங்க வெங்கடேசன்னு ஒருத்தர் Tvenkatesan Tvenkatesanஇருக்கார் அவர்தான் கோயிலை பாத்துகிறார். அவரை போய் பாருங்க..
நன்றி சொல்லிட்டு முள் புதர் அருகே போனேன்..கிட்டவே நெருங்க முடியல..
அங்க பாத்த கல்வெட்டை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். வெங்கடேசன் சாரை தேடி போனேன். என்னை அறிமுகப்படுத்திகொண்டேன். கடைசியில் பாத்தா அவர் என் உறவினர். அன்போடு என்னை கோயிலுக்கு அழைத்து வந்தார். கோயிலைப்பற்றி எல்லா விவரங்களும் சொன்னார்.
அந்த கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு இருக்கு என காண்பித்தார். 9 வரிகளில் அருமையான கல்வெட்டு அது. அதை படம் எடுத்துக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். என் குருநாதரான விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொன்னேன். ஞாயிற்று கிழமை ஐயா வந்து விட்டார். நானும் அய்யாவும் சென்று வெங்கடேசன் சாரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கல்வெட்டை படி எடுத்தோம். முள்ளுக்குள் இருந்தது ஒரு கன்னட கல்வெட்டு. அது பற்றி பிறகு சொல்கிறேன்.
கோயிலில் இருந்த கல்வெட்டை படித்து வெங்கடேசன் சாருக்கு சொன்னோம். எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்..
மாலை 5 மணிக்கு சூடா வடையும் டீயும் வந்தது. களைப்பு போக சற்று ஓய்வெடுத்து விட்டு கிளம்பினோம்.
அந்த செய்தி இன்றைய காலைக்கதிர், தினமணி, தினமலர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனகளுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ் செல்வன், திரு தினமணி சரவணன், திரு தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
சேலம் நியூஸ் டெய்லி வலைதளத்தில் வெளியிட்ட செய்தியாளர் திரு திரு ராஜசேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கல்வெட்டு பற்றிய விவரம்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காமக்காபாளையம் கிராமம். அருணாசலேசுவரர் கோயில் அர்த்த மண்டபம் விநாயகர் மாடத்துக்கு அருகே
காலம் : சகம் 1412 கலியுகம் 4871 விஜய தை 5 பொ.யு. 1490
கல்வெட்டு வாசகம்
1 . ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தை மாதம் ஸ்ரீ [சாலி] வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறுதி வருடம் தை மாதம் 5 காமக்காபாளையத்திலிருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாய பிள்ளை தான சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ[யே]
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்மாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை செலவுக்கு தான சாசனம் கொடுத்தேன்
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பேற் காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ-
9. வாராகவும் தர்மம் - - - - விதமாக செந்திர சூரியா தியளவும் சாஷி தேவிக்காய்

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

காமக்காபாளையம் கல்வெட்டு
தினமலர் செய்தி 16/12/2017

தினமணி செய்தி 16/12/2017

காலைக்கதிர் செய்தி 16/12/2017

காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு

காமக்காபாளையம் அருணாசலேசுவரர் கோயில் கல்வெட்டு

அருணாசலேசுவரர் கோயில்

http://cfcm.salemonline.in/article/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-527-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2033526

http://www.dinamalar.com/news_detail.asp?id=1919912

http://tamil.eenaduindia.com/State/Salem/2017/12/15170620/500-years-old-inscription-found-in-selam.vpf

http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/dec/16/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87527-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2827422.html

வியாழன், 14 மே, 2015

காமக்காபாளையம் கல்வெட்டு

மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பைக் சட்டென்று நின்றது..காமக்காபாளையம் என்ற ஊரின் பெயரை படித்தவுடன்..

காமநாதீஸ்வரர்----காமக்காபாளையம் இது இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ மனம் யோசித்தது....
பைக் ஊருக்குள் திரும்பியது...உயர்ந்து நின்ற கோபுரத்தை நோக்கி பயணித்தது...ஒரு பழைய சிவன் கோவில் ஆனா அது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தது...கோவிலும் பூட்டியிருந்தது..
கோவிலின் முன் வழக்கம் போல் நம் மக்கள் அறுவடை செய்த எள்ளை காயவைத்து உதிர்த்து கொண்டிருந்தனர்.....
ஏங்க இங்க எங்காவது தனியா சிலையோ அல்லது எழுத்துக்கள் அடிச்ச கல்லோ இருக்கா..?
இங்கயா...?அப்படி ஏதும் இல்லையே இது ஒரு இளைஞரின் குரல்...
ஏம்பா அந்த முள்ளு காட்டுகிட்ட 2 கல்லு இருக்கே..அங்க கூட பொம்பளங்க..தீட்டானவங்க போவ கூடாதும்பாங்களே...50 வயது மதிக்கதக்க ஒரு பெண் குரல்....
அட ஆமாம்....அந்த இளைஞருடன் சற்று தொலைவு நடந்தவுடன்
அடர்த்தியாய் முள் வளர்ந்திருந்த ஓர் இடத்தை சுட்டி காட்டினார்..
அய்யோ இதுக்குள்ள எப்படி போறது...?
ஆனாலும் விட்டுப்போக மனமில்லை....
மெள்ள முள்ளை விலக்கி விலக்கி உள்ளே நுழைந்தேன்..உடல் முழுக்க முற்களின் கீரல்கள்...இன்னும் கொஞ்சம் முன்னேறியபோது
2 கற்கள் தென்பட்டன....மனதில் உற்சாக வெள்ளம்...
ஆனால் கிட்ட நெருங்க முடியல...கையை மட்டும் நீட்டி குத்து மதிப்பாய் காமிராவில் படம் எடுத்தேன்....சில படங்களும் சில எழுத்துக்களும் உள்ளன...இது என்ன கல்லாக இருக்கும்....?