வாழப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜூன், 2018

வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு

Salem:
June 18
வாழப்பாடி சென்றாயபெருமாள் கோயில் கல்வெட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி சென்றாயப்பெருமாள் கோயிலில் 148 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் படி எடுக்கப்பட்டு படிக்கப்பட்டது.
சேலம் வரலாற்று ஆய்வுமைத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,கவிஞர் பெரியார் மன்னன்,மருத்துவர் பொன்னம்பலம்,பெருமாள் ஆசிரியர்,ஜீவநாரயணன் ஆகியோர் அடங்கிய குழு வாழப்பாடி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அக்ரகாரத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் வெளிப்புற வாயிலின் அருகே உள்ள ஒரு கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இது வரை அக்கல்வெட்டில் உள்ள வாசகங்கள் அறியப்படாமல் இருந்து வந்தது. கல்வெட்டானது 20 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் சக்கரம்,சங்கு,நாமம் போன்றவை செதுக்கப்பட்டுள்ளது. கலியுகம் 4971 சாலிவாகன வருடம்( 1792) வைகாசி 13 ஆம் தேதி என கல்வெட்டு துவங்குறது. இது தற்போதைய கணக்கில் கி.பி 1870ஆம் ஆண்டு ஆகும்.
வாழப்பாடியில் அப்போது வாழ்ந்த தவசி வன்னியன் மகன் தொப்ள வன்னியன் மனைவி அலமேலு அவர்களின் பெரு முயற்சியால் அங்கமுத்து வன்னியன் என்பவர் தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தாலும் உடல் வலிமையாலும் வாழப்பாடி அக்ரகாரத்தில் அமைந்துள்ள சென்றாயப்பெருமாள் கோயிலில் கர்ப்பகிரகம் அமைத்து திருப்பணி செய்துள்ளார்.
சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர்

கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைத்து கொடுத்து ஒரு கிணறும் வெட்டி கொடுத்துள்ளார். கோயில் வாகனங்களையும் புதுப்பித்து கொடுத்துள்ளார்.திருப்பதியிலிரு ந்து சென்றாயப்பெருமாள், அலமேலு திரு உருவை செய்து கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பூசைக்காக நஞ்சை,புஞ்சை நிலங்களை தானமாக அளித்து தேர் ஒன்றும் செய்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இங்கு தேர்திருவிழா நடத்தப்படவேண்டும். கோயிலின் வெளியே போடப்பட்டுள்ள கடைகளின் வாடகையிலிருந்து 500 ரூபாய் எடுத்து தேர்திருவிழா நடத்தப்பட வேண்டும் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தர்மத்தை அனைவரும் மதித்து தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். இந்த தர்மத்துக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்கள் இந்த பிறவியிலே மதி இழந்து ஏழெழு நரகத்துக்கு செல்வார்கள் என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.தவசி வன்னியன் என்பவர் இக்கல்வெட்டை எழுதியுள்ளார்.
வாழப்பாடி பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?
Nid=863623
http://www.dinamani.com/tamilnadu/2018/jun/19/148-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2942770.html
http://www.dinamalar.com/district_detail.asp?id=2044333

வெள்ளி, 21 ஜூலை, 2017

சேலம் வாழப்பாடி பெரியகுட்டி மடுவு நடுகற்கள்

பெரியகுட்டி மடுவு -11ஆம் நூற்றாண்டு சோழர்கால நடுகல் செய்தி.

சுமார் 3 மாதங்களுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பெருமாள் சார் புழுதிக்குட்டை பகுதிக்கு ஆய்வு செய்யலாம் என அழைத்தார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன் அய்யா,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவன முருகன் சார்
பெருமாள் சார், கலைச்செல்வன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம்,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார் மன்னன், தீபக் ஆதி, வீரமணி வீராசாமி அய்யா ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டை பகுதியில் இரண்டு நடுகற்களை ஆய்வு செய்து படி எடுத்தோம்..
மேற்கொண்டு தேடலை தொடர கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இங்கு நடுகல் இருக்கா, கல்வெட்டு இருக்கா என விசாரித்துக்கொண்டே மலை மேல் பைக்கில் ஏறுக்கொண்டே இருந்தோம். நீண்ட விசாரிப்பகளுக்கு பின் பெரிய குட்டி மடுவு என்ற இடத்தில் 2 கல்லு ரொம்ப நாளா நின்னுகிட்டு இருக்கு என தகவல் சொன்னார்..உற்சாகம் பீறிட அந்த இடத்தை நோக்கி எங்களின் பைக் சீறி பாய்ந்து சென்றது..
கிட்ட தட்ட அந்தி சாயும் நேரம் .சூரியன் மெல்ல மறைய துவங்கியிருந்தான் .இருட்டுவதற்க்குள் போகவேண்டுமே என பரபரப்புடன் பயணித்தோம்...அந்த இடத்துக்கு சென்று அங்கும் பலருடன் விசாரித்து ஒரு வழியாய் இடம் இருக்கும் தெரிந்தது. சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தோம்...வழியில் ஒரு ஓடை அதையும் கடந்து சரிவான பாதையின் மேல் ஏறி சென்றோம்..மூச்சு வாங்கியது....தூரத்தில் 2 நடுகற்கள் தெரிந்தது. களைப்பெல்லாம் பறந்தது. பறந்தோடினோம்...
அங்கு தன் உடலில் 5 அம்புகளை வாங்கிய வீரனும், அருகே மற்றொரு வீரனின் நடுகல்லும் இருந்தது..பரபரவென இயங்கினோம்..மைப்படி எடுத்தோம்..எழுத்துக்கள் மிகுந்து தேய்ந்தும் சிதிலமடைந்தும் இருந்ததாலும் ,இரவாகிவிட்டதாலும் திரும்பி விட்டோம்...பின்னர் 3 மாதங்கள் முயற்சித்தும் எழுத்துக்கள் மோசமாக இருந்ததால் திரும்ப சென்று படிக்கலாம் என முடிவு செய்தோம்
இம்முறை தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன் அய்யா , ஆய்வாளர்கள் மங்கயற்கரசி மேடம், கோவை சுந்தரம் அய்யா ஆகியோர் இணைந்தனர்...அப்போது படித்து அறியப்பட்ட செய்தி இன்றைய
காலைக்கதிர், தினமணி, தினத்தந்தி, தினமலர், நேற்றைய மாலைமுரசு, மாலை மலர் ஆகிய நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன் சார், தினமணி, மாலைமலர் பெரியார் மன்னன் சார், தினத்தந்தி வேலுமணி சார், தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் சார் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

நடுகல் செய்தி:

900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை ஊராட்சியில் கல்வராயன் மலையில் உள்ள பெரியகுட்டி மடுவு என்ற கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன், வரலாற்று ஆய்வாளர்கள் , விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள், மருத்துவர் பொன்னம்பலம் , மங்கையற்கரசி,கோவை சுந்தரம், கலைச்செல்வன் சுகவனமுருகன், ,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார்மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரியகுட்டிமடுவு பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஏரிக்காடு பகுதியில் பொன்னுசாமி என்பவரின் நிலத்தில் 11ஆம் நூற்றாண்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டறியப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் எழுத்துக்கள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் 
எழுத்துக்கள் காணப்படவில்லை.

11ஆம் நூற்றாண்டு நடுகல்

இந்த நடுகல்லானது 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ளது. திரிபங்க நிலையில் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. தலை கொண்டை நேராக உள்ளது. இவன் உடலில் கழுத்து ,மார்பு, வயிறு, தொடை, கணுக்காலுக்கு சற்று மேலே என் 5 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளதை துல்லியமாக சிற்பத்தில் காட்டியுள்ளனர். இவன் வீரம் மிக்கவனாகவும் முக்கிய தளபதியாகவும் இருந்திருக்கலாம். ஒரே நேரத்தில் பலர் இவனை மையப்படுத்தி சூழ்ந்து தாக்கியதால் பல இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லுடன் கூடிய அம்பும் காட்டப்பட்டுள்ளது. அழகான இடை ஆடையும் கழுத்தணியும் காட்டப்பட்டுள்ளது.. இந்த நடுகல்லில் 27 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. அதில் 3 வரிகள் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளன.

கல்வெட்டு சொல்லும் செய்தி

மலையகுல சந்திராதித்த பேரரையன் என்ற தலைவன் காலத்தில் ஒரு வீரன் தன்னுடைய பகுதியை பாதுகாக்க எதிரிகளுடன் போரிட்டு இறந்த செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. இதில் வரும் மலையகுலம் என்பது சங்க காலம் முதலே திருக்கோயிலூரை தலைநகராக கொண்டு ஆண்ட மலையமான்களை குறிப்பதாகும். சோழர்கள் காலத்தில் இவர்கள் மலையகுல ராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்ற சொல் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சூரிய குலம், சந்திர குலம் என்ற இரண்டு பிரிவு அரசர்கள் இருந்தார்கள். சில ஊர் கல்வெட்டுக்களில் மட்டுமே இந்த சந்திரகுலம் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்பது சூரிய குலத்தையும், சந்திர குலத்தையும் இணைத்து ஒரு புதிய குலமாக உருவாகி இருக்கலாம். அதற்கு சான்றான இந்த கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியமான ஒன்றாகும்.
இந்த கல்வெட்டில் ஈச்சம்பாடி, பரித்தியூர் என்ற ஊர்களின் பெயர்கள் வருகிறது. இந்த ஊர்கள் இப்போதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இதே பெயரில் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. இந்த ஊர்களின் வழியாக மாவூர் என்ற ஊர்வரை சென்று இவர்கள் போரிட்டுள்ளனர். இப்போரில் கணியன் என்பவனின் மகன் சேனான் என்ற வீரன் இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இதுவாகும்.
12 ஆம் நூற்றாண்டு நடுகல்
சேனான் என்பவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லுக்கு அருகே மற்றொரு நடுகல்லும் உள்ளது. இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல்லாகும். இதில் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை. வீரனின் தலையின் வலது புறம் கொண்டை காட்டப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாள் உள்ளது. இடது கையில் வில் அம்புடன் இணைந்து உள்ளது. போருக்கு தயாராக செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். காதணிகளும், இடை ஆடையும் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் ஒர் அம்பு பாய்ந்த நிலையில் உள்ளது. இடுப்பின் ஒருபுறம் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. சமபங்க நிலையில் வீரன் உள்ளான். இப்பகுதியில் நடந்த போரில் இவன் எதிரிகளை கொன்று இவனும் வீர மரணம் அடைந்துள்ளான். இவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
இப்பகுதியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்று செய்திகள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்..
அலைபேசி 9047514844

http://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/vazhappadi+aruke+900+aandukalukku+murbatta+sozharkala+nadukarkal+selam+mavatta+varalarru+aayvu+maiyak+kuzhu+kandarinthathu-newsid-70626486?ss=wsp&s=a
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-900-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2741584.html


http://www.dinamalar.com/district_detail.asp?id=1816881










புதன், 17 மே, 2017

சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்




                           சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கம்



  நன்றி..நன்றி..நன்றி..
சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
Ponnambalam ChidambaramKalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPeriyar MannanJeevanarayanan SelvakumarVeeramani Veeraswamiதீபக் ஆதீChennai Sevas Pandian
ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்

                                              




ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி Mangai Ragavanமேடம், திரு Manonmani Pudhuezuthu சார், திரு Rajaram Komagan சார், திரு Mahathma Selvapandiyan சார் ஆகியோருக்கு மிக்க நன்றி..
கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்த பெரியசாமி ஆறுமுகம், மற்றும் அவரின் திருச்சி நண்பர்
Veeramani Veeraswami அய்யா ஆகியோருக்கு நன்றி


                             
எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியையும் ,வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்சியின் சிறப்புக்கு மாமன்னர் Chennai Sevas Pandian
அவர்களின் பதாகைகள் , கணிணி பட உத்திகள் பெரும் உதவி செய்தன. நன்றி மாமன்னரே...
நிகழ்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி


                                    
சேலம் வரலாற்று சங்க செயலாளர் திரு Barna Boss
சேலம் நாணயவியல் சங்கத்தலைவர் திரு சுல்தான் பாய். சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் திரு முல்லையரசு, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் திரு Bala Murugan, எங்கள் ராஜகுரு திரு VeludharanVaradharajan SenthilKumar, Venkatesan Tklp, Yercaud ElangoEmgo MykingSridhar HemaSivarama Krishnan SivaSivasankar Babu, அலெக்சாண்டர் ஆகிய சான்றோர்களுக்கு மிக்க நன்றி


                  
நிறைய பெயர் விடுபட்டிருக்கலாம் மன்னித்தருள்க..
இது எங்கள் முதல் முயற்சி..



                             நிகழ்சி பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் எங்களை மேலும் செம்மைபடுத்தி வழி நடத்தும்
நன்றி

#சேலம்வரலாற்றுஆய்வுமையம்


     http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2702607.html


செவ்வாய், 2 மே, 2017

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்று கருத்தரங்கம்

சேலம் வரலாற்று ஆய்வு மையம் வழங்கும்
வரலாற்று கருத்தரங்கம்

அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் சேலம் வரலாற்று ஆய்வு மையமானது கடந்த 2 ஆண்டுகளாக வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாய் சேலம் மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பல கல்வெட்டுக்கள், நடுகற்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளோம். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து தாரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர், பேளூர் போன்ற இடங்களில் மரபுநடை நடத்தி உள்ளோம்.
இதன் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கு ஒன்றை நடத்த நம் வரலாற்று ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதில் பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேச உள்ளனர். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...
சேலம் வரலாற்று ஆய்வு மையம்- வரலாற்று கருத்தரங்கம்
நாள் ஞாயிற்று கிழமை 14/05/2017
இடம் : அரிமா அரங்கம்
காளியம்மன் கோயில் அருகே,வாழப்பாடி
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
கலந்து கொள்ள உள்ள ஆய்வாளர்களும் பேசும் தலைப்பும்
1. திரு .இரா. பூங்குன்றன் அவர்கள் , தலைமை அலுவலர் தொல்பொருள் ஆய்வுத்துறை (ஓய்வு)
தலைப்பு : சேலம் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள்
2. திரு. சீ. விழுப்புரம் வீரராகவன் அவர்கள், கல்வெட்டு ஆய்வாளர்,
தலைப்பு : கல்வெட்டுக்களில் எழுத்து வளர்ச்சி
3. திருமதி வீ.ரா.மங்கையற்கரசி அவர்கள், தொல்லியல் ஆய்வாளர் Mangai Ragavan
தலைப்பு : வரலாறு
4. திரு சுகவன முருகன், தொல்லியல் ஆய்வாளர் அவர்கள்
Manonmani Pudhuezuthu
தலைப்பு : பாறை ஓவியங்கள்
5. திரு நாமகிரிபேட்டை துரைசாமி அவர்கள். தொல்லியல் ஆய்வாளர்
தலைப்பு : கொல்லிமலை
6. திரு குழந்தைவேலன் அவர்கள், தமிழக தொல்லியல் துறை (ஓய்வு)
தலைப்பு : ஊரும் பேரும்
7. திரு .கோமகன் அவர்கள், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு கழகம். Rajaram Komagan
தலைப்பு : சேலம் மாவட்டத்தில் சோழர்கள்
8. திரு மகத்மா செல்வபாண்டியன் அவர்கள் ,வரலாற்று ஆய்வாளர் Mahathma Selvapandiyan
தலைப்பு : மகதை மண்டலத்தில் பெளத்தமும் ,சமணமும்
கண்காட்சி
1. Veeramani Veeraswami ,திரு வீரமணி அய்யா நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்
2. பெரியசாமி ஆறுமுகம் , திரு துறையூர் பெரியசாமி தன் சேகரிப்புகளை காட்சிக்கு வைக்கிறார்,
மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்படும்
அனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்க வேண்டுகிறோம்
தொடர்பு கொள்ள: நிர்வாகிகள் சேலம் வரலாற்று ஆய்வு மையம்
பொன்.வெங்கடேசன் : தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம் கைப்பேசி : 9047514844
ஆறகழூர் வெங்கடேசன் பொன்
கலைச்செல்வன் Kalai Selvan துணைத்தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம் கைப்பேசி ;9600925060
மருத்துவர் பொன்னம்பலம் Ponnambalam Chidambaram
செயலாளர் சேலம் வரலாற்று ஆய்வு மையம்
கைபேசி : 9842973322
பெரியார் மன்னன் Periyar Mannan ,இணை செயலாளர்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
கைபேசி : 9600969118
சீனிவாசன் Kaliyappan Srinivasan , பொருளாளர்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
கைபேசி : 8668031749
ஜீவநாராயணன் Jeevanarayanan Selvakumar இணை பொருளாளர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
பெருமாள் Perumal Madhu Navin. செயற்குழு உறுப்பினர்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
கைபேசி ; 70946 11012
வீரமணி அய்யா Veeramani Veeraswami செயற்குழு உறுப்பினர்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
99767 61603
தீபக் ஆதி தீபக் ஆதீ செயற்குழு உறுப்பினர்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
86954 02642
நம் மையத்தின் ஆலோசகர் திரு Chennai Sevas Pandian
நன்றி