ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 1. ஜினாலய கல்வெட்டு
2016 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.ஆறகழூர் வெங்கடேசன் பொன் Mangai Ragavan சி.வீரராகவன் சார்
ஆறகழூர் பகுதியில் முதன் முதலில் 2015ல் நான் கண்டறிந்த முதல் கல்வெட்டு இதுவாகும்.
1.1. ஆறகழூர் ஜினாலய கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
சி.வீரராகவன்
வீ.மங்கையர்கரசி ராகவன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கோட்டைகரைக்கு அருகே கலியன் என்பவரின் வயலுக்கு அருகே

காலம்: பொன்பரப்பின பெருமாள் ,வாணகோவரையன் ,13ஆம் நூற்றாண்டு
செய்தி:
பொன்பரப்பின பெருமாள், மற்றும்
பொன்பரப்பின பெருமாள், மற்றும்
நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் இங்கு ஒரு
ஸ்ரீகோயில் ஜிநாலயத்தையும், நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளி
என்ற சமணப்பள்ளியையும் பராமரித்ததை குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டில் குறியீடுகள் காணப்படுகின்றன
பூமாதேவி அல்லது சமண உருவம்,இருபுறமும் சாமரம்,கண்ணாடி காட்டப்பட்டுள்ளது, ஏர்கலப்பை,உடுக்கை,சுத்தியல்,கொரடு, குறுவாள், குத்து விளக்கு காணப்படுகிறது. முக்காலியின் மீது பூர்ணகும்பமும் அதன் மேல் அம்புக்குறி அல்லது மீன் போன்ற ஒன்றிலிருந்து ஓர் உருவம் வருவதை போல் உள்ளது..இது ஆய்வுக்கு உரிய ஒன்றாகும் .இந்த ஜிநாலயத்தில் இருந்த ஒரு உலோக தீர்தங்கரர் சிலையும்,ஒரு வெள்ளைக்கல்லால் ஆன சமண அருகர் சிலையும், ஒரு உலோக சமண யட்ஷி சிலையும் இன்றும் ஆறகழூர் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.

கல்வெட்டு பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ இந்த
1. ஸ்வஸ்திஸ்ரீ இந்த
2 ..ஸ்ரீகொயில் பொன்
3. .பரப்பின பெருமாள்
4. .ஜிநாலயமான
5. .நாற்பத்தெண்ணா
6. .யிரப் பெரும்பள்ளி
7. நாற்பத்தெண்ணா
8. யிரவர் ரக்ஷை
8. யிரவர் ரக்ஷை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக