வியாழன், 4 ஜூன், 2015
அம்மாயிரம்மன் எருமை கிடா பலி நிகழ்சி
லேபிள்கள்:
அம்பாயிரம்மன்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
தேர்,
பெரியேரி,
ambayiramman,
aragalur,
periyeri,
theer
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்
தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்
இது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் பழங்கால எல்லைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல உள்ளது. அப்பொழுது ÷ காயில்களின் நிலங்களுக்காக எல்லைக்கல் நடப்பட்டது. குலப்பிரமாணம் என்ற அளவை முறை மட்டும் அப்பொழுதிருந்ததால் நான்கெல்லைகளாக நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், தோப்பு, ஆறு ஆகியவைகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் குழிக்கல், குத்துக்கல், எல்லைக்கல், சக்கரக்கல் ஆகியவைகளும் ஆலமரம், புளியமரம், பழைய கோட்டை, மக்களது பயன்பாட்டிலிருந்த பெரு வழிகள் ஆகியவைகளும் இந்த எல்லைகளாக இடம் பெற்றுள்ளன.
தேனி மாவட்டம் அ.வாடிப்பட்டி மற்றும் முதலக்கம்பட்டியை ஆண்ட குறுநில மன்னர்கள் தங்கள் பெயர் பொறித்த கல்லை அவர்களுடைய எல்லையில் நட்டு வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் அருகே உள்ள கந்தர்வக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண் கொண்ட மைல் கல் லும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிநாயக்கன்பட்டியில் தமிழ் மற்றும் அரபி எண் கொண்ட மைல் கல்லும் கண்டுபிடித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மைல்கற்கள் 18 ஆம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை குறிக்கிறது. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைப் பகுதியில் தமிழ், ரோமன் மற்றும் அரபி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது.
.
லேபிள்கள்:
அருங்காட்சியகம்,
சேலம்,
தமிழ் எழுத்து,
மைல் கல்,
mail kal,
muciyam,
salem,
tamil
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
சனி, 30 மே, 2015
இந்த கல் சொல்லும் செய்தி என்ன..?
இந்த கல் சொல் சொல்லும் செய்தி என்ன..?
-------------------------------------------------------------------------ஆறகழூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் உள்ளது இது...சின்ன வயசில் இருந்து இதை பார்த்திருந்தாலும் கூட கவனமாய் பார்த்ததில்லை...இப்ப சற்று கவனித்து பார்த்த போது சில வீரர்களின் உருவங்கள் தெரிகிறது..
ஆவுடையார் இல்லாத பாணம்??/ போன்ற தோற்றமுடன் உள்ளது .எழுத்துக்கள் ஏதும் இல்லை...இது சாதாரண கல்தானா..?அல்லது இதில் சிறப்பான வரலாறு ஏதேனும் இருக்க கூடுமா..? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
நாயக்கர் காலம்,
பலிகல்,
மாரியம்மன்,
aragalur,
mariyamman,
palikal
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
வெள்ளி, 29 மே, 2015
அம்பாயிரம்மன் தேர் திருவிழா-பெரியேரி.
ஒவ்வொரு கிராமங்களிலும் துர்கை வழிபாடு பழங்காலங்களில் சிறப்பாகவே நடைபெற்று வந்துள்ளது
ஊருக்கு ஊர் பெயர் மாறினாலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது...ஆறகழூர் துர்க்கையின் பெயர் அம்பாயிரம்மன்..எதிரியின் மீது ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்ததால் அம்பாயிரம்மன் என பெயர் பெற்றதாய் வாய் வழி செய்திகள் தெரிவிக்கின்றன..
ஆறகழூர் பெரியேரி இரண்டும் ஒரே ஊராய் இருந்த போது கட்டப்பட்டதால் இரண்டு ஊருக்கும் பொதுவானதாய் இருந்து வருகிறது..பூசாரிகளும் இரு ஊரை சார்ந்தவர்களே...திருவிழா முற்காலத்தில் ஒன்றாகவும்..சில நூற்றாண்டுகளாய் தனித்தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது....
தேர் முடிந்து மறு நாள் துர்க்கைக்கு ஒரு எருமை கிடா பலி கொடுக்கப்படும்...இரு ஊரை சார்ந்தவர்களும் தங்கள் கொடுவாளால் வெட்டுவார்கள்..
தேருக்கு ஒரு வாரம் முன் கடவுள் சிலைகளை ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்து வாங்கி செல்ல பெரியேரி மக்கள் மேளதாளம் பல்லாக்கோடு வந்து வாங்கி சென்று தங்கள் ஊரில் உள்ள கோவிலில் வைத்து வழிபடுவார்கள்..அந்த நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு..
ஜீன் 2ம் தேதி 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரி கிராமத்தின் சார்பில் தேர்திருவிழா நடைபெற உள்ளது..
.15 ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.காமநாதன் முதலியார் தலையில் ஆறகழூரின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடைபெற்றது. அப்போது எருமை குளத்தின் அருகே வெட்டப்பட்டது...இப்போது 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரியின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடத்தப்படுகிறது
லேபிள்கள்:
அம்பாயிரம்மன்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
தேர்,
பெரியேரி,
ambayiramman,
aragalur,
periyeri,
theer
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஆறகழூர் -அடையாளம் தெரியாத சிலை
ஆறகழூரில் உள்ள அடையாளம் தெரியாத சிலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் அருகே உள்ள தேர்நிலை(தேர்முட்டி)யின் முன்பு அகழியின் ஓரம் உள்ள சிலை து..இது பல்லவர் காலமாக இருக்கக்கூடும்.இந்த சிலை யாராக இருக்கும் என பல்வேறு கோணங்களில் விசாரித்தும் சரியான முடிவு கிட்டவில்லை... சண்டிகேஸ்வரர்(அ),அய்யனார்(அ)சமண சாத்தன் சிலையாக இருக்ககூடும் என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன
லேபிள்கள்:
அய்யனார்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
சண்டிகேஸ்வரர்,
சமண சிற்பம்,
aragalur,
ayyanar,
jain saththan,
sandikeswarar
ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்
ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்
மகதைக்கு பெருவழி காஞ்சிபுரம் -என்ற எழுத்துள்ள கல்லில் எழுத்தின் கீழே மொத்தம் 16 குழிகள் உள்ளன.ஒவ்வொரு குழியும் 10 காதத்தைக் குறிக்கும் அதியமான் பெருவழிக் கல்வெட்டில் உள்ளபடி.எனவே இக்கல்வெட்டில் காணப்படும் குழிகள் காஞ்சிபுரத்திற்கு 160 காதம் தூரம் என்பதைக் குறிக்கின்றன.
ஒவ்வொரு குழியும் ஒரு காதம் என்றும் கொள்ளலாம். ஒன்றுக்கும் பத்துக்கும் வித்தியாசப் படுத்த அதியமான் பெருவழிக் கல்வெட்டில் பத்து என்பதைக்குறிக்க பெரிய குழிகளைக் காட்டியிருந்தனர்.
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
மகதை பெருவழி கல்,
மைல் கல்,
aragalur,
inscription,
mail kal,
makathai peruvazhi kal
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள-ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு
ஆறகழூர் கோட்டைகரையை தாண்டி அகழியின் அருகே இந்த கல் உள்ளது.நீண்ட காலமாக இந்த கல் பற்றி அறியப்படாமல் இருந்தது..இதன் புகைப்படத்தை நான் முகநூலில் இட்டு கேட்டபோது தொல்லியல் அறிஞர்கள் இது வணிக குழுவின் கல்வெட்டு எனவும் 13 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனவும் தெரிவித்தனர்..இந்த கல்லில் இன்னும் ஆராய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன..
இந்த கல்லானது முக்கால் வாசி பூமியின் மேலும் கால் வாசி பூமிக்கு அடியிலும் இருப்பதை போல் தோன்றுகிறது.வெளியில் காணப்படும் பகுதியில் கல்வெட்டு ஏதும் காணப்படவில்லை...முன்பு ஒரு முறை இதை பதிந்து கேட்டபோது திரு Sankara Narayanan G அவர்கள் இதில் மங்கல பொருட்கள் இருக்கின்றன..வணிக கல்வெட்டாக இருக்கும் என்று கூறினார்..?வணிக கல்வெட்டுக்கு என தனி அடையாளம் (இலக்கணம்) உள்ளதா..?இந்த வணிக கல்வெட்டுக்களின் நோக்கம் என்ன..? எங்கள் மகதை தேசன் 11ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து 13ஆம் நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்தது..வணிகர்கள் மற்றும் வழிபோக்கர்களுக்கு வழிகாட்ட மகதை பெருவழிக்கல் காஞ்சிபுரம் என்ற மைல்கல் எங்கள் காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்தது..இப்போது அது அருங்காட்சியகத்தில் உள்ளது....இந்த வணிககல் அப்போது கோட்டை இருந்த இடத்தில் இப்போது வயல்வெளியாக உள்ள இடத்தில் உள்ளது..
இந்த வணிகக் கல்வெட்டுகளெல்லாம் அந்தக் காலத்தில் குழுவாக வணிகம் செய்வோர் போகும் போது
அங்காங்கே தங்கியே செல்ல வேண்டியதிருந்தது,அப்போது ஆங்க்காங்கே இருக்கின்ற அரசியல் தலைகளுக்குட்பட்டே வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது, அந்த நிலையையும்,சில பிரச்சினைகளையும் தீர்த்தாற்பொருட்டே இந்த கல்வெட்டுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















