அய்யனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்யனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூன், 2017

அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.














சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான அதிகாரிகள், அய்யனார் சிலையை, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, தொல்பொருள் ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் வசிஷ்ட நதியில் கண்டெடுக்கப்பட்டது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை. மனைவியர் இன்றி தனிச்சிற்பமாகவும், கழுத்து, கை, காது உள்பட உடல் பகுதியில் அதிக அளவில் ஆபரணம் உள்ளது. கையில் செங்கோல், பெரிய ஜடாபாரம் (தலையில் உள்ள முடி), இடது கால் மடக்கியும், வலது கால் தொங்கவிட்டபடி, சிலை நேர்த்தியாக உள்ளது. இச்சிலையை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

வெள்ளி, 29 மே, 2015

ஆறகழூர் -அடையாளம் தெரியாத சிலை


ஆறகழூரில் உள்ள அடையாளம் தெரியாத சிலை


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் அருகே உள்ள தேர்நிலை(தேர்முட்டி)யின் முன்பு அகழியின் ஓரம் உள்ள சிலை து..இது பல்லவர் காலமாக இருக்கக்கூடும்.இந்த சிலை யாராக இருக்கும் என பல்வேறு கோணங்களில் விசாரித்தும் சரியான முடிவு கிட்டவில்லை... சண்டிகேஸ்வரர்(அ),அய்யனார்(அ)சமண சாத்தன் சிலையாக இருக்ககூடும் என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன

ஆறகழூர் சதிக்கல்-நடுகல்


ஆறகழூர் சதிக்கல்-நடுகல்


ஆறகழூர் அய்யனார் கோவில் அருகே உள்ள விளைநிலத்தில் இருந்த இந்த சதிகல் இப்போது அய்யனார் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது..
     இவர் ஒரு சிறந்த வீரனாய் இருக்க கூடும்

வியாழன், 14 மே, 2015

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அய்யனார் கோவிலில் கொத்தர் குலம் ...





சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அய்யனார் கோவிலில் கொத்தர் குலம் சார்பில் பொங்கல் வைத்தபோது மடிப்பாளையம் கொடுத்த காணொளி காட்சி

https://www.youtube.com/watch?v=IsE_IShUOiM

அய்யனார் பொங்கல்



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அய்யனார் கோவிலில் கொத்தர் குலம் சார்பில் பொங்கல் வைத்தபோது

aragalur-ஆறகழூர் அய்யனார் கோவில் பொங்கல்





சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் கோட்டக்கரை கொத்தன் குலம் சார்பாக அய்யனாருக்கு பொங்கல் வைத்த போது

திங்கள், 11 மே, 2015

aragalur-ஆறகழூர் அய்யனார் கோயில் பூசை ஊர்வலம்




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அய்யனார் கோயிலில் கோட்டைக்கரை கொத்தன் குலம் சார்பாக பொங்கல் வைக்கும் நிகழ்வு கானொளி காட்சி 1