திங்கள், 10 பிப்ரவரி, 2014

இதுவரை ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்கள்..மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்..

சாந்தி துளசிதாஸ் தற்போதைய தலைவர்ஆறகழூர் வரலாறு..

முத்தம்பாயிரம் என்கிற பிச்சபிள்ளை (பொறுப்பு தலைவராக இருந்தவர்)...

------------------------------------

ஆறகழூர் வரலாற்றை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை...அந்த வகையில் ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்களை புகைப்படத்துடன் பதிய ஆசை ஒருவரின் படம் மட்டும் கிடைக்கவில்லை..அதையும் விரையில் படம் எடுக்கிறேன்....

--------------------------------------------------------------------------------------------

இதுவரை ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்கள்..மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்..

-----------------------------------------------------------------------------

1.சிதம்பர பண்டாரம்

2.எம்.காமநாத மூப்பர்(முதலியார்)

3.அம்பாயிரம் முதலியார்(3 முறை)

4.எஸ்.வையாபுரி மூப்பர் முதலியார் (தீபாவளி மணியகாரர்)

5.டி.சி.காமநாநாத முதலியார்(2 முறை)

5.ஏ.ஆர்.பெரியசாமி முதலியார் ஆசிரியர்

6.ராமலிங்கம் முதலியார்

7.சுமதி கொளஞ்சி முதலியார்

8.சாந்தி துளசிதாஸ்..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இறந்ததால் இடைக்கால ஊராட்சி தலைவராக செயல்பட்டவர்

1.முத்தம்பாயிரம் என்கிற பிச்சப்பிள்ளை...

சாந்தி துளசிதாஸ்..சிறு வயதில் என் மாணவியாக இருந்தவர் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர்...குடி நீர் ,சாலை வசதி, மற்றும்
பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்...


சுமதி கொளஞ்சி...என் வகுப்பு தோழன் கொளஞ்சியின் மனைவி..சென்ற 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவியாக பதவி
வகித்துள்ளார்..ஆறகழூர் ஊராட்சியின் முதல் பெண் தலைவர்..
.



ராமலிங்கம்..இன்னமும் ஆறகழூர் மக்களுக்காக சிறப்பாக சேவை செய்கிறார்..காமநாதீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டியின் தலைவராக

உள்ளார்..5 வருடம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்..



ஏ.ஆர்.பெரியசாமி ஆசிரியர் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து பணி ஓய்வுக்கு பின் ஆறகழூர் ஊராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.



டி.சி காமநாதன்....கிராம நிர்வாக அலுவலராய் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார்...ஊருக்கு இவர் செய்த சேவை அளப்பரியது..என் திருமணம் கூட இவர் தலைமையில்தான் நடந்தது



வையாபுரி முதலியார்(தீவாளி மணியகாரர்) ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவராய் இருந்தவர் தன் பதவி காலத்திலே இயற்கை எய்தினார்..



அம்பாயிரம் முதலியார்..
--------------------------
------------------------மூன்று முறை ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவராய் பதவி வகித்தவர்...ஊருக்கு பல சேவைகள் செய்துள்ளார்





எம்.காமநாத மூப்பர்..ஊராட்சி மன்ற தலைவர்

காமநாத மூப்பர்..----------------------
--------------------------
--அடிகளாசிரியர் தொகுத்த காமநாத கோவை என்ற நூலை பதிப்பித்தவர்.

1 கருத்து: