ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சேலத்தில் அம்மாப்பேட்டை பழனியாண்டி முதலியார் மருத்துவமனை அருகில் உள்ள குத்துக்கல்


சேலம் அம்மாபேட்டையில் 20ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக்கல்


சேலத்தில் அம்மாப்பேட்டை பழனியாண்டி முதலியார் மருத்துவமனை அருகில் உள்ள குத்துக்கல் இது .கடந்த 20 ஆண்டுகளாக இதை நான் பார்த்து வந்திருந்தாலும் இது குத்துக்கல் என தெரியவில்லை.....

தற்போது வரலாற்று தொல்லியல் ஆர்வம் வந்த பின் இது குத்துக்கல் என தோன்றியது..இந்தக்கல் ரோட்டின் ஓரம் முனியப்பன் என்ற பெயரில் இன்றும் வழிபாட்டில் உள்ளது ஒரு பெரியகல்,அதன் அருகே ஒரு சிறிய கல் என 2 கற்கள் உண்டு..
நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் போது இந்த குத்துக்கல்லை அகற்றும் முயற்சி நடந்தது...ஆனால் வழிபாட்டில் இருந்தால் மக்கள் அகற்ற விடவில்லை..பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் இன்றும் நம் பார்வையில் உள்ளது...
குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என்பது பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும்.






கூச்சிக்கல் முனியப்பன் சேலம்

கூச்சிக்கல் முனியப்பன் சேலம்
கூச்சிக்கல் முனியப்பன்
---------------------------------------
சேலம் அம்மாப்பேட்டையில் புகையிலை மண்டி என்ற இடத்திலிருந்து குமரகிரி முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் கூச்சிக்கல் முனியப்பன் என்ற ஒரு கோவில் உள்ளது…
பழனியாண்டி முதலியார் மருத்துவமனை அருகே ஒரு குத்துக்கல் இருப்பதை பற்றி மச்சான் ஆசிரியர் மயில்வாகனிடம் சொல்லியபோது அவரும் என் மாமியாரும்(தலைமை ஆசிரியை ஓய்வு) இந்த கூச்சிக்கல் முனியப்பன் பத்தி சொன்னாங்க…
குத்துக்கல் என்ற பெயர் மருவி இன்று கூச்சிக்கல் முனியப்பன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது…
இந்த குத்துக்கல் வரலாற்று காலத்துக்கு முற்பட்டது..இப்போது ஒரு அரச மரத்தின் அடியில் மக்கள் கேட் போட்டு பாதுகாப்பாய் வைத்துள்ளனர்






ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு.....

ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு.....
ஓராண்டுக்கு முன் என்னவென்றே தெரியாமல் இந்த கல்வெட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டேன்....
பேராசிரியர் கல்வெட்டு ஆய்வாளர் திரு இராஜகோபால் அய்யா அவர்கள் இதை சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு என உறுதி செய்துள்ளார்.....
வணிக குழு கல்வெட்டு என்றால் என்ன..?(தெரியாதவர்களுக்காக)

--------------------------------------------------
இடைக்கால தென்னிந்தியாவில் பல்வேறு தொழிற்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியர் என்ற பட்டு வணிகர்கள், நாட்டுச்செட்டி போன்றோர் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியர், திருப்பத்தூர் பகுதியில் ஐநூற்றுவர் ஆகிய வணிகப் பிரிவினர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை ஏராளமாகக் கிடைக்கின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பிரான்மலை (இராமநாதபுரம் மாவட்டம்), சர்க்கார் பெரியபாளையம், கொங்குநாட்டான் புதூர் (பொள்ளாச்சி) ஆகிய ஊர்களில் தென்னிந்தியா முழுவதும் இருந்து வந்த வணிகக் குழுவினர் வெட்டி வைத்த கல்வெட்டுகள் உள்ளன.
சித்திரமேழி பெரிய நாட்டார் சிற்பம். மேழி என்பது கலப்பையைக் குறிக்கும். சித்திரமேழி = அழகிய கலப்பை. நாட்டார் என்னும் உழவர் குடியினர் பலர் தங்களுக்குள் ஒரு குழும அமைப்பை ஏற்படுத்தி அதை பெரிய நாடு, பேரிளமை நாடு என்ற பெயரில் முன்னிருத்தினர். இது 11ஆம் நூ.ஆ அளவில் தொடங்கியது. பின்னர் வணிகர் ,கம்மாளர்களும் இதனில் இணைந்தனர். இவர்கள் தங்களைப் பூமி புத்திரர் என்று அழைத்துக் கொண்டனர். சித்திரமேழியைத்ம் தெய்வமாகவும் கொண்டு வழிபட்டனர்.இச்சிற்பத்தில் பூதேவி சாமரங்கள் இடையே காட்டப்பட்டு கண்ணாடி,கலப்பை,மேழி,குத்துவிளக்குகள்,சம்மட்டி, சுத்தியல்,குறடு , முக்கலி மீது பூர்ண கும்பம் ஆகியவையும் உள்ளன. கும்பத்திலிருந்து வெளிவரும் தெய்வம் ஆய்வு செய்யப்படவேண்டும்
தென்னிந்திய வணிக குழுக்கள் மட்டுமே அரசர்களைப்போல தனக்கென ஒரு படையை வைத்துக்கொள்ளவும், தனியாக கல்வெட்டுக்கள் பொறித்துக்கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனர்
           இக்கல்வெட்டை பொறித்த சித்திரமேழி வணிகக் குழுவினர், கி.பி., 11 முதல் கி.பி., 13 வரை புகழ் பெற்று விளங்கினர். எட்டு திசைகளிலும் வணிகம் செய்த குழு, அரசர்களுக்கு இணையாக ஊர் பஞ்சாயத்து செய்யவும், கல்வெட்டு பொறிக்கவும் உரிமை பெற்றிருந்தது.




வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி


கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கல் முதுமக்கள் தாழி

---------------------------------------------------------------------------------------------
பழங்காலத்தில் இருந்தே மனிதனுக்கு இறப்பின் மீது மிகுந்த பயம் இருந்தது...நாம் இறந்த பின் என்ன ஆவோம் என்ற கேள்வி அவன் முன் பெரிய கேள்விக்குறியாய் நின்றது....
இறந்த பின்னும் ஒரு வாழ்கை இருக்ககூடும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது..இறந்த உடல்களை பாதுகாப்பாய் வைக்க எண்ணினர்..
எகிப்தில் பிரமீடுகள் கட்டினர்
நம் தமிழ் முன்னோர்கள்..இறந்தோரின் உடலை
கல்படை,கல்வட்டம்,கல்குவை,கல்திட்டை,குத்துக்கள் முதுமக்கள் தாழி போன்றவை மூலம் பாதுகாத்து அந்த இடத்தை அடையாளப்படுத்த முயன்றனர்..அது பற்றிய ஒரு பார்வை...தகவல்கள் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
சாட்சி – 1
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒரு வகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
அப்பதுக்கைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு உணவுப்பொருட்கள் சிலவும் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருந்தனர். அகழ்வாய்வின் வழியாக அப்பதுக்கைகளுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கார்பன் டேட்டிங் (C14) பரிசோதனை செய்ததில், அவற்றின் காலம் ஏறத்தாழ பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியமுடிந்தது. இப்பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் புறநானூறு – 3, அகநானூறு – 109, கலித்தொகை – 12 ஆகிய சங்க இலக்கியச் செய்யுள் அடிகளில் காணப்படுகின்றன.
சாட்சி – 2
பதுக்கைகள் பெருகியபின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும் போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நெடுகல் பற்றிய செய்திகளைப் புறநானூறு – 264, அகநானூறு – 269, 289 ஆகிய செய்யுள் அடிகள் தெரிவிக்கின்றன.
சாட்சி – 3
இறந்தோரைப் புதைத்த இடத்தில் அவரது உருவத்தையும் அவரின் சிறப்பையும் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோடு அகன்ற கல்லில் அவரது உருவினைச் சிற்பமாகச் செதுக்கியும் அவரின் சிறப்பினைத் ‘தமிழி’ எழுத்தில் எழுதியும் வைத்துள்ளனர். அக்கல்லுக்கு நடுகல் என்று பெயர். இதற்கு நினைவுக்கல் என்ற பொதுப்பெயர் உண்டு. குத்துக்கல் என்றும் சுட்டுகின்றனர். இறந்தோர் வீரராக இருந்தால் இக்கல்லுக்கு வீரக்கல், வீரன்கல் என்றும் பெயரிட்டனர்.
நடுகல் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு – 221,223,232,335 அகநானூறு – 53,67,179, ஐங்குறுநூறு – 352, மலைபடுகடாம் – 386-389 ஆகிய செய்யுள் அடிகளில் காணமுடிகின்றது. நடுகல்லினைச் சிறுதெய்வமாகவும் வழிபட்டுள்ளனர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும் சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தாதப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகல்லும் ஏறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததே.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
சாட்சி – 4
இறந்தோரை ஒரு பெரிய பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அந்தப் பெரிய பானைக்குத் தாழி என்று பெயர். அத்தாழிக்குள் இறந்தோரை அமர்ந்த நிலையிலோ அல்லது குத்தவைத்த நிலையிலோ வைத்துப் புதைத்துள்ளனர். அகழ்வாய்வில் பெரும்பான்மையாக இத்தாழிக்குள் இறந்தோரின் எலும்புகளும் அணி, மணிகள் சிலவும் தானியத் துகள்களும் கிடைத்துள்ளன.
மிக அண்மையில், மதுரை அருகே அயன்பாப்பாக்குடி பகுதியில் உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக்கண்மாய் ஓடையின் வடிநிலப்பகுதி, கூடல்செங்குளம் மேட்டுப்பகுதி ஆகிய மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் தொல்பழங்காலப் புதைமேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் பல புதைக்கப்பட்டுள்ளன. இவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.





புதன், 19 ஆகஸ்ட், 2015

ஆறகளூர் பள்ளியில் விபத்து


ஆறகழூர் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளிக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து நுழைந்தது மாணவ மாணவிகள் காயம்







அழியும் வரலாறு

என்னத்த சொல்ல மக்களின் மூட நம்பிக்கைக்கு அளவே இல்லாம போச்சு......

------------------------------------------------------------------
வழக்கம் போல் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம்..அன்ணே உங்க ஏரியாவில் ஏதாவது கல்வெட்டு பழைய சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்...
அவர் காடு,இருப்பிடம் எங்க ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் புளியங்குறிச்சி தாண்டி அய்யனார் பாளையம் பாரஸ்டுக்கு பக்கமா இருக்கு.....
அவர் எனக்கு நல்ல பழக்கம்...கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னார்....நீ கேட்பதால் இதை சொல்லுறேன்...வேறு யார் கேட்டிருந்தாலும் இதை சொல்லியிருக்க மாட்டேன் என சொல்ல துவங்கினார்...
ஒரு 40 வருசத்துக்கு முன்னாடி எங்க காட்டு பக்கம் ஒரு 6 சிலைக்கு பக்கமா காட்டுக்குள் இருந்திச்சி...அப்ப ஒரு சமயம் மழை இல்லாமா ரொம்ப வறட்சியா இருந்திச்சி....அப்ப சிலர் ..இந்த சிலை காட்டுக்குள் இருப்பதால்தான் மழை பெய்யலன்னு சொல்லிட்டு இருந்தாங்க....
இதை மூக்கறு சிலைன்னும் சொன்னாங்க...
ஒரு கட்டத்தில் மழை இல்லாமல் ரொம்ப வறட்சி வந்தபோது நாங்க அந்த சிலையை புடுங்கி ஒரு சாக்கில் வைத்து கட்டி...சின்னசேலம் போய்..அங்கு வந்த ரயிலிலில் உள்ள பெட்டியில் அந்த சிலைகளை போட்டுவிட்டு வந்திட்டோம் என சொன்னார்.......
என்னத்த சொல்ல எப்படி எப்படியோ அழியுது நம்ம வரலாறு.. frown உணர்ச்சிலை
— பிரிந்ததுபோல உணர்கிறார்.

ஆறகளூர் மகதை தேசத்து சதி கல்










---------------------------------------------------------

இன்னிக்கி வாழ்கையில் ரொம்ப மகிழ்சியான நாள்..கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் உங்க வீட்டு பக்கம் ஏதாவது பழைய கல்லில் எழுத்து அல்லது சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்..கொஞ்சம் யோசித்து விட்டு எங்க காட்டுக்கு பக்கத்தில் ஒரு குச்சிகாட்டுக்குள் ஒரு சிலை இருக்குன்னு சொன்னார்..இன்னிக்கி காலையில் எழுந்தவுடன் முதல் வேலையா அந்த காட்டை நோக்கி ஓடினேன்..அரைமணி நேர தேடலுக்கு பின் அந்த இடத்தை கண்டுபிடித்தேன்...வசிஷ்டநதியின் ஓரத்தில் ஒரு கிழங்கு குச்சி காட்டின் நடுவே கணவனும் மனைவியும் த
ம்பதி சமயதராய் என்னை பாத்து சிரித்தார்கள்.ஏண்டா பேராண்டி எங்களை பாக்க வர உனக்கு இவ்வளோ வருசமாச்சா..? நம்ம மகதை தேசத்துக்கு நான் செய்த பணியை சொல்லுடா என சொல்லாமல் சொன்னார்...என் புருசன் போன பின்னடி நான் வாழ்ந்து என்ன சாதிக்க போறன்னு அவரோடையே போயிடலான்னு அவர் கூடவே போயிட்டேன் என்று சொன்ன மாதிரி தோணுச்சி..
ஆடை அணிகலன்களை பாக்கும் போது உயர்ந்த பொறுப்பில் இருந்த போர்படை தளபதி ,செல்வந்தர் மாதிரி தோணுது....
இது நடுகல்லா அல்லது சதி கல்லா????

இது சதிகல்தான் என உறுதிபடுகிறது..