மிக மிக அருமையான தகவல் குறிப்பாய் வாணர்கள் பெருமை சொல்லும் கல்வெட்டு
Grantha Inscription
The beautiful Naasi koodu of thachchur holds a grantha inscription in it which is the only document that helps to identify the period & name of the temple. Thanks toSankara Narayanan G sir for sharing his Interpretation through a comment earlier in this group. Also i thank French institute of Pondicherry for making this Inscription readable, during their recent field work 2 months ago.
Sanskrit Interpretation:
(Line 1) श्री विष्णोर्बाणकुलाधिपस्य तनया भर्त्तुः पुरोधापतेः(?)
(Line 2) भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
(Line 3) पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते
(Line 4) सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)
(Line 2) भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
(Line 3) पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते
(Line 4) सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)
English Interpretation:
(Line 1) Śrī Viṣhṇor-Bāṇa-kulādhipasya tanayā Bhartuḥ purodhāpateḥ (?)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)
English Translation:
Śrī. May Lord Śambhu (Siva), dwell for a long time (Ciram Tiṣṭhatu) with his divine presence (Sānnidhyena) in the Dayāvakeśvara-Gṛha, built by queen (Devi) of highest chastity (Pativratā), gloried like the daughter of Himavān (Pārvatī), daughter of the king (Bhūnātha), of Bāṇa race of Viṣṇu, who was the leader of Brahmins (or of leaders) due to excess of good qualities in her.
Courtesy: @Sankara Narayanan G
#தச்சூர்_நாசிக்கூடு: கிரந்தக் கல்வெட்டு
தச்சூர் சிற்பங்களுடன் காணப்படும் நாசிக்கூட்டில், யானையின் தலைமேல் காணப்படுகிறது ஒரு கிரந்தக் கல்வெட்டு (சமஸ்கிரத மொழியின் எழுத்து உருவங்களுக்கு கிரந்தம் என்று பெயர்). இன்றைய நிலையில், தச்சூர் சிவன் கோவிலின் பழங்கால கோவில் கட்டுமானம் இல்லாமையால், இக்கோவில் இறைவனின் பெயர், கட்டுவித்தவர் பெயர் மற்றும் அதன் காலத்தை தெளிவுப் பெறக் கூறும் ஒரே ஆவணம் இக்கல்வெட்டு மட்டும் தான். மேலும் இக்கல்வெட்டினை படிக்கக் கூடிய வகையில் சுத்தம் செய்து பொலிவுடன் விளங்கச் செய்த "பிரெஞ்ச்சு இன்ஸ்ட்டிட்யூட்டின் தொல்லியல் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.
இக்கல்வெட்டு மூலம் இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் "தயாவகேஸ்வரர்" என்றும் கோவிலின் பெயர் "தயாவகேஸ்வர கிருஹம்" என்பதும் இதனைக் கட்டுவித்தவர் விஷ்ணு எனும் வாணர் குல அரசனின் மகள் என்ற முக்கிய தகவல்களைத் தருகிறது. இதனைப் படித்தறிய திரு.@Sankara Narayanan G அவர்களின் சமஸ்கிரத, ஆங்கில விளக்கத்தையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் மேலே கொடுத்துள்ளேன்.
இருப்பினும், இக்கல்வெட்டின் தமிழ் விளக்கமும், அதன் தமிழாக்கமும் தஞ்சை தமிழகத் தொல்லியல் கழகத்தின் 2009ம் ஆண்டு "ஆவணம்" இதழில் (இதழ்-20) புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ட்டிட்யூடை சேர்ந்த திரு. விசயவேணுகோபால் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இக்கட்டுரை, "புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியின் இயக்குனர் திரு.டொமினிக் குடால் அவர்களின் ஆங்கில மொழிபெயற்ப்பின் தமிழாக்கம்" என்ற அடிக்குறிப்பைக் கொண்டுள்ளது.
தமிழ் விளக்கம்:
வரி-1: ஸ்ரீ விஷ்ணோர் பா3ணகுலாதி4 பஸ்ய தநயா ப4(ர்)த்து ரொத4ஹ்பதே(ர்)
வரி-2: பூ4நாத2ஸ்ய பதிவ்ரதா ஹிமவதஹ் கந்யெவ த4ந்யா ஸதீ
வரி-3: பூஜ்யா யா பு4வநெ க3ழாத4 கதயா தெ3வ்யா தயா நிர்ம்மிதெ
வரி-4: ஸாந்நித்4 யெந த3யாவகேஸ்2வர க்3ரஹே ஸ2ம்பு4ஸ்2 சிரந் திஸ்ரஷ்ட4து.
வரி-2: பூ4நாத2ஸ்ய பதிவ்ரதா ஹிமவதஹ் கந்யெவ த4ந்யா ஸதீ
வரி-3: பூஜ்யா யா பு4வநெ க3ழாத4 கதயா தெ3வ்யா தயா நிர்ம்மிதெ
வரி-4: ஸாந்நித்4 யெந த3யாவகேஸ்2வர க்3ரஹே ஸ2ம்பு4ஸ்2 சிரந் திஸ்ரஷ்ட4து.
தமிழாக்கம்:
வாண குலத்தலைவன் விஷ்ணுவின் மகள், ஹிமவானின் மகளைப்போல சிறந்தவள், கணவன் ரொத4ய்பதிக்கு(?) ஏற்ற கற்புடை மனைவியால் தன் நற்குணங்கள் மேம்படவும் உலகத்தார் வழிபடவும் கட்டப்பட்ட இத் தயாவகேஸ்வர கோவிலில் ஸம்பு (சிவபெருமான்) நீண்டகாலம் வீற்றிருக்கட்டும்.
ஆதாரம்: "புதிய பல்லவர் கல்வெட்டுகள்", ஆவணம், இதழ்-20, 2009ம் ஆண்டு.
வரலாற்றில் தச்சூர் என்ற பேஸ்புக் பக்கத்தில் அருண்குமார் பங்கஜ் எழுதியது
வரலாற்றில் தச்சூர் என்ற பேஸ்புக் பக்கத்தில் அருண்குமார் பங்கஜ் எழுதியது