kamanatha esvaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kamanatha esvaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 செப்டம்பர், 2016

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் காமநாதகோவை

காமநாதகோவை

சேலம்  மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் திருகாமீசுரமுடையநாயனாரின் புகழை சொல்லும் 12,13 ஆம் நூற்றாண்டை சார்ந்த காமநாத கோவை என்ற பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடியை 1940 ஆம் ஆண்டு வாக்கில் சின்னசேலத்தில் ஒரு மடத்தில் இருந்து பெற்று கூகையூரை சேர்ந்த தமிழ் அறிஞர் திரு அடிகளாசிரியர் அவர்கள் தொகுத்து காமநாத கோவை என்ற நூலை 1947 ஆம்  ஆண்டு ஆறகழூரை சார்ந்த நாட்டர் குடும்பத்தை சார்ந்தகாமநாத மூப்பர்





 மூலம் வெளியிட்டார்....
    கடந்த 2 வருடங்களாக அந்த நூலை நான் தேடி வருகிறேன்...கிடைக்கவில்லை...சில நாட்களுக்கு முன் ஆறகழூரை சார்ந்த சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தில் பணியாற்றும் அண்ணன் ஆறகழூர் மு.கன்ணன் அண்ணா அவர்கள் அதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தார் ..
     நமது குழுவில் உள்ள அய்யா திரு கணேசன் அய்யாவிடமும் அதன் பிரதி இருப்பதாய் அறிந்தேன்...
       காமநாத கோவையை மின் நூல் வடிவில் அனைவரும் அறிந்தால் மகதை மண்டல வரலாறு வெளியாக ஏதுவாகும்
     இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை சொல்லுங்க சான்றோர் பெருமக்களே..

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூர் அம்மன் கோவில் கல்வெட்டு

ஆறகளூர் காமநாதேஸ்வரன் கோவிலில் உள்ள அம்மன் கோவில் கருவறையின் வெளிப்புறம் உள்ள கல்வெட்டு

தம்பிரான்
தோழன் சதா
 சேவை  உ

வியாழன், 4 ஜூன், 2015

வன்நெஞ்சன் நில அளவு கோள்


வன்நெஞ்சன் அளவு கோள் 

--------------++------++++++++++++

இன்றைக்கு நாம் நிலங்களை அளக்க அடி கணக்கை பயன்படுத்துகிறோம். 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரில் வன்நெஞ்சன் என்ற அளவு கோல் பயன்படுத்த ப்பட்டுள்ளது.அது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில் ஆறை நாயகன் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ளது


            இந்த அளவு கோல் என் ஊர் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ளது..இது பற்றி கல்வெட்டிலும் குறிப்பு உள்ளது..கல்வெட்டில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் வன்னெஞ்சன் என்ற அளவு கோலல் அளக்கப்பட்டதாய் சொல்லப்பட்டுள்ளது..எங்கள் ஊரை தலை நகராக கொண்டு ஆண்ட வாண கோவரையர்கள் சோழர்களின் கீழ் குறு நில மன்னர்களாய் இருந்தவர்களே..எங்கள் ஊருக்கு அருகே உள்ள கூகையூர் கோவிலிலும் இதே போன்ற அளவு கோல் செதுக்கப்பட்டுள்ளது

       

       
ஒரு தூணின் மூன்று புறங்களில் இது செதுக்கப்பட்டுள்ளது..



வியாழன், 23 ஏப்ரல், 2015

aragalur-ஆறகளூர் கல்வெட்டுக்கள் எண் 33

கீழ் வரும் இந்த கல்வெட்டில் தேவதானக் குடிமக்களாகத் தந்தோம்------இதன் பொருள் கொஞ்சம் சொல்லுங்க..சார்
-------------------------------------------------------------------------------------------------------------

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33

-------------------------------------------------------------------------------------------------
ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர்
திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்
அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்
காலம்: கி.பி.1287
மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913
செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது..

கல்வெட்டு ;
1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ ர்க் கூற்றத்து ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு

2. ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்

3, டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்
குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 

4. டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)

5. ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்
கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்

6. த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து

புதன், 25 மார்ச், 2015

aragalur-ஆறககழூரில் காமன் பண்டிகை மற்றும் தெரு கூத்து

காமன் பண்டிகை ....நான் சின்ன வயசில் இருக்கும் போது கூத்து பாக்க 
ஊரே திரண்டு வரும்..இரவு சாப்பிட்டுவிட்டு .பாய் தலையணை எல்லாம் எடுத்திட்டு வந்து விடிய விடிய காமன் கதையை கூத்தா பாப்பாங்க..இப்ப எல்லாம் சுருங்கி போயி பெயரளவுக்கு நடக்குது...நேத்து நடந்த கூத்தின் படங்கள்...அர்ஜுனனின் கதையின் ஒரு பகுதியை கூத்தா நடத்தினாங்க...
காமன் பண்டிகையின் கதை
------------------------------------------------
சிவபெருமானின் தவத்தை கலைக்க பார்வதியால் அனுப்பப்பட்ட மன்மதன் என்றழைக்கப்படும் காமதேவன் காமக்கணை தொடுப்பார். இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[4]. இதைக்கண்ட மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார். கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்






aragalur-ஆறகழூர் பைரவர் பூஜை -வரலாறு விளக்கும் பேனர்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்ற போது..

புதன், 18 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கேற்பு


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்றது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொண்டார்கள்....தினத்தந்தி செய்தி


வெள்ளி, 13 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரமுடைய நாயனார்)கோவில் பைரவர் பூசை


இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற உள்ளது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்..
வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்...




திங்கள், 9 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்



கி.பி.1207 ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஆறகழூர் திருக்காமீசுவரமுடைய நாயனார்(காமநாதீஸ்வரர்) கோவில் திருக்கோலம் பூண்டிருந்தது கோவில் எங்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம்..அனைவர் முகத்திலும் அளவில்லா மகிழ்சி...
மன்னர் வாணகோவரையர் மற்றும் சான்றோர்கள் அமர்ந்துள்ளனர்.





ஆறகழூரை சார்ந்த செல்வன் சிவதொண்டன் மாலை மரியாதையோடு அழைத்து வரப்படுகிறார்...மக்கள் கரகோசம் செய்து சிவ தொண்டனை வரவேற்கின்றனர்......
அப்படி என்ன செய்து விட்டார் சிவதொண்டன்.....?
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் ஆகியோருக்கு சிலைகள் செய்து அதை கோவிலின் சுற்றுபிரகாரத்தில் அமைத்து நால்வருக்கும் திருமஞ்சனம்,திருவிளக்கு திருப்பள்ளிதாமம்,மற்றும் கோவில் பூசை செலவினங்களுக்காக 5,000(அய்யாயிரம்)பொற்காசுகளை கொடையாக வழங்கி அதை கோவிலின் கருவூலத்தில் சேர்த்தார்....
அந்த கொண்டாம்தான் இந்த விழா....
எத்தனையோ முறை கோயிலுக்கு சென்றபோதும் கண்ணில் படவில்லை சிவ தொண்டன்......கல்வெட்டுகளில் இதை படித்து விட்டு சிவதொண்டனை தேடினேன்... 808 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆறகழூர் செல்வ சீமான் இன்று என் கண்களுக்கு சிக்கினார்...
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் சிலைகளுக்கு முன்புறம் உள்ள தூணில் அழகு மிளிர நிற்கிறார் சிவ தொண்டன்....
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் பல மன்னர்கள்,அரசிகள் உருவம் தெரிந்த போதும் அவர்கள் யார்..?அவர்கள் பெயரென்ன என்பதை அறிய முடியவில்லை.....ஆனால் சிவ தொண்டன் உருவத்துக்கு மேலே செல்வன் சிவத்தொண்டன் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது.....
800 வருடத்துக்கு முன் எங்கள் ஆறகழூரை சார்ந்த ஒரு முன்னோரின் முகம் பார்த்ததில் மனம் துள்ளி குதிக்கிறது
நீங்கள் காமநாதீஸ்வரர் கோவிலுக்கு வரும் போது இந்த சிவ தொண்டனை கண்டு களியுங்கள்....
அக்காலத்தில் ஒரு பொற்காசு என்பது 100 சோழிய காசுகள்..
சிவதொண்டன் 5,000 பொற்காசுகள் கொடுத்தது அக்காலத்தில் ஆறகழூரின் வளமையையும் செல்வ செல்வ செழிப்பையும் உணர்த்துவதாகவே உள்ளது.....


செவ்வாய், 20 ஜனவரி, 2015

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி7

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி6

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி5

திங்கள், 31 மார்ச், 2014

ஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும்

 Village   ஊர்   Taluk   Year   Insc_No 
1 Adamankottai அதமன்கோட்டை Dharmapuri 1910 200
2 Agaram அகரம் Krishnagiri 1963-64 289
3 Akkaraipatti Pudupalaiyam அக்கரைப்பட்டிப் புதுப்பாளையம் Rasipuram 1985-86 379
4 Alagarmalai Hills அழகர்மலை Rasipuram 1980-81 224
5 Alattur ஆலத்தூர் Rasipuram 1979-80 261
6 Alavaypatti ஆலவாய்ப்பட்டி Rasipuram 1980-81 225
7 Amaragundi அமரகுண்டி Omalur 1955-56 312
8 Ammankoilpatti அம்மன்கோயில்பட்டி Omalur 1979-80 258
9 Ammapalayam அம்மாபாளையம் Salem 1933-34 155
10 Ananthakavundanpalayam அனந்தகவுண்டன்பாளையம் Rasipuram 1929-30 509
11 Aragalur ஆறகலூர் Attur 1913 408
12 Athimuttil அத்திமுட்டில் Dharmapuri 1926 482
13 Attur ஆத்தூர் Attur 1892 1
14 Attur ஆத்தூர் Attur 1913 403
15 Aypalayam ஆய்பாளையம் Rasipuram 1985-86 380
16 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-39 321
17 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-40 366
18 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1965-66 292
19 Buddireddipatti புட்டிரெட்டிப்பட்டி Harur 1905 155
20 Budimatlu புடிமட்லு Hosur 1911 210

ஞாயிறு, 30 மார்ச், 2014

அஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

21-5-2010 முதல் 28-9-2010 வரை;

3-1-2011 முதல் 14-11-2010 வரை

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதில் 15-7-2010 முதல் 28-9-2010 வரை உத்திரட்டாதியில் வக்ரமாக சஞ்சரிப்பார். மீன ராசிநாதன்- ராசிக்கு 11, 12-க்குடையவர் சாரம் பெறுவதால் லாபமும் உண்டாகும்; சுபவிரயங்களும் உண்டாகும். சிலர் வெளியூர்ப் பயணம், வெளியூர் வாசம் போகலாம். குருவின் வக்ரத்தில் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்களைச் சந்திக்க நேரும்.

பரிகாரம்: சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
நக்கீரன் இதழில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5426

செவ்வாய், 18 மார்ச், 2014

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே தியாகனூரில்(2 புத்தர் சிலைகள் உள்ள ஊர்)பெருமாள் கோவில் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு..

----------------------------------------------------------------------------------------------
காலம்: 12 ஆம் நூற்றாண்டு

அரசன்: வாணகோவரையன்

செய்தி:ஆறகளூர் மலை மண்டலப் பெருமாள் கோவில் ஆராதனைக்கும் ,திருப்பணிக்கும் முதலாக,மகத மண்டலத்தை சேர்ந்த தொழுவூரில் வாரப்பற்றாக ஆயிரங்குழி நிலமும் பொன் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திருவிடையாட்டமாக இக்கோவில் ஸ்ரீ வைணவரிடத்தில் கொடுக்கப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------
கல்வெட்டு:

ஸ்வஸ்த்ஸ்ரீ அருளிச் செயல் ஆறகழூர் மலை மண்டலம்

பெருமாள் கோயில் திருப்பதி சிலைஷ்வைற்ற

இந் நாயனார்கு திருவாராதனமும் திருப்

பணிக்கு


உடலாக மகதமண்டலத்துத் தொழுவூர் வராபற்று

   நன்செய் நிலத்திலே பதினெட்டாவது பிசானம்

   முதல்பெற ஆயிரக்குழிபொ

ஸ்வரி உள்ளிட்ட அலைத்தாயங்களும் திருவிடையாட்ட

     இறையிளியாகத் தந்தோம்.இந்நிலங்கைக்

     கொண்டு இந்நாயனார்ளத் திருவா

ராதனமும் திருப்பணியும் நடத்தவும்.  இப்படிக்குத் திரு

      விடையிட்ட இறைஇனியாக சந்திராதித்

       தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பி

       லும்

வெட்டிச்சொல்வாழி  ஆயிரத்துக்கும். இவை

  வாண கோவரையன் எழுத்து .


வியாழன், 20 பிப்ரவரி, 2014

ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....

ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....

---------------------------------------------------------

பழைய பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் ஆறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.....

காமநாத கோவையில் வரும் பாடலிலும்

வினோத ரசமஞ்சரியில் குறிப்பிட்டுள்ள பாடலும்

ஆறை என்றே குறிப்பிடுகிறது..இந்த இரண்டு பாடல்களும் ஆறை நகரின் பெருமையை எடுத்து சொல்கின்றன.....










கூகையூர் அடிகளாசிரியர் தொகுத்த காமநாத கோவையின் பாடலும் பொருளும்.....

”சங்கீன்ற முத்தனைத் தன்னின மென்றேகருதி
அங்கம் குருகணைக்கும் ஆறையே!- எங்கோன்
முருகன் அவதரியா முன்னாளில் காமன்
உருவமுடன் பூசித்த ஊர்.”

இந்த பாடலின் பொருள்..
----------------------------------------------
அன்னங்கள் வாழும் அளவிற்கு நீர்,நில வளம் மிக்க ஊர்,ஆழ்கடல் முத்துக்கள் நீர் நிலைகளில் தோன்றியுள்ளன.அம்முத்துக்களை அன்னங்கள் தம் இனமென்று கருதி அணைத்து சென்றன.இத்தகைய வளமிக்க ஊரே ஆறகழூர்..
இவ்வூரை இப்பாடல் ஆறை என்றே கூறுகிறது...

புலவறாற்று படையில்----வினோத ரச மஞ்சரி என்ற நூலில் வாணர் குல பெருமையையும் ஆறகழூர் பெருமையையும் பேசுகிறது..........அந்த பாடல்.....
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெனது நாமமேது புகழ்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!

இந்த பாடலின் பொருள்..
---------------------------------------------
ஒரு புலவர் வாணர் குல மன்னரிடம் பாடல்கள் பாடி பரிசு பெற எண்ணி நடந்து போய் கொண்டிருக்கிறார் அப்போது அவர் முன் தேரில் அமர்ந்து பொன் பொருளோடு ராஜ கம்பீரமாய் ஒருவர் வருகிறார்..அவரை மன்னன் என எண்ணி புலவர் வணங்குகிறார்..அப்போது தேரில் வந்தவர்..நானும் உம்மைபோல் ஒரு புலவன்தான் ஆறை நகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்து கொடுத்த செல்வங்கள்தான் இவை ..நீயும் சென்று பரிசை பெற்று கொள் என சொல்லி போகும் வழியின் அடையாளத்தையும் சொல்கிறார்......
மாட மாளிகையும் கூட கோபுரங்களும் நிறைந்திருக்கும் ஆலமரம்,வேப்பமரம் ,பனைமரம் எல்லாம் நிறைந்திருக்கும்
அங்கு அரசர்கள் எல்லாம் வாணபூபதியை காண காத்திருப்பர்....
என்று வழி சொல்லி அனுப்புவர்......
இயல்பாகவே புலவர்கள் தங்களுக்கு உதவியர்களின் பெருமையை மிகைப்படுத்தி பாடுவர் எனினும் அடிப்படை உண்மை மாறாது...........
இத்தகைய பெருமையையும் இயற்கை வளமும் கொண்ட ஆறகழூர் தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமையாததால் சுருங்கி சின்ன கிராமமாய் இருக்கிறது......
இருப்பினும் தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள்......8 பைரவர்களும் ஒரே கோவிலின் உள்ளே உள்ள சிறப்பு பெற்றது காமநாதீஸ்வரர்.













திங்கள், 10 பிப்ரவரி, 2014

500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஆறகழூர் காமநாதீஸ்வரர்






























மீண்டும் ஒரு முறை இன்று 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரில் உள்ள சிற்பங்களை படம் எடுத்தேன்...கடவுள் சிற்பங்களும் உடன் ஆறகழூரை ஆண்ட வாணர்கள்,சோழர்,பாண்டிய,வியயநகர பேரரசர்கள்,கெட்டி முதலி வம்சம் இதில் யோரோ சிலர் சிற்பங்களும் இருக்க கூடும்..ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் ஒன்று தெரிகிறது..தேருக்கு அருகே உள்ள மேடையை 5 வயது முதல் பார்த்து வருகிறேன்.ஆனால் அதன் மீது ஏறி பார்த்ததில்லை இன்று ஏறி பார்த்தேன்..2 சூலாயுதம் வைத்திருக்கிறார்கள்..அந்த படிகளிலும் கூட கல்வெட்டுகள் உள்ளன..கல்வெட்டு படிக்க தெரிந்த நண்பர்களை கூட்டி வந்து இங்கும் கோவிலிலும் உள்ள கல்வெட்டுகளின் பொருளை அறிய வேண்டும்..