vannar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vannar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 23 ஏப்ரல், 2015
aragalur-ஆறகழூர் சோழீசுவரன் மூலவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில்(மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மகதை மண்டல மன்னன் வாணகோவரையன் கட்டிய கோயில்)உள்ள சோழீசுரன் கோயில் மூலவர்
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
சோழீசுவரன்,
வாணகோவரையன்,
aragalur,
soliswaran,
vannar
திங்கள், 17 மார்ச், 2014
பொன் பரப்பின மகதை பெருமான்
ஆறகழூரை
தலைநகராக கொண்டு ஆண்ட பொன்பரப்பின மகதை பெருமான் பற்றி திருவண்ணாமலை
கல்வெட்டுகளில் உள்ளன ..அது பற்றி விக்கிபீடியாவில் உள்ள செய்தி..ஆறகழூர்
காமநாதீஸ்வரன் கோவிலில் உள்ள சிலை இந்த பொன்பரப்பின மகதை பெருமானாகத்தான்
இருக்க கூடும்..
இவருக்கு செம்பை ராச ராச தேவன் என்ற பெயர் இருந்ததாகவும் தெரிகிறது...
-------------------------- -------------------------- -------------------------- ----------------
மகதைப் பெருமாள்
http://ta.wikipedia.org/s/ e0g
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத் தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர் இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.[1]வடநாட்டி லுள்ள
மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று. மகதைப் பெருமாள்
திருவண்ணாமலைக் கோயிலில் பொன் வேய்ந்தான். இவனைப் போற்றும் 22 பாடல்கள்
(வெண்பாக்கள்) திருவண்ணாமலைக் கோயில் சுவரில் கல்வெட்டுகளாக உள்ளன.
அவற்றில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல்.
தாரும் முடியும் முரசும் தமக்குரிய
பாரும் உடன்பெறுவர் பார்வேந்தர் – வீரப்
பெருமாள் மகதேசன் பேர்எழுதித் தத்தம்
திருமார்பில் ஆளோலை செய்து.[2]
இப்பாடல் சொல்லும் செய்தி
தார், முடி, முரசு, ஆளும் நிலம் போன்றவற்றைத்தான் பார்வேந்தர் பெறுவர். மகதை வீரப்பெருமாள் காலத்திலோ இவன் பேரை எழுதிய ஆள்மாலை (ஒன்று) செய்தும் அணிந்துகொள்வர் (மகதைப் பெருமாளோ தன் மார்பில் பலர் எழுதிய ஓலைகளை (விழுப்புண்களை) அணிந்துகொண்டிருக்கிறான் எனினும் அமையும்.)
பார்வேந்தர்கள் மகதேசனை நாடிச்சென்று தார், முடி, முரசு, தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெறுவர். மேலும் மகதேசனுக்கு தாங்கள் அடிமை என தம் மார்பில் ஆளோலை எழுதி அணிவர். என்னும் பொருளிலும் அமையும்.
கருவிநூல்
• மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
மேற்கோள்கள்
1. Jump up ↑ நூ. த. லோகசுந்தரமுதலி,கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1, தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
2. Jump up ↑ http:// www.projectmadurai.org.vt.e du/pm_etexts/utf8/ pmuni0311.html
இவருக்கு செம்பை ராச ராச தேவன் என்ற பெயர் இருந்ததாகவும் தெரிகிறது...
--------------------------
மகதைப் பெருமாள்
http://ta.wikipedia.org/s/
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத் தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர் இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.[1]வடநாட்டி
அவற்றில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல்.
தாரும் முடியும் முரசும் தமக்குரிய
பாரும் உடன்பெறுவர் பார்வேந்தர் – வீரப்
பெருமாள் மகதேசன் பேர்எழுதித் தத்தம்
திருமார்பில் ஆளோலை செய்து.[2]
இப்பாடல் சொல்லும் செய்தி
தார், முடி, முரசு, ஆளும் நிலம் போன்றவற்றைத்தான் பார்வேந்தர் பெறுவர். மகதை வீரப்பெருமாள் காலத்திலோ இவன் பேரை எழுதிய ஆள்மாலை (ஒன்று) செய்தும் அணிந்துகொள்வர் (மகதைப் பெருமாளோ தன் மார்பில் பலர் எழுதிய ஓலைகளை (விழுப்புண்களை) அணிந்துகொண்டிருக்கிறான் எனினும் அமையும்.)
பார்வேந்தர்கள் மகதேசனை நாடிச்சென்று தார், முடி, முரசு, தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெறுவர். மேலும் மகதேசனுக்கு தாங்கள் அடிமை என தம் மார்பில் ஆளோலை எழுதி அணிவர். என்னும் பொருளிலும் அமையும்.
கருவிநூல்
• மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
மேற்கோள்கள்
1. Jump up ↑ நூ. த. லோகசுந்தரமுதலி,கல்வெட்டுப்
2. Jump up ↑ http://
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
பொன்பரப்பின மகதை பெருமான்,
வாணகோவரையன்,
வாணர்,
aragalur,
vanakovaraiyan,
vannar,
y
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
செவ்வாய், 11 மார்ச், 2014
(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..
aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..?
படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது..போரிட்டு வெல்ல முடியாமல் வஞ்சகத்தால் வென்றனர் எமது ஊர் மன்னனை...900 ஆண்டுகள் கழித்து படிக்கும்போதே ரத்தம் கொதித்தால் அந்த காலத்து மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்....ராஜ விசுவாசம் ரொம்ப இருந்திருக்கும் உயிரை துச்சமாய் மதித்து போரிட்டு இருப்பார்கள்....நாம் பிறந்த மண்ணின் மீதுள்ள பாசம் எப்போதும் குறையாது.....
-------------------------------------------------------------------------------------
கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் பக்க எண்..67 பாடல் 54 பொன் பரப்பிய மகதை பெருமானை பற்றி இப்படி சொல்கிறது...
----------------------------------------------------------------------------------------------
சூரிய காங்கேயன்
54.
வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தமிழ் நாட்டு மூன்று மன்னர்களையுந் திகிலடையும் படி
செய்ய வல்ல ஆறகழூர் வாணனைப் பிடித்து, பாண்டியன் முன்னம்
நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு : சேலஞ் ஜில்லாவும் ஆற்காடு ஜில்லாவும் சந்திக்கிற
இடத்தில் ஒன்றினுள் ஒன்றாக ஆறு அகழிகளால் சூழப்பெற்றதான
ஆறகழூர், மகத மண்டலம் - (அது மலாடு ஜனனாதவள நாடு) அவ்விடத்து
மாவலிவாண வமிசத்தானான வாண அரசனானவன் பராக்கிரமத்தோடு
அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நாடு நாட்டதிபதியானதால் மகதைப்
பெருமாள் என்னும் மற்றொரு பெயரும் உள்ளான். இவன் சேர சோழ
பாண்டியர்களான மூவேந்தரையும் மதிப்பதில்லை குறும்பு செய்வன். ஆனால்
பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளான். இவனை யாரேனும் பிடித்துத்
தன்முன் அடக்கி நிறுத்துவரேல் வேண்டுவன உதவுவேன் எனப் பாண்டியன்
பறைசாற்றுவித்தான். கீழ்கரைப் பூந்துறை மோரூர் கண்ண குலத்தானான
சூரியன் என்னுஞ் சேனா வீரவாலிபன், இதனை முடிப்பதாக முன் வந்தான்.
தனக்கு வேண்டிய சாதனங்களைப் பெற்றுப்போய் ஆறகழூரில் மாறுவேடம்
பூண்டு உளவறிந்திருந்தான். சமயம் வாய்த்த பொழுது உடன் வந்த
துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளால் எடுத்தபடியே மகதை எல்லை கடந்து கொண்டு வந்து விட்டான். இடையே வைக்கப்பட்டிருந்த
பாண்டிவீரர்கள் சேர்ந்து கொண்டார்கள். மலைமேற் சுற்றுக்
கோட்டைகளுள்ள சங்ககிரி துர்க்கத்திற் பாண்டிய ராஜன் முன்
கொண்டு வந்து நிறுத்தினான்.
ஆறை வாணனைக் குறித்த செய்யுட்கள் திருவண்ணாமலை
அருணாசலேசுரர் ஆலயமுதற்பிராகரத்து வடவண்டைச் சுவரில்
செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுளொன்று:
"கொங்குங் கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்
தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்
பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்
செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே"
இவனைப் பற்றிய சாசனம் ஆறகமூர் காமநாதேசுரர் ஆலயத்து
மிருக்கிறது. கி.பி. 1178-ல் இருந்திருக்கிறான். அப்பொழுது மூன்றாங்
குலோத்துங்கன் காலம்.
சூரிய காங்கேயனைப் பற்றிய செய்யுட்கள்
மிண்டாறை வாணனைமன் வெட்டாமற் பாண்டியனோ
கொண்டு வந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ
தெண்டிரைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே
மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ்சூரிய காங்கேயனே"
(பழம் பாடல்)
பூதந் துனைகொண்ட போர்வாணன் மாறனிரு
பாதத் துணைகாணப் பண்ணினோர் ஓதுமிசை
ராமா யணங்கேட்டோர் நவலர்வைப் புப்பொருளாங்
கோமான்வாழ் மோரூர் குடி.
(பழம் பாட்டு)
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
வாணகோவரையன்,
aragalur,
aragalur history,
vanakovaraiyan,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
வாணவராயன் மகதை பெருமான்
ஆகவ ராமன்
88.
ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்
கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே
வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்
வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே.
(க-ரை) ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த
பாண்டியன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும்.
வேப்பமாலையும், மீனக்கொடியும் இன்னுந் தனக்குள்ள விருதுகளையும்
மகிழ்ந்து அளிக்க ஏற்றுக்கொண்ட சூரியகாங்கேயனும் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு : தனக்கு அடங்காது மீறி நடக்கும் ஆறகழூர் வாணனைத்
தந்திரமாகப் பிடித்துத் தன்முனிறுத்திய சூரியகாங்கேயனது வலிமையைக்
கண்ட பாண்டியன் மனது மகிழ்ந்து ஆகவராம பாண்டியன் என்ற தங்களது விருதுப் பெயரும், வேப்ப
மாலையும், மீனக்கொடியும் இன்னும் தனக்குள்ள விருதுகளையும் எழுகரை
நாட்டாதிக்கமுங் கவரவமாகக் கொடுத்து உபசரித்தனுப்பினன். அவைகளை
ஏற்றுக்கொண்டு கம்பீரமாக வாழ்ந்திருந்தனன்
88.
ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்
கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே
வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்
வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே.
(க-ரை) ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த
பாண்டியன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும்.
வேப்பமாலையும், மீனக்கொடியும் இன்னுந் தனக்குள்ள விருதுகளையும்
மகிழ்ந்து அளிக்க ஏற்றுக்கொண்ட சூரியகாங்கேயனும் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு : தனக்கு அடங்காது மீறி நடக்கும் ஆறகழூர் வாணனைத்
தந்திரமாகப் பிடித்துத் தன்முனிறுத்திய சூரியகாங்கேயனது வலிமையைக்
கண்ட பாண்டியன் மனது மகிழ்ந்து ஆகவராம பாண்டியன் என்ற தங்களது விருதுப் பெயரும், வேப்ப
மாலையும், மீனக்கொடியும் இன்னும் தனக்குள்ள விருதுகளையும் எழுகரை
நாட்டாதிக்கமுங் கவரவமாகக் கொடுத்து உபசரித்தனுப்பினன். அவைகளை
ஏற்றுக்கொண்டு கம்பீரமாக வாழ்ந்திருந்தனன்
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகழூர் வரலாறு,
ஆறகளூர்,
வாணகோவரையன்,
aragalur,
aragalur history,
vanakovaraiyan,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
பொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகழூர் வரலாறு,
வாணகோவரையன்,
வாணர்,
aragalur,
aragalur history,
vanakovaraiyan,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
திங்கள், 10 மார்ச், 2014
ஆறகழூருடன் தொடர்புடைய மன்னர்கள்
ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை நாட்டுடன் தொடர்புடைய மன்னர்கள்....
------------------------------
1.ஏகாம்பர முதலியார்(ஏகாம்பர வாணன்)
2.வாண கோவரையர்கள்....12ஆம் நூற்றாண்டு
3.வாணகோவரையன் மகதை பெருமாள் பொன் பரப்பினான்
4.மூன்றாம் குலோத்துங்க சோழன்
5.குலோத்துங்க சோழ வாண கோவரையன்
6.மூன்றாம் இராச ராச சோழன்
7.மலையமான்
8.சம்புராயன்
9.காடவராயன்
10.சுந்தர பாண்டியன்
11.சடைய வர்ம சுந்தர பாண்டியன்
12.இரண்டாம் நரசிம்மன்
13.வசந்தராயன்
14.கிருஷ்ண தேவராயர்..
15.ஓய்சாள வீர ராமநாத தேவன்..
லேபிள்கள்:
ஆறகழூர்,
வரலாறு,
வாணகோவரையன்,
வாணர்,
aragalur,
aragalur history,
vanakovaraiyan,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
இந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க..
இந்த பாடலுக்கு பொருள் சொல்லுங்க.
ஆறகழூர் வாணகோவரையர் பற்றி திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1
வாணகோவரையனான மகதைப் பெருமாள்
எனும் மகதநாட்டு குறுநிலத்தலைவன்
பொன்பரப்பினான் புகழ் பாடுவன.
திருஅண்ணாமலையார் கோயில் திருவுண்ணாழி
வடப்பக்கச் சுவரினில் பொளிக்கப்பட்டுள்ளவை.
ஆறகழூர் வாணகோவரையர் பற்றி திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு
கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1
வாணகோவரையனான மகதைப் பெருமாள்
எனும் மகதநாட்டு குறுநிலத்தலைவன்
பொன்பரப்பினான் புகழ் பாடுவன.
திருஅண்ணாமலையார் கோயில் திருவுண்ணாழி
வடப்பக்கச் சுவரினில் பொளிக்கப்பட்டுள்ளவை.
1. நேரிசை வெண்பாக்கள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
|
தாரு முடியு முரசுந்
தமக்குரிய
பாரு முடன்பெறுவர் பார்வேந்தர - வீரப் பெருமாள் மகதேசன் பேரெழுதி தத்தம் திருமார்பில் ஆளோலை செய்து |
1
|
|
வன்மதுரை விட்டு வடகடலான்
மால்வழுதி
தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய் மல்லார்தோள் மாகதகோ மான்முனிந்தால் மன்னவருக் கெல்லாங் கடலோ விடம் |
2
|
|
பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித் தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்பர் இன்றொடான் இன்றோடான் என்று |
3
|
|
தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு முருவத் திகிரி யுயர்நெடுந்தேர் வாணன் புருவக் கடைவளையப் போம் |
4
|
|
தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா தூர்ந்து மணிநீர்த் துறையாகா - ஏந்துமுலைப் பூணாகா மாரிவிழலாகா பொன்னெடுந்தேர் வாணாகா வென்னாதார் மன் |
5
|
|
பொருப்பிற் கரிய புகர்முகவெங் கூற்றின் மருப்பிற் துளைப்புண்ண வாரா - திருப்பில் வடியுளவாஞ் செல்வேல் மகதையர் கோமான் அடியுளவாம் வேந்தர்க் கரண் |
6
|
|
புரிந்த கனைகழற்காற் போர்வளவர் கோனை வரிந்த திறைக்காசு வாணா - தெரிந்தானை வாங்கினா யென்று வழுதியர்கள் தாங்கலங்கி யேங்கினார் பாரிழந்தோ மென்று |
7
|
|
மண்ணான் திகரிகை வாணன் வடுகெறிந்த எண்ணாயிரஞ் சூழ்ந்த எண்டிசையும் - புண்வார்ந்த நீரேநீர் காகநிழ லேநிழல்நெ டும்பெய்த தேரேதேர் செஞ்சேறே சேறு |
8
|
|
சூழும் பிணவணைமேல் தோய்முகிற் பந்தற்கீழ் வீழுங் கமுகினங்கள் மெய்காப்ப வாழுந்தன் தொன்னகரே போல் வடுகர் துஞ்சத் துயிற்றியதே மன்னவர்கோன் மாகதர்கோன் வாள் |
9
|
|
தேர்கொடி மாமறுகில் தெண்மணலைச் சேயிழையார் மார்க்கு மருந்தாக்க வல்லாவாம் - யார்க்கு முயிராய செங்கோ லுயர்நெடுந் தேர்வாணன் அயிரா வதத்தி னடி |
10
|
|
வேளை நெடுங்கல்லும் வெட்டும்வீ ரக்குகையு மூளை தெரிக்கு முடித்தலையு - நாளை மதிவா ணுதல் மடவாய் காணலாம் வாணன் அதிவாரணந் தொடர் விட்டால் |
11
|
|
மேருவின் மேல்வென்று கயல்பொறித்த வார்த்தையினும் வாரிபட வேலெறிந்த வார்த்தையிலும் - கார்விலங்கு முன்னிட்ட வார்த்தையிலுந் தென்னவர் மாகதற்குப் பின்னிட்ட வார்த்தை பொரிது |
12
|
2. ஆசிரிய விருத்தங்கள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி
VIII #97, பக். 50-51 (AR # 507 of 1902)
|
முன்போரு படைக்கடலை விட்டரச ரானார் மூலதன மும்பரியு முறைமுறைபரி வாரித் தென்பகை யடக்கியபின் வாணகுல தீபன் செய்ததனி யாண்மைவட திக்கிலறி கிற்பீர் பின்பொரு பொருப்பரண் விடாமலைய மானைப் போரெயி லில்பொருத போதொருபெ ரும்போர் வன்பறை தவிர்த் தொருகுதிரை வலியா லவனை வாட்டுறை தவிர்த்ததொரு கோலின்வலி யாலே |
13
|
|
வாரொன்று முலையாய்மற் றவறென்றும் பழுதுரையார் மகதைவேந்தன் போரொன்று புரியாமுன் பெரியகுறிச் சியிலெழுந்த புகையேகண்டாய் காரொன்று கனலெரியை மின்னென்று தளரேல் காரைக்காட்டி லூரொன்று மதில்வீழ்ந்த பேரொலியு முருமதிர்வ தொக்குங்காணே |
14
|
|
மடலளவு நிறைந்தொழுகு மதுமலர்த்தாள் மகதேசன் வையம்காக்கும் அடலளவி லணிநெடுந்தேர் ஆயு_ரமனை வணங்கா வரசராவர் கடலளவு நடந்தவன் கணைகுரக்கு மவன்தன் கதிர்வேல்மன்ன ருடலளவு நடந்ததுமற் றுலகளவு நடந்ததவன் ஒருசெங்கோலே |
15
|
|
சொல்லி விடுசெரு மீனவர்சூழும் உரிமைகொ டாழ்கடல் எல்லி விடுபடு ஏறுவ ரேனும் யமபுரி ஏறுவர் கொல்லி விடுமுர காதிபர் கூளி கருதலர் ஊர்புக வல்லி விடுமயி ராவதம் வாணன் வரவிடு நாளையே |
16
|
|
ஆழந் தருகடல் வையத் தரசு செலுத்திய செங்கோ லரசெல்லாம் வேழந் தருகொடை வாண திவாகரன் விதிமுறை செய்வது மெய்கண்டீ ரீழந் திரையிடு மாணிக் கப்படி யடுமின் தென்னரீ ரிடீராகிற் சோழந் திரையிடும் யானைக் குங்களை யிடுமென் றிருமிது சொன்னோமே |
17
|
3. கட்டளைக் கலித்துறைகள்
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி VIII #97, பக். 50.
|
முருகுந்து காஞ்சியும் வஞ்சியும் கொண்டமொய்த் தார்மகதன் திருகுங் கனைகழல்வீக் கியநாள்சீ பராந்தகனிற் பெருகுங் குருதிப் புனல்வாய் தொறும்பில வாய்மடுத்துப் பருகுங் கழுதுடன் செம்மைகொண் டாற்கும் பனிக்கடலே |
18
|
|
மட்டியன் றேறிய தார்புனை வாண புரந்தரன்நீ வெட்டியன் றேகொன்ற வெண்மணிப் பாடி யுதிரவெள்ளத் தொட்டியென் றேனுந் தொலைவதுண் டேதொலை யாதபந்தி கட்டியன் றேதெவ்வர் பாய்பரித் தானை கலக்குவதே |
19
|
|
கொங்குங் கலிங்கமுங் கொண்டகண்டா கொடித் தேருதியர் தங்கும் பதிகொண்ட வாணாதி பாதணி யாத தென்கொல் பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டுவிழச் செங்குன்ற மென்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே |
20
|
|
எண்மேல் மிகும்பரித் தேர்மக தேசன் இகல்விசையப் பெண்மேல் விரும்பிவெம் போர்செய்த நாள்பின் கொடாவடுகர் விண்மேல் நடந்து வடுகென்ற நாமம் விலக்குண்டபின் மண்மேல் நடந்து தேசிமுன்னான வடுகென்றுமே |
21
|
|
நாமா னரவிந்த மான்விந்த மான்முடி நாகர்சென்னிப் பூமான் விரும்பும் புகழ்மக தேசற்குப் போர்வழுதி வாமான திரையிட்ட வந்நாள் தொடங்கியவ் வானவர்தம் கோமான் தனதென் றிரான்அம ராவதிக் குஞ்சரமே |
22
|
முற்றிற்று
மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள
மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன்
தெற்கில் கொல்லி வடக்கில் சவ்வாது எனும் மலைகளிடைப்பட்டு
செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன்
கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை
சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத்
தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை
சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை
சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர்
இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்
களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற
குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.
நூ. த. லோகசுந்தரமுதலி
வியாழன், 20 பிப்ரவரி, 2014
ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....
ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....
---------------------------------------------------------
பழைய பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் ஆறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.....
காமநாத கோவையில் வரும் பாடலிலும்
வினோத ரசமஞ்சரியில் குறிப்பிட்டுள்ள பாடலும்
ஆறை என்றே குறிப்பிடுகிறது..இந்த இரண்டு பாடல்களும் ஆறை நகரின் பெருமையை எடுத்து சொல்கின்றன.....
கூகையூர் அடிகளாசிரியர் தொகுத்த காமநாத கோவையின் பாடலும் பொருளும்.....
”சங்கீன்ற முத்தனைத் தன்னின மென்றேகருதி
அங்கம் குருகணைக்கும் ஆறையே!- எங்கோன்
முருகன் அவதரியா முன்னாளில் காமன்
உருவமுடன் பூசித்த ஊர்.”
இந்த பாடலின் பொருள்..
---------------------------------------------- அன்னங்கள் வாழும் அளவிற்கு நீர்,நில வளம் மிக்க ஊர்,ஆழ்கடல் முத்துக்கள் நீர் நிலைகளில் தோன்றியுள்ளன.அம்முத்துக்களை அன்னங்கள் தம் இனமென்று கருதி அணைத்து சென்றன.இத்தகைய வளமிக்க ஊரே ஆறகழூர்..
இவ்வூரை இப்பாடல் ஆறை என்றே கூறுகிறது...
புலவறாற்று படையில்----வினோத ரச மஞ்சரி என்ற நூலில் வாணர் குல பெருமையையும் ஆறகழூர் பெருமையையும் பேசுகிறது..........அந்த பாடல்.....
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெனது நாமமேது புகழ்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!
இந்த பாடலின் பொருள்..
--------------------------------------------- ஒரு புலவர் வாணர் குல மன்னரிடம் பாடல்கள் பாடி பரிசு பெற எண்ணி நடந்து போய் கொண்டிருக்கிறார் அப்போது அவர் முன் தேரில் அமர்ந்து பொன் பொருளோடு ராஜ கம்பீரமாய் ஒருவர் வருகிறார்..அவரை மன்னன் என எண்ணி புலவர் வணங்குகிறார்..அப்போது தேரில் வந்தவர்..நானும் உம்மைபோல் ஒரு புலவன்தான் ஆறை நகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்து கொடுத்த செல்வங்கள்தான் இவை ..நீயும் சென்று பரிசை பெற்று கொள் என சொல்லி போகும் வழியின் அடையாளத்தையும் சொல்கிறார்......
மாட மாளிகையும் கூட கோபுரங்களும் நிறைந்திருக்கும் ஆலமரம்,வேப்பமரம் ,பனைமரம் எல்லாம் நிறைந்திருக்கும்
அங்கு அரசர்கள் எல்லாம் வாணபூபதியை காண காத்திருப்பர்....
என்று வழி சொல்லி அனுப்புவர்......
இயல்பாகவே புலவர்கள் தங்களுக்கு உதவியர்களின் பெருமையை மிகைப்படுத்தி பாடுவர் எனினும் அடிப்படை உண்மை மாறாது...........
இத்தகைய பெருமையையும் இயற்கை வளமும் கொண்ட ஆறகழூர் தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமையாததால் சுருங்கி சின்ன கிராமமாய் இருக்கிறது......
இருப்பினும் தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள்......8 பைரவர்களும் ஒரே கோவிலின் உள்ளே உள்ள சிறப்பு பெற்றது காமநாதீஸ்வரர்.

அங்கம் குருகணைக்கும் ஆறையே!- எங்கோன்
முருகன் அவதரியா முன்னாளில் காமன்
உருவமுடன் பூசித்த ஊர்.”
இந்த பாடலின் பொருள்..
---------------------------------------------- அன்னங்கள் வாழும் அளவிற்கு நீர்,நில வளம் மிக்க ஊர்,ஆழ்கடல் முத்துக்கள் நீர் நிலைகளில் தோன்றியுள்ளன.அம்முத்துக்களை அன்னங்கள் தம் இனமென்று கருதி அணைத்து சென்றன.இத்தகைய வளமிக்க ஊரே ஆறகழூர்..
இவ்வூரை இப்பாடல் ஆறை என்றே கூறுகிறது...
புலவறாற்று படையில்----வினோத ரச மஞ்சரி என்ற நூலில் வாணர் குல பெருமையையும் ஆறகழூர் பெருமையையும் பேசுகிறது..........அந்த பாடல்.....
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெனது நாமமேது புகழ்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!
இந்த பாடலின் பொருள்..
--------------------------------------------- ஒரு புலவர் வாணர் குல மன்னரிடம் பாடல்கள் பாடி பரிசு பெற எண்ணி நடந்து போய் கொண்டிருக்கிறார் அப்போது அவர் முன் தேரில் அமர்ந்து பொன் பொருளோடு ராஜ கம்பீரமாய் ஒருவர் வருகிறார்..அவரை மன்னன் என எண்ணி புலவர் வணங்குகிறார்..அப்போது தேரில் வந்தவர்..நானும் உம்மைபோல் ஒரு புலவன்தான் ஆறை நகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்து கொடுத்த செல்வங்கள்தான் இவை ..நீயும் சென்று பரிசை பெற்று கொள் என சொல்லி போகும் வழியின் அடையாளத்தையும் சொல்கிறார்......
மாட மாளிகையும் கூட கோபுரங்களும் நிறைந்திருக்கும் ஆலமரம்,வேப்பமரம் ,பனைமரம் எல்லாம் நிறைந்திருக்கும்
அங்கு அரசர்கள் எல்லாம் வாணபூபதியை காண காத்திருப்பர்....
என்று வழி சொல்லி அனுப்புவர்......
இயல்பாகவே புலவர்கள் தங்களுக்கு உதவியர்களின் பெருமையை மிகைப்படுத்தி பாடுவர் எனினும் அடிப்படை உண்மை மாறாது...........
இத்தகைய பெருமையையும் இயற்கை வளமும் கொண்ட ஆறகழூர் தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமையாததால் சுருங்கி சின்ன கிராமமாய் இருக்கிறது......
இருப்பினும் தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள்......8 பைரவர்களும் ஒரே கோவிலின் உள்ளே உள்ள சிறப்பு பெற்றது காமநாதீஸ்வரர்.

லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகழூர் வரலாறு,
மகத நாடு,
வாணகோவரையன்,
வாணர்,
aragalur,
aragalur history,
kamanatha esvaran,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
செவ்வாய், 28 ஜனவரி, 2014
ஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்
ஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்
--------------------------------------------------------------
ஆறகழூர் முற்காலத்தில் மகத நாட்டின் தலைநகராய் விளங்கியது..
வாணர் குலத்தை சார்ந்தவர்கள் ஆறகழூரை ஆண்டு வந்தனர்..அந்த வாணர் குல பெருமையையும் வீரத்தையும்
ரா.பி.சேதுபிள்ளை என்ற தமிழ் அறிஞர் தமிழர்களின் வீரம் என்ற நூலின் ஒரு பகுதியில் எழுதியுள்ளார்...அதை கீழே படிங்க........
----------------------------------------------------------------------------------------------
தமிழர் வீரம் : ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை 1947
பெண்ணை நாட்டுப் பெருவீரர்
வாணர்குல வீரம்
மகத நாடு
தமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.[6]
வாணர்குலப் பெருமை
தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் "மாவலி மருமான் சீர்கெழு திருமகள்" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.
ஆறைக் கோட்டை
வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.[7]
பஞ்சநதி வாணன்
தமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன்.[8] அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ?
பாண்டிப் போர்
வாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.[9]
பாணனுக்குப் பாண்டிநாடு
நெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனை யும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, "அருந் தமிழ் விருந்து" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, "உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்" என்றான்.[10] கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. "நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.
-----
பாணனது நாணம்
சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, "அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா? பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்தி நின்றான்.
பாண்டிப் போரில் வாணகோவரசன்
பாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.
வாணனும் பாணனும்
ஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்?' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,"ஐயனே! அருந்தமிழ் வாணனே! அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ?" என்று நயமுறப் பாடினான் பாணன்.[11]
வாணன் குறும்பு
பின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன்! வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; "உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் "கிருது" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, "அண்ணலே! கலை வள்ளலே! உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே! வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை?" என்று வினயமாகப் பாடினான்.(12) அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.
ஏகம்பவாணன்
இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். "வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ?" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர்.[13] வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.
[6]. பெருந்தொகை, 1158,1159.
வாணர் குலத்தை சார்ந்த அரசனும் அரசியும்...ஆறகழூரை தலைநகராக கொண்டு மகத நாட்டை ஆண்டவர்கள் ..இவர்களின் சிலை இன்றும் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது...
[7]. பெருந்தொகை, 1185.
[8]. கலிங்கத்துப்பரணி, 365
[9]. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது.
[10]. "மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்" என்று குலோத்துங்க சோழன் மெய்கீர்த்தி கூறுகின்றது.
[11]. பெருந்தொகை, 1188.
[12]. "உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால் கொலைக்குரிய வேழம் கொடுத்தான் - கலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப் பாணனோடு என்ன பகை." - பெருந்தொகை, 1188.
[13]. "வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழ்உரையா வாய் உண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு." - பெருந்தொகை, 1181.
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகழூர் வரலாறு,
காமநாத ஈஸ்வரன்,
பாணர்,
வாணர்,
aragalur,
aragalur history,
pannar,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




