செவ்வாய், 7 ஜனவரி, 2014

Aragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடையாம் தெரியாதவர் தற்கொலை

ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் 50 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார் அருகே மது பாட்டில்கள் விஷம் இருந்ததாய் சொல்கிறார்கள் நேற்றைய தினத்தந்தியில் அவர் புகைப்படம் வந்தது...
-----------------------------------------------------------------------------------------------
தலைவாசல் ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைவாசல் அருகே தியாகனூரில் உள்ள ஏரியில் நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தார். இது குறித்து, விஏஓ சாந்தி கொடுத்த புகாரின் பேரில், தலைவாசல் போலீசார், அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர், வெள்ளை சட்டை, பனியனும் கட்டம் போட்ட லுங்கியும், கழுத்தில் கருப்பு கயிற்றில் கட்டப்பட்ட ஓம் என்ற சில்வர் செயினும் அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக