ஆறகழூர் அம்பாயிரம்மன் கோவில் வரலாறு..
--------------------------------------------------------------------------------------தலவரலாறு
--------------------ஆறகழூரில் வசித்த மண்பாண்ட தொழிலாளர்கள்(குயவர்கள்) வசிஷ்ட நதிக்கரையில் இருந்த செம்மண் குவியலை பெயர்த்தனர் ஆனால்.முடியவில்லை . கோடாரியால் வெட்டியபோது உள்ளிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த மக்கள் மன்னரிடம் தகவல் தெரிவித்தனர்.அங்கு பூமிக்கு அடியில் மகிஷாசுரமர்த்தினி சிலை இருப்பது தெரியவந்தது.அதை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட துவங்கினர்....
துர்க்கைக்கு அமைந்த தனிக்கோவில் இது
பேச்சு மணி ஆட்டுமணி
-------------------------------------------அம்பிகை வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறாள்.மகிஷனை அழிப்பதற்காக அம்பிகை ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்தாள்.
இதனால் இவளை ‘’அம்பாயிரம்மன்’ என அழைக்கின்றனர்
பவுர்ணமியன்று விசேச பூசை உண்டு,செவ்வாய் வெள்ளியில் ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு....
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு எலுமிச்சை தீபம் ஏற்றி தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.வஷிஷ்ட நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அதை அம்பிகையாய் கருதி ஆற்று நீரால் அபிசேகம் செய்கின்றனர் பின் அதை மரத்தில் கட்டி
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
குழந்தை பிறந்தால் மணி கட்டுவதையே இப்படி குறிப்பிடுகின்றனர்.
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..
ராகு கேது விநாயகர்
------------------------------------இங்குள்ள இரட்டை விநாயகர் சன்னிதி முகப்பில் ராகு கேது உள்ளனர்,
விநாயகர் கேதுவுக்கு உரிய தெய்வம் என்பதால் கேது தோசம் விலகி நன்மை உண்டாகும்..
நீதி பிரார்த்தனை
---------------------------------
கோவில் வளாகத்தில் பக்தர்கள் கொடுத்த சூலங்கள் உள்ளன.ஏமாற்றப்பட்டோர்,தவறு செய்யாமல் தண்டனை பெற்றோர் நீதி வேண்டி சூலத்தை தலைகீழாக குத்தி வைக்கின்றனர்,வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து பொங்கல் இடுகின்றனர்.
இதற்க்கு ஈடு போடும் வழிபாடு என்று பெயர்

விபத்து,தற்கொலை செய்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் வடித்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர் .
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.
நடுகற்கள்-நவகண்டம்
---------------------------------------------ஊரின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட 3 நவகண்ட சிலைகள் இங்கு உண்டு..
திறக்கும் நேரம்
--------------------------------
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
இருப்பிடம்-
---------------------
சேலம்-ஆத்தூர்=52கி.மீ, ஆத்தூர்-ஆறகழூர்= 23 கி.மீ தொலைவு
ஆறகழூர் பஸ்நிலையத்தில் இருந்து அரை.கி.மீ தொலைவில் கோவில் உள்ளது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக