துர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 டிசம்பர், 2020

சின்னசேலம் கொற்றவை

 சின்னசேலம் கொற்றவை

      


ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752




சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

     
சின்னசேலம் கொற்றவை


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

   சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கொற்றவை


    கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.

      


  
    கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச்செல்லும் முன் வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டு சென்றுள்ளனர். மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவைக்கு வீரன் ஒருவனை நவகண்டம் கொடுக்க செய்துள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. இவர் பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் துர்க்கை,காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடானது மாற்றமடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

 
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


சின்னசேலம் கொற்றவை


   சின்னசேலம் ஏரியின் கிழக்கு கரையில் ஒரு கொற்றவை சிற்பமானது காணப்படுகிறது. இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதை கருதலாம். பல்லவர் கால பாணியை பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    
டைம்ஸ் ஆப் இந்தியா

  
  இதன் உயரம் 83 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். கால்பாதமும் அதற்கு கீழ் உள்ள பகுதியும் பூமியில் புதைந்துள்ளது. எட்டுகரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடி போன்ற அணிகலன்களும் அலங்கரிக்கின்றன. மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. வலது பின்கரங்களில் பிரயோகசக்கரம்,நீண்டவாள்,அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளது. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவை காணப்படுகின்றன.இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது.வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும்.ஆனால் இதில் சற்று பெரிதாக காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் உள்ளது. வலதுகால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

  

தமிழ் இந்து
  
  பல்லவர்கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இச்சிற்பத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான மான் வலதுபுறம் உள்ளது. பாய்ந்து ஓடும் நிலையில் மான் உள்ளது. நீண்ட கொம்புகள், முன்கால் தாவும் நிலையிலும் பின்கால் தரையில் அழுத்திய நிலையிலும் பெரிய அளவில் மான் காட்டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்ப்பத்தில்தான் இப்படி மான் காட்டப்படுவது வழக்கமாகும். இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது. பாதத்திற்கு கீழ் மண்ணில் புதைந்துள்ளதால் காலுக்கு கீழ் காட்டப்படும் எருமை தலையும்,நவகண்டம் கொடுத்துகொள்ளும் வீரனும்,வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்கு தெரியவில்லை.இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத்தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தார்.

    
தினகரன்


         
தினத்தந்தி

மாலைமலர்

சக்தி விகடன்

சக்தி விகடன்

இணையதள இணைப்புகள்

மாலைமலர்

  https://www.maalaimalar.com/news/district/2020/12/11153607/2148069/Tamil-News-Ancient-kotravai-stone-idol-found-in-Chinnasalem.vpf

தமிழ் இந்து

https://www.hindutamil.in/news/todays-paper/regional01/610023-.html









சனி, 16 மே, 2015

aragalur ஆறகழூர் அம்பாயிரம்மன் முற்கால துர்க்கை

ஆறகழூர் அம்பாயிரம்மன் கோவில் வரலாறு..

--------------------------------------------------------------------------------------

தலவரலாறு

--------------------
ஆறகழூரில் வசித்த மண்பாண்ட தொழிலாளர்கள்(குயவர்கள்) வசிஷ்ட நதிக்கரையில் இருந்த செம்மண் குவியலை பெயர்த்தனர் ஆனால்.முடியவில்லை . கோடாரியால் வெட்டியபோது உள்ளிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த மக்கள் மன்னரிடம் தகவல் தெரிவித்தனர்.அங்கு பூமிக்கு அடியில் மகிஷாசுரமர்த்தினி சிலை இருப்பது தெரியவந்தது.அதை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட துவங்கினர்....
துர்க்கைக்கு அமைந்த தனிக்கோவில் இது

பேச்சு மணி ஆட்டுமணி

-------------------------------------------
அம்பிகை வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறாள்.மகிஷனை அழிப்பதற்காக அம்பிகை ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்தாள்.
இதனால் இவளை ‘’அம்பாயிரம்மன்’ என அழைக்கின்றனர்
பவுர்ணமியன்று விசேச பூசை உண்டு,செவ்வாய் வெள்ளியில் ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு....
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு எலுமிச்சை தீபம் ஏற்றி தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.வஷிஷ்ட நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அதை அம்பிகையாய் கருதி ஆற்று நீரால் அபிசேகம் செய்கின்றனர் பின் அதை மரத்தில் கட்டி
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
குழந்தை பிறந்தால் மணி கட்டுவதையே இப்படி குறிப்பிடுகின்றனர்.
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..

ராகு கேது விநாயகர்

------------------------------------
இங்குள்ள இரட்டை விநாயகர் சன்னிதி முகப்பில் ராகு கேது உள்ளனர்,
விநாயகர் கேதுவுக்கு உரிய தெய்வம் என்பதால் கேது தோசம் விலகி நன்மை உண்டாகும்..
நீதி பிரார்த்தனை
---------------------------------
கோவில் வளாகத்தில் பக்தர்கள் கொடுத்த சூலங்கள் உள்ளன.ஏமாற்றப்பட்டோர்,தவறு செய்யாமல் தண்டனை பெற்றோர் நீதி வேண்டி சூலத்தை தலைகீழாக குத்தி வைக்கின்றனர்,வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து பொங்கல் இடுகின்றனர்.
இதற்க்கு ஈடு போடும் வழிபாடு என்று பெயர்
விபத்து,தற்கொலை செய்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் வடித்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர் .
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.

நடுகற்கள்-நவகண்டம்

---------------------------------------------
ஊரின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட 3 நவகண்ட சிலைகள் இங்கு உண்டு..
திறக்கும் நேரம்
--------------------------------
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
இருப்பிடம்-
---------------------
சேலம்-ஆத்தூர்=52கி.மீ, ஆத்தூர்-ஆறகழூர்= 23 கி.மீ தொலைவு
ஆறகழூர் பஸ்நிலையத்தில் இருந்து அரை.கி.மீ தொலைவில் கோவில் உள்ளது...