வியாழன், 4 ஜூன், 2015

சேலம் நாமக்கல் ஒன்றாய் இருந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருக்கும் கல் வெட்டுக்கள் விபரம்




சேலம் நாமக்கல் ஒன்றாய் இருந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருக்கும் கல் வெட்டுக்கள் விபரம்

ஆத்தூர் வட்டத்தில்----------------------------------------------80 கல்வெட்டுக்கள்
இராசிபுரம் வட்டத்தில்------------------------------------------- 27 கல்வெட்டுக்கள்
ஓமலூர் வட்டத்தில்------------------------------------------------35 கல்வெட்டுக்கள்
சேலம் வட்டத்தில்-------------------------------------------------- 54 கல்வெட்டுக்கள்திருச்செங்கோடு வட்டத்தில்----------------------------------- 81 கல்வெட்டுக்கள்நாமக்கல் வட்டத்தில்--------------------------------------------- 73 கல்வெட்டுக்கள்

இது வரை படி எடுக்கப்பட்டுள்ளன..
இவற்றில் திருச்செங்கோட்டுக்கு(81) அடுத்தபடியாக ஆத்தூர் வட்டத்தில்தான் அதிக கல்வெட்டுக்கள் உள்ளன..அதிலும் ஆத்தூர் வட்டத்தில் உள்ள ஆறகழூரில் மட்டும் மொத்தம் 48 கல்வெட்டுக்கள் உள்ளன
..

சேலம் மாவட்டத்தில் மன்னர்கள் வாரியாக கல்வெட்டு விவரம்

சேலம் மாவட்டத்தில் மன்னர்கள் வாரியாக கல்வெட்டு விவரம்

சோழர்கள் ஆட்சி காலம் --------------------------------90 கல்வெட்டுகள்
பாண்டியர்கள் ஆட்சி காலம் -----------------------------57 கல்வெட்டுகள்
விஜயநகர ஆட்சி காலம் ------------------------------ 63 கல்வெட்டுகள்






ஓய்சாளர்கள் ஆட்சி காலம் ------------------------------ 10 கல்வெட்டுக்கள்
கொங்கு சோழர்கள் ஆட்சி காலம் -------------------- 4 கல்வெட்டுக்கள்கொங்கு பாண்டியர்கள் ஆட்சி காலம் ------------- 2 கல்வெட்டுக்கள்


இவற்றில் சோழர்களில் முதலாம் இராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுகள் அதிகம் உள்ளன..
பாண்டியர்களில் முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன், இரண்டாம் சடைய வர்ம சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன..
விசய நகர பேரரசின் கல்வெட்டுக்கள் கி.பி. 16,17 ஆம் நூற்றாண்டுகளில் அதிகம் உள்ளது
.

வன்நெஞ்சன் நில அளவு கோள்


வன்நெஞ்சன் அளவு கோள் 

--------------++------++++++++++++

இன்றைக்கு நாம் நிலங்களை அளக்க அடி கணக்கை பயன்படுத்துகிறோம். 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரில் வன்நெஞ்சன் என்ற அளவு கோல் பயன்படுத்த ப்பட்டுள்ளது.அது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில் ஆறை நாயகன் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ளது


            இந்த அளவு கோல் என் ஊர் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ளது..இது பற்றி கல்வெட்டிலும் குறிப்பு உள்ளது..கல்வெட்டில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் வன்னெஞ்சன் என்ற அளவு கோலல் அளக்கப்பட்டதாய் சொல்லப்பட்டுள்ளது..எங்கள் ஊரை தலை நகராக கொண்டு ஆண்ட வாண கோவரையர்கள் சோழர்களின் கீழ் குறு நில மன்னர்களாய் இருந்தவர்களே..எங்கள் ஊருக்கு அருகே உள்ள கூகையூர் கோவிலிலும் இதே போன்ற அளவு கோல் செதுக்கப்பட்டுள்ளது

       

       
ஒரு தூணின் மூன்று புறங்களில் இது செதுக்கப்பட்டுள்ளது..



அம்மாயிரம்மன் எருமை கிடா பலி நிகழ்சி






நேற்று ஆறகழூர் அம்பாயிரம்மனுக்கு பெரியேரி கிராம மக்களால் எருமை கிடா பலி கொடுக்கப்பட்டது


நிச்சயமாய் இது நல்லதில்லைதான்...ஆனா பல நூற்றாண்டுகளுக்கு முன் துர்க்கைக்கு இப்படி பலி கொடுத்துள்ளார்கள்...இது வரலாற்றின் எச்சம்..ஒரு உயிர் போவது சங்கடம்தான்..ஆனாலும் பல பழக்கங்கள் நடைமுறைகள் தொடர்வது அந்த கால மக்களின் வாழ்கை முறையை அறிய உதவுகிறது

      

       ஒரு உயிர் அநியாயமாய் பலியாகிறது .எந்த கடவுளும் உயிர் பலி கேட்பதில்லை..அப்படி கேட்டால் அது இரக்கமுள்ள கடவுள் அல்ல..மனிதன் தன் எண்ணங்களை தான் நடத்தும் நிகழ்சியில் புகுத்தி விடுகிறான்..

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்
இது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது



தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் பழங்கால எல்லைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல உள்ளது. அப்பொழுது ÷ காயில்களின் நிலங்களுக்காக எல்லைக்கல் நடப்பட்டது. குலப்பிரமாணம் என்ற அளவை முறை மட்டும் அப்பொழுதிருந்ததால் நான்கெல்லைகளாக நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், தோப்பு, ஆறு ஆகியவைகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் குழிக்கல், குத்துக்கல், எல்லைக்கல், சக்கரக்கல் ஆகியவைகளும் ஆலமரம், புளியமரம், பழைய கோட்டை, மக்களது பயன்பாட்டிலிருந்த பெரு வழிகள் ஆகியவைகளும் இந்த எல்லைகளாக இடம் பெற்றுள்ளன.
தேனி மாவட்டம் அ.வாடிப்பட்டி மற்றும் முதலக்கம்பட்டியை ஆண்ட குறுநில மன்னர்கள் தங்கள் பெயர் பொறித்த கல்லை அவர்களுடைய எல்லையில் நட்டு வைத்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் அருகே உள்ள கந்தர்வக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண் கொண்ட மைல் கல் லும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிநாயக்கன்பட்டியில் தமிழ் மற்றும் அரபி எண் கொண்ட மைல் கல்லும் கண்டுபிடித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மைல்கற்கள் 18 ஆம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை குறிக்கிறது. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைப் பகுதியில் தமிழ், ரோமன் மற்றும் அரபி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது.

.