செவ்வாய், 27 ஜூன், 2017

அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.














சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான அதிகாரிகள், அய்யனார் சிலையை, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, தொல்பொருள் ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் வசிஷ்ட நதியில் கண்டெடுக்கப்பட்டது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை. மனைவியர் இன்றி தனிச்சிற்பமாகவும், கழுத்து, கை, காது உள்பட உடல் பகுதியில் அதிக அளவில் ஆபரணம் உள்ளது. கையில் செங்கோல், பெரிய ஜடாபாரம் (தலையில் உள்ள முடி), இடது கால் மடக்கியும், வலது கால் தொங்கவிட்டபடி, சிலை நேர்த்தியாக உள்ளது. இச்சிலையை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

குரங்கு


தாவும் குரங்கு









  1. இது வரை நான் எடுத்த புகைப்படங்களில் தற்செயலாக கிடைத்த விசயங்கள் இரண்டு ஒன்று அணில்களின் இனச்சேர்க்கை .அதை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
    சில நாட்களுக்கு முன்பு வளையமாதேவி அருகேயுள்ள மலை அடிவாரத்தில் உள்ள குன்னுடையான் என்ற கோயிலை பார்க்க நண்பர் கந்தசாமியுடன் சென்றிருந்தேன். பைக்கை நிறுத்திவிட்டு பார்த்தபோது அடர்ந்த மரங்கள் நடுவே ஏராளமான குரங்குகள் அம்ர்ந்திருந்தன..நாங்கள் கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவடன் பார்த்தால் பைக் டேங்கிலிருந்த தண்ணீர் பாட்டலை காணவில்லை ,எல்லா பொருட்
    களும் வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தன...சரி போ..என விட்டு விட்டு அடுத்த மரத்தை பார்த்தேன்..அங்கு இரண்டு குரங்குகள் இருந்தன.தொலைவில் இன்னொரு மரம் பார்த்துக்கொண்டிருந்த போதே ஒரு குரங்கு வெகு தொலைவில் உள்ள மரத்துக்கு தாவியது, மற்றொரு குரங்கு தாவ தயாராகும் போதே காமிராவை எடுத்து கிளிக்கினேன். இரண்டு மரங்களுக்கு நடுவே குரங்கு பறப்பது போல் ஓர் தோற்றம்....
    புகைப்படத்தை பெரிது செய்து பாருங்க
    #ஆறகழூர்பொன்வெங்கடேசன்



ஆணி செருப்பு பாத குறடு

ஆணி செருப்பு

ஆத்தூர் அருகே வளையமாதேவிக்கும், மஞ்சினிக்கும் இடையே குன்னுடையான் கோயில் என்ற ஓர் கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஒரு ஆணி செருப்பு ஒன்று பார்த்தேன். இந்த மாதிரி ஆணி செருப்பு நீங்க பாத்திருக்கீங்களா..???
அது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது கிடைத்த செய்தி..ஓர் அறிவியல் விளக்கம்
காவடி தூக்கும்போது சிலர் ஆணிச்செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகளின் மேல் முனை, அதாவது கால்வைக்கும் பகுதி (பரப்பு) கூராக இருக்கும். கூர் ஆணிகள் மீது கால்வைத்து ஏறிநின்று, ஆணிச்செருப்பைப் போட்டுக் கொண்டே நடப்பார்கள்.
இதைப் பார்க்கின்ற பக்தர்கள், ஒரு ஆணி குத்தினாலே எவ்வளவு வலிக்கிறது, இரத்தம் வருகிறது. ஆனால், இவ்வளவு கூர் ஆணியில் ஏறி நடக்கிறாய் வலிக்கவில்லை; இரத்தம் வரவில்லை! எப்படி?



கூர்மையான ஆணிகளாக இருந்தாலும் அவை நெருக்கமாகவும், ஒரே மட்டமாகவும் இருப்பதால்தான் ஆணி காலில் குத்துவதில்லை. அதனால்தான் வலிப்பதில்லை, இரத்தம் வருவ-தில்லை. மாறாக ஒரேஒரு ஆணி மட்டும் இருந்து அதன்மீது ஏறினால் காலில் ஏறிவிடும். அதேபோல் நிறைய ஆணிகள் இருந்து, அதில் ஒரே ஒரு ஆணிமட்டும் உயரமாக இருந்தால், அந்தச் செருப்பில் ஏறும்போது அந்த ஆணி குத்திவிடும்.
ஆணிச் செருப்பு காலில் குத்தாமல் இருப்பதற்குக் காரணம், ஆணிகள் நெருக்கமாக அதிக அளவில் இருப்பதும், ஆணிகளின் கூர் ஒரே மட்டமாக இருப்பதுமே காரணம்.
ஒரே ஒரு கூர் ஆணியில் நாம் ஏறினால் நம் எடை முழுக்க அந்த ஆணியை அமுக்க, அந்த அழுத்தத்தில் கூர் ஆணி காலில் ஏறிவிடும். நிறைய ஆணிகள் சமமாக இருந்து அதில் ஏறும்போது நம் எடை எல்லா ஆணி-களிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஒரு தனி ஆணியிலும் கால் பதிவதில்லை. அதனால் ஆணிச் செருப்பு குத்துவதில்லை.

புதன், 17 மே, 2017

சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்




                           சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கம்



  நன்றி..நன்றி..நன்றி..
சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
Ponnambalam ChidambaramKalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPeriyar MannanJeevanarayanan SelvakumarVeeramani Veeraswamiதீபக் ஆதீChennai Sevas Pandian
ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்

                                              




ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி Mangai Ragavanமேடம், திரு Manonmani Pudhuezuthu சார், திரு Rajaram Komagan சார், திரு Mahathma Selvapandiyan சார் ஆகியோருக்கு மிக்க நன்றி..
கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்த பெரியசாமி ஆறுமுகம், மற்றும் அவரின் திருச்சி நண்பர்
Veeramani Veeraswami அய்யா ஆகியோருக்கு நன்றி


                             
எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியையும் ,வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்சியின் சிறப்புக்கு மாமன்னர் Chennai Sevas Pandian
அவர்களின் பதாகைகள் , கணிணி பட உத்திகள் பெரும் உதவி செய்தன. நன்றி மாமன்னரே...
நிகழ்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி


                                    
சேலம் வரலாற்று சங்க செயலாளர் திரு Barna Boss
சேலம் நாணயவியல் சங்கத்தலைவர் திரு சுல்தான் பாய். சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் திரு முல்லையரசு, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் திரு Bala Murugan, எங்கள் ராஜகுரு திரு VeludharanVaradharajan SenthilKumar, Venkatesan Tklp, Yercaud ElangoEmgo MykingSridhar HemaSivarama Krishnan SivaSivasankar Babu, அலெக்சாண்டர் ஆகிய சான்றோர்களுக்கு மிக்க நன்றி


                  
நிறைய பெயர் விடுபட்டிருக்கலாம் மன்னித்தருள்க..
இது எங்கள் முதல் முயற்சி..



                             நிகழ்சி பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் எங்களை மேலும் செம்மைபடுத்தி வழி நடத்தும்
நன்றி

#சேலம்வரலாற்றுஆய்வுமையம்


     http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2702607.html


செவ்வாய், 9 மே, 2017

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் -3


                       சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் - 3



சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் - 3
கெட்டி முதலிகள்
கெட்டி வம்ச அரசர்களின் தலைநகர் அமரகுந்தி.
ஆட்சிகாலம் கி.பி.1539 முதல் 1689 வரை 150 ஆண்டுகள் ஆகும்.
மதுரை நாயக்கர்களின் கீழ் இவர்கள் ஆட்சி இருந்தது.
சங்க காலம் முதலாகவே இந்த கெ(க)ட்டிகள் இருந்தார்கள் என தெரிகிறது.

வணங்காமுடி முதலியார், இம்முடி கட்டி, சீயாலக்கட்டி,இம்முடிகட்டி 2, வணங்காமுடி கொமாரக்கட்டி ஆகியோர் முக்கியமானவர்கள்.





தாரமங்கலம் இவர்களின் தலமையிடமாக இருந்துள்ளது.ஹெய்சாளர்கள் ,பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இப்பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்தவர்கள் இந்த கெட்டி முதலிகள் என வரலாற்று ஆய்வாள்கள் கருதுகின்றனர்.
மதுரை நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என்றழைக்கப்படு தாரமங்கலத்தை தலமையிடமாக கொண்டு கட்டிமுதலி என்ற பட்டத்துடன் ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களின் ஆட்சி பகுதி தாரமங்கலம், ஓமலூர், பவானி,ஆத்தூர், ஆறகழூர் போன்ற பகுதிகள் இருந்துள்ளன.
இவர்களின் கல்வெட்டுக்கள் ஆறகழூர்,ஓமலூர், தாரமங்கலம், பவானி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

வெள்ளி, 5 மே, 2017

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் 2


                  சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் -2





சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள்
வரும் மே 14 ஞாயிற்றுகிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் #சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் என்ற தலைப்பில் திரு ஆய்வாளர் அய்யா பூங்குன்றன்(துறை தலைவர் ஓய்வு) அவர்கள் பேச உள்ளார்..அனைவரும் வந்து கலந்து கொண்டு பயனுற வேண்டுகிறோம்.


சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராமாவடிகள் என்ற மன்னர் ஆத்தூர் பகுதிகளை ஆட்சி செய்ததை பார்த்தோம். இந்த பதிவில் 12 ஆம் நூற்றாண்ட சேர்ந்த குறு நில மன்னரை பார்ப்போம்.

12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு, விழுப்பும் மாவட்டத்தின் மேற்க்கு ,திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்க்கு பகுதிகள், கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேர்ந்தது மகதை நாடாகும். இந்த மகதை நாட்டை வாணகோவரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலை நகரம் ஆறகளூர்.



இந்த வாணகோவரையர்களில் புகழ் பெற்றவர் பொன்பரப்பின வாண கோவரையன் .இவரின் கல்வெட்டுக்கள் ஆறகழூர், பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. திருவண்ணாமலையில் இவரின் பாடல்கள் கல்வெட்டு வடிவில் உள்ளது.மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவரின் படைத்தளபதியாக இருந்தவர் இவர். பாண்டியர்களுக்கு எதிராக நடந்த போரில் சோழனின் படைத்தளபதியாய் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். மூன்றாம் இராசராசனின் மாமனார் இவர். பிற்கால சோழர்களின் வீழ்சிக்கு குறுநில மன்னர்களே முக்கிய காரணம். இதில் வாணகோவரையர்களின் பங்கு மிக அதிகம்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

புதன், 3 மே, 2017

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்


சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்



வரும்  2017  மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாழப்பாடியில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வரலாற்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது, இதில் ஆய்வாளர்கள் பல்வேறு தலையில் பேச உள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் குறு நில மன்னர்கள் என்ற தலைப்பில் தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆய்வாளர் பூங்குன்றன் அய்யா அவர்கள் பேச உள்ளார்..அய்யாவின் கருத்துக்களை குறிப்பெடுக்க பேனா நோட்டு அவசியம் கொண்டு வாங்க...
குறுநில மன்னர்கள் பற்றி நடுகல் கல்வெட்டுக்களும், கோயில் கல்வெட்டுக்களும் நமக்கு தெரிவிக்கின்றன...சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டு முதலே குறு நில மன்னர்கள் பற்றி தகவல்கள் கிடைக்கின்றன.
நம் சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த நீர்முள்ளிகுட்டை நடுகல்லானது ராமாவடிகள் என்ற ஒரு குறுநில மன்னரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த ராமாவடிகள் என்ற மன்னர் தமிழகம்ம் இது வரை அறியாத ஒரு புதிய பெயராகும்.இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை ஆட்சி செய்துள்ளார்.
9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இது. ஆட்சியாண்டு ஏதும் குறிப்பிடப்படாததால் பல்லவர் கீழ் இல்லாமல்
,ராமாவடிகள் சுதந்திரமாய் ஆட்சி செய்த மன்னர் என கருத வாய்ப்புண்டு.

இவரின் மகன் பெயர் பெருமான் ,இவர் பூலாம்பாடியின் மீது படயெடுத்த போது போரில் இறந்த பொன்ன குன்றி என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்