வியாழன், 20 பிப்ரவரி, 2014
ஆறகழூர் கரி வரதராஜ பெருமாள் தேர்
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகழூர் வரலாறு,
தேர்,
aragalur,
aragalur history,
makatha nadu,
tembie car,
vanakovaraiyan
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....
ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....
---------------------------------------------------------
பழைய பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் ஆறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.....
காமநாத கோவையில் வரும் பாடலிலும்
வினோத ரசமஞ்சரியில் குறிப்பிட்டுள்ள பாடலும்
ஆறை என்றே குறிப்பிடுகிறது..இந்த இரண்டு பாடல்களும் ஆறை நகரின் பெருமையை எடுத்து சொல்கின்றன.....
கூகையூர் அடிகளாசிரியர் தொகுத்த காமநாத கோவையின் பாடலும் பொருளும்.....
”சங்கீன்ற முத்தனைத் தன்னின மென்றேகருதி
அங்கம் குருகணைக்கும் ஆறையே!- எங்கோன்
முருகன் அவதரியா முன்னாளில் காமன்
உருவமுடன் பூசித்த ஊர்.”
இந்த பாடலின் பொருள்..
---------------------------------------------- அன்னங்கள் வாழும் அளவிற்கு நீர்,நில வளம் மிக்க ஊர்,ஆழ்கடல் முத்துக்கள் நீர் நிலைகளில் தோன்றியுள்ளன.அம்முத்துக்களை அன்னங்கள் தம் இனமென்று கருதி அணைத்து சென்றன.இத்தகைய வளமிக்க ஊரே ஆறகழூர்..
இவ்வூரை இப்பாடல் ஆறை என்றே கூறுகிறது...
புலவறாற்று படையில்----வினோத ரச மஞ்சரி என்ற நூலில் வாணர் குல பெருமையையும் ஆறகழூர் பெருமையையும் பேசுகிறது..........அந்த பாடல்.....
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெனது நாமமேது புகழ்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!
இந்த பாடலின் பொருள்..
--------------------------------------------- ஒரு புலவர் வாணர் குல மன்னரிடம் பாடல்கள் பாடி பரிசு பெற எண்ணி நடந்து போய் கொண்டிருக்கிறார் அப்போது அவர் முன் தேரில் அமர்ந்து பொன் பொருளோடு ராஜ கம்பீரமாய் ஒருவர் வருகிறார்..அவரை மன்னன் என எண்ணி புலவர் வணங்குகிறார்..அப்போது தேரில் வந்தவர்..நானும் உம்மைபோல் ஒரு புலவன்தான் ஆறை நகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்து கொடுத்த செல்வங்கள்தான் இவை ..நீயும் சென்று பரிசை பெற்று கொள் என சொல்லி போகும் வழியின் அடையாளத்தையும் சொல்கிறார்......
மாட மாளிகையும் கூட கோபுரங்களும் நிறைந்திருக்கும் ஆலமரம்,வேப்பமரம் ,பனைமரம் எல்லாம் நிறைந்திருக்கும்
அங்கு அரசர்கள் எல்லாம் வாணபூபதியை காண காத்திருப்பர்....
என்று வழி சொல்லி அனுப்புவர்......
இயல்பாகவே புலவர்கள் தங்களுக்கு உதவியர்களின் பெருமையை மிகைப்படுத்தி பாடுவர் எனினும் அடிப்படை உண்மை மாறாது...........
இத்தகைய பெருமையையும் இயற்கை வளமும் கொண்ட ஆறகழூர் தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமையாததால் சுருங்கி சின்ன கிராமமாய் இருக்கிறது......
இருப்பினும் தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள்......8 பைரவர்களும் ஒரே கோவிலின் உள்ளே உள்ள சிறப்பு பெற்றது காமநாதீஸ்வரர்.

மகத நாடு,
வாணகோவரையன்,
வாணர்,
aragalur,
aragalur history,
kamanatha esvaran,
vannar
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
திங்கள், 10 பிப்ரவரி, 2014
500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஆறகழூர் காமநாதீஸ்வரர்
மீண்டும் ஒரு முறை இன்று 500
ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரில் உள்ள
சிற்பங்களை படம் எடுத்தேன்...கடவுள் சிற்பங்களும் உடன் ஆறகழூரை ஆண்ட
வாணர்கள்,சோழர்,பாண்டிய,விய யநகர
பேரரசர்கள்,கெட்டி முதலி வம்சம் இதில் யோரோ சிலர் சிற்பங்களும் இருக்க
கூடும்..ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் ஒன்று தெரிகிறது..தேருக்கு
அருகே உள்ள மேடையை 5 வயது முதல் பார்த்து வருகிறேன்.ஆனால் அதன் மீது ஏறி
பார்த்ததில்லை இன்று ஏறி பார்த்தேன்..2 சூலாயுதம்
வைத்திருக்கிறார்கள்..அந்த படிகளிலும் கூட கல்வெட்டுகள் உள்ளன..கல்வெட்டு
படிக்க தெரிந்த நண்பர்களை கூட்டி வந்து இங்கும் கோவிலிலும் உள்ள
கல்வெட்டுகளின் பொருளை அறிய வேண்டும்..
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
காமநாத ஈஸ்வரன்,
தேர் சிற்பங்கள்,
aragalur,
kamanatha esvaran,
theer sirpam
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
வசிஷ்டநதி ,வெள்ளாறு ஆறகழூர்
லேபிள்கள்:
ஆறகழூர் வரலாறு,
வஷிஷ்ட நதி,
aragalur,
aragalur history,
vashishta river
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
இதுவரை ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்கள்..மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்..
சாந்தி துளசிதாஸ் தற்போதைய தலைவர்ஆறகழூர் வரலாறு..முத்தம்பாயிரம் என்கிற பிச்சபிள்ளை (பொறுப்பு தலைவராக இருந்தவர்)...------------------------------------ஆறகழூர் வரலாற்றை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை...அந்த வகையில் ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்களை புகைப்படத்துடன் பதிய ஆசை ஒருவரின் படம் மட்டும் கிடைக்கவில்லை..அதையும் விரையில் படம் எடுக்கிறேன்....--------------------------------------------------------------------------------------------இதுவரை ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்கள்..மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்..-----------------------------------------------------------------------------1.சிதம்பர பண்டாரம்2.எம்.காமநாத மூப்பர்(முதலியார்)3.அம்பாயிரம் முதலியார்(3 முறை)4.எஸ்.வையாபுரி மூப்பர் முதலியார் (தீபாவளி மணியகாரர்)5.டி.சி.காமநாநாத முதலியார்(2 முறை)5.ஏ.ஆர்.பெரியசாமி முதலியார் ஆசிரியர்6.ராமலிங்கம் முதலியார்7.சுமதி கொளஞ்சி முதலியார்8.சாந்தி துளசிதாஸ்..மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இறந்ததால் இடைக்கால ஊராட்சி தலைவராக செயல்பட்டவர்1.முத்தம்பாயிரம் என்கிற பிச்சப்பிள்ளை... |
சாந்தி துளசிதாஸ்..சிறு வயதில் என் மாணவியாக இருந்தவர் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர்...குடி நீர் ,சாலை வசதி, மற்றும்
|
சுமதி கொளஞ்சி...என் வகுப்பு தோழன் கொளஞ்சியின் மனைவி..சென்ற 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவியாக பதவி
|
ராமலிங்கம்..இன்னமும் ஆறகழூர் மக்களுக்காக சிறப்பாக சேவை செய்கிறார்..காமநாதீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டியின் தலைவராக
|
ஏ.ஆர்.பெரியசாமி ஆசிரியர் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து பணி ஓய்வுக்கு பின் ஆறகழூர் ஊராட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். |
வையாபுரி முதலியார்(தீவாளி மணியகாரர்) ஆறகழூர் ஊராட்சி மன்ற தலைவராய் இருந்தவர் தன் பதவி காலத்திலே இயற்கை எய்தினார்.. |
அம்பாயிரம் முதலியார்..
|
எம்.காமநாத மூப்பர்..ஊராட்சி மன்ற தலைவர்
காமநாத மூப்பர்..-----------------
|
லேபிள்கள்:
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகழூர் ஊராட்சி,
ஆறகழூர் வரலாறு,
aragalur,
aragalur history,
aragalur pansayat
இருப்பிடம்:
ஆறகளூர், தமிழ்நாடு 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)