வியாழன், 14 டிசம்பர், 2017

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 3 - கன்னட துண்டு கல்வெட்டு

ரொம்ப சிரமப்படாம கிடைத்த கல்வெட்டு இது
சென்ற வருடம் அத்தை மருமகளுக்கு வளைகாப்பு. அந்த நிகழ்சிக்காக ஆறகழூர் தேரோடும் வீதியில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். சின்ன வயசில் இருந்து விளையாடிய இடம்தான் அது. முதல் பந்தியில் சாப்பிட்டுகிட்டு இருந்தாக..நான் வெளியே நாற்காலியில் உட்காந்துகிட்டு இருந்தேன்..வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் மாடெல்லாம் கட்டி வச்சிருப்பாங்க..
அருகில் உட்காந்திருந்த ஒருவர் என்னப்பா வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..
நல்லா போயிட்டு இருக்கண்ணே..
எவ்வளவு பழமையான ஊரு இது .ஒரு தேரு போட்டா சுத்தி இருக்கிற எல்லா ஊரில் இருந்தும் சனம் வரும். ஒரு வாரத்துக்கு ஊரே அமக்களப்படும்..இப்ப தேர் போட்டே ரொம்ப வருசமாச்சி...
எடுத்து செய்ய ஆள் இல்லன்ன.....எல்லாத்துக்கும் அவங்கவங்க வேலை..பாதிபேர் வெளியூரில் வேலை கிடைச்சி அங்கியே செட்டில் ஆயிட்டாங்க..இங்க கொஞ்சபேர்தான் இருந்து அல்லாடிகிட்டு இருக்கோம்.
இப்படியே உரையாடல் தொடர்ந்தது.
சட்டுன்னு உச்சா வர்ர மாதிரி இருந்திச்சி..போயிட்டு திரும்பி வரும்போது வழியில் ஒரு கல்லு நின்னுச்சி .வழக்கம் போல் அந்த கல்லை உத்து உத்து பாத்தேன்..
அட...சூப்பரு.. 2 வரியில் எழுத்துக்கள் இருந்திச்சி..
சந்தோசத்தில் தலை கால் புரியல...ஆனா அது கன்னடத்தில் இருந்துச்சி...அதை அப்படியே என் செல்லில் உள் வாங்கிகொண்டேன்..
அதை முகநூலில் பதிவு செய்த போது நண்பர்கள் அதை படித்து சொன்னார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் 2 வார்த்தையா இருந்தாலும் முக்கியமான வார்த்தைகள்.
ஆறகழூர் காமநாதயீஸ்வரன் கோயில் இருப்பதால்
பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பல குடும்பங்களில் காமநாதன் என்று பெயர் வைப்பார்கள்.
12 ஆம் நூற்றாண்டு கோயிலான திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் தேவரடியார்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இறைவனுக்கு பூசை செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர். கல்வெட்டுகளும் இவர்களை பற்றி பேசுகின்றன..இவர்கள் மாணிக்கிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இந்த கல்வெட்டில் இருந்த இரு வார்த்தைகள் இவைதான்
காமநாத
மாணிக்ய
இது 2017 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறகழூர் கன்னட கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
காலம் :18 ஆம் நூற்றாண்டு
இடம் : தேரோடும் வீதி மணி வீட்டுக்கு பின்புறம்
செய்தி : பெயர் குறித்துள்ள
கல்வெட்டு வாசகம்
1.காமநாத
2. மாணிக்ய
ஆறகழூர் கன்னட கல்வெட்டு

காமநாத
மாணிக்ய

ஆவணம் 2017கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக