ashtapairavar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ashtapairavar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2015

aragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கேற்பு


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்றது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொண்டார்கள்....தினத்தந்தி செய்தி


வெள்ளி, 13 மார்ச், 2015

aragalur-ஆறகழூர்


காலத்தின் குரல்....மனசாட்சியின் குரல்....

------------------------------------------------------------------------------





--

1000 ஆண்டுகளுக்கு முன் சிவனுக்காக புகழ் பெற்ற ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீச்சுரம்)  ஆலயம் பல ஏற்ற தாழ்வுகளுக்கு பின் இன்று பைரவருக்காக தமிழகம் முழுக்க புகழ் பெற்று விளங்குகிறது.....யாருக்காக புகழ் பெற்றால் என்ன..???? புகழ் பெறுவது என் ஊர்..என் கிராமம்...இழந்த பெருமையை மீட்டெடுக்க யார் உதவி செய்தால் என்ன...???? !!!!1
மண்ணின் வேட்கை....என் மண்ணின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் நானும் ஒரு சுயநலவாதியே......

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரமுடைய நாயனார்)கோவில் பைரவர் பூசை


இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற உள்ளது...

மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்..
வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்...




செவ்வாய், 20 ஜனவரி, 2015

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி7

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி6

நடராஜர்-சிவகாமி அம்மன் ஆருத்ரா தரிசனம் காணொளி காட்சி5

ஞாயிறு, 30 மார்ச், 2014

அஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

21-5-2010 முதல் 28-9-2010 வரை;

3-1-2011 முதல் 14-11-2010 வரை

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதில் 15-7-2010 முதல் 28-9-2010 வரை உத்திரட்டாதியில் வக்ரமாக சஞ்சரிப்பார். மீன ராசிநாதன்- ராசிக்கு 11, 12-க்குடையவர் சாரம் பெறுவதால் லாபமும் உண்டாகும்; சுபவிரயங்களும் உண்டாகும். சிலர் வெளியூர்ப் பயணம், வெளியூர் வாசம் போகலாம். குருவின் வக்ரத்தில் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்களைச் சந்திக்க நேரும்.

பரிகாரம்: சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
நக்கீரன் இதழில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5426

வெள்ளி, 28 மார்ச், 2014

ஆறகழூர் அஷ்டபைரவர்

நவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்


----------------------------------------------------------------------------------------------
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான்.

தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார். நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது அஷ்டபுஷ பைரவர் தோற்றம்...



ஆறகழூர் செய்திகள்:

நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது  பைரவர் தோற்றம்...

ஆறகழூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு

@ஆறகழூர் செய்திகள்

:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பைரவர் பூசையின் போது அஷ்டபுஷ பைரவர் தோற்றம்...