செவ்வாய், 11 மார்ச், 2014

வாணவராயன் மகதை பெருமான்

ஆகவ ராமன்
88.

ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்
கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே
வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்
வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே.

(க-ரை) ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த
பாண்டியன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும்.
வேப்பமாலையும், மீனக்கொடியும் இன்னுந் தனக்குள்ள விருதுகளையும்
மகிழ்ந்து அளிக்க ஏற்றுக்கொண்ட சூரியகாங்கேயனும் கொங்கு மண்டலம்
என்பதாம்.

வரலாறு : தனக்கு அடங்காது மீறி நடக்கும் ஆறகழூர் வாணனைத்
தந்திரமாகப் பிடித்துத் தன்முனிறுத்திய சூரியகாங்கேயனது வலிமையைக்
கண்ட பாண்டியன் மனது மகிழ்ந்து ஆகவராம பாண்டியன் என்ற தங்களது விருதுப் பெயரும், வேப்ப
மாலையும், மீனக்கொடியும் இன்னும் தனக்குள்ள விருதுகளையும் எழுகரை
நாட்டாதிக்கமுங் கவரவமாகக் கொடுத்து உபசரித்தனுப்பினன். அவைகளை
ஏற்றுக்கொண்டு கம்பீரமாக வாழ்ந்திருந்தனன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக