செவ்வாய், 11 மார்ச், 2014

(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..


aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..?

படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது..போரிட்டு வெல்ல முடியாமல் வஞ்சகத்தால் வென்றனர் எமது ஊர் மன்னனை...900 ஆண்டுகள் கழித்து படிக்கும்போதே ரத்தம் கொதித்தால் அந்த காலத்து மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்....ராஜ விசுவாசம் ரொம்ப இருந்திருக்கும் உயிரை துச்சமாய் மதித்து போரிட்டு இருப்பார்கள்....நாம் பிறந்த மண்ணின் மீதுள்ள பாசம் எப்போதும் குறையாது.....

-------------------------------------------------------------------------------------
கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் பக்க எண்..67 பாடல் 54 பொன் பரப்பிய மகதை பெருமானை பற்றி இப்படி சொல்கிறது...
----------------------------------------------------------------------------------------------
சூரிய காங்கேயன்
54.

வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே.

(க-ரை) தமிழ் நாட்டு மூன்று மன்னர்களையுந் திகிலடையும் படி
செய்ய வல்ல ஆறகழூர் வாணனைப் பிடித்து, பாண்டியன் முன்னம்
நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு : சேலஞ் ஜில்லாவும் ஆற்காடு ஜில்லாவும் சந்திக்கிற
இடத்தில் ஒன்றினுள் ஒன்றாக ஆறு அகழிகளால் சூழப்பெற்றதான
ஆறகழூர், மகத மண்டலம் - (அது மலாடு ஜனனாதவள நாடு) அவ்விடத்து
மாவலிவாண வமிசத்தானான வாண அரசனானவன் பராக்கிரமத்தோடு
அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நாடு நாட்டதிபதியானதால் மகதைப்
பெருமாள் என்னும் மற்றொரு பெயரும் உள்ளான். இவன் சேர சோழ
பாண்டியர்களான மூவேந்தரையும் மதிப்பதில்லை குறும்பு செய்வன். ஆனால்
பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளான். இவனை யாரேனும் பிடித்துத்
தன்முன் அடக்கி நிறுத்துவரேல் வேண்டுவன உதவுவேன் எனப் பாண்டியன்
பறைசாற்றுவித்தான். கீழ்கரைப் பூந்துறை மோரூர் கண்ண குலத்தானான
சூரியன் என்னுஞ் சேனா வீரவாலிபன், இதனை முடிப்பதாக முன் வந்தான்.
தனக்கு வேண்டிய சாதனங்களைப் பெற்றுப்போய் ஆறகழூரில் மாறுவேடம்
பூண்டு உளவறிந்திருந்தான். சமயம் வாய்த்த பொழுது உடன் வந்த
துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளால் எடுத்தபடியே மகதை எல்லை கடந்து கொண்டு வந்து விட்டான். இடையே வைக்கப்பட்டிருந்த
பாண்டிவீரர்கள் சேர்ந்து கொண்டார்கள். மலைமேற் சுற்றுக்
கோட்டைகளுள்ள சங்ககிரி துர்க்கத்திற் பாண்டிய ராஜன் முன்
கொண்டு வந்து நிறுத்தினான்.

ஆறை வாணனைக் குறித்த செய்யுட்கள் திருவண்ணாமலை
அருணாசலேசுரர் ஆலயமுதற்பிராகரத்து வடவண்டைச் சுவரில்
செதுக்கப்பட்டுள்ளன
.
அவற்றுளொன்று:
"கொங்குங் கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்
தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்
பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்
செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே"

இவனைப் பற்றிய சாசனம் ஆறகமூர் காமநாதேசுரர் ஆலயத்து
மிருக்கிறது. கி.பி. 1178-ல் இருந்திருக்கிறான். அப்பொழுது மூன்றாங்
குலோத்துங்கன் காலம்.


சூரிய காங்கேயனைப் பற்றிய செய்யுட்கள்

மிண்டாறை வாணனைமன் வெட்டாமற் பாண்டியனோ
கொண்டு வந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ
தெண்டிரைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே
மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ்சூரிய காங்கேயனே"
(பழம் பாடல்)

பூதந் துனைகொண்ட போர்வாணன் மாறனிரு
பாதத் துணைகாணப் பண்ணினோர் ஓதுமிசை
ராமா யணங்கேட்டோர் நவலர்வைப் புப்பொருளாங்
கோமான்வாழ் மோரூர் குடி.
(பழம் பாட்டு)

1 கருத்து: