திங்கள், 17 மார்ச், 2014

ஆறகழூர் அய்யனார் கோவில்

ஆறகழூர் அய்யனார் கோவில் கோட்டைகரை கொத்தர்களின் குல தெய்வம் ..அய்யனார் கோவில் நுழைவு வளைவு கட்டி திறப்பு விழா 12-03-2014ல் நடை பெற்றது. நுழைவு வாயில் கட்டியவர் அரு.மாணிக்கம் குடும்பத்தை சார்ந்த ஹை-டெக் பாலு..





ஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு


ஆறகழூர் துக்க செய்தி..
----------------------------------------------
ஆறகழூர் பள்ளியில் படித்த பல மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும்,கல்வி மாணவர் முன்னேற்றத்தின் பால் பெரு அக்கறை கொண்டவருமான திரு ஆசிரியர் கணேசன் அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் இயற்கை எய்தினார்..மாணவர் சமுதாயத்தின் சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் கல்வித்துறையின் துரோணாச்சியார் அண்ணார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....அவர் மறைந்தாலும் அவரின் சேவை அவரை நினைவு கொள்ள வைக்கும்...


வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?
http://bit.ly/1gwgd4Y



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -
http://www.elections.tn.gov.in/searchid.htm
...மேலும் பார்க்க
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?
http://bit.ly/1gwgd4Y


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -
http://www.elections.tn.gov.in/searchid.htm


பதிவு மற்றும் திருத்தங்களுக்கு
http://www.elections.tn.gov.in/eregistration/


பிற விபரங்களுக்கு - http://www.elections.tn.gov.in/

ஆறகழூரில் கொலை

ஆறகழூர் சலவை தொழிலாளி ராமலிங்கம் கொலையில் துப்பு துலங்கியது.....மகன் ,மருமகன் கைது..
---------------------------------------------------------------------------------------------

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மகன் உள்பட மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆத்தூர் அருகே தலைவாசலை அடுத்துள்ள வடசென்னிமாலை அருகே கடந்த 12-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது.

தலைவாசல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ராமலிங்கம், அடிக்கடி காணாமல் போய் விடுவாராம். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லை.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியுடன் வந்த ராமலிங்கம் வீட்டிலிருந்த மகளை குத்திக் கொன்று விடுவேன் என்று கூறி விரட்டினராம். இதைப் பார்த்த அவரது மகன் செந்தில்குமார் (31), மருமகன் வசந்தகுமார் (38) ஆகியோர் சேர்ந்து ராமலிங்கத்தின் கழுத்தை நெரித்ததில், அவர் உயிரிழந்தார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலத்தை வடசென்னிமலை முருகன் கோயில் அருகே வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் செந்தில்குமார், வசந்தகுமாரையும், இவர்களுக்கு உதவியதாக வசந்தகுமாரின் நண்பர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Aragalur-இல்.

செவ்வாய், 11 மார்ச், 2014

(aragalur)ஆறகழூரில் சாலை விரிவாக்கம்


4 நாளா இணைய இணைப்பு இல்லை பாலம் வேலையால் இண்டெர் நெட் இணைப்பு கேபிள்கள் அறுந்தன...இன்று மாலைதான் இணைப்பு சரியானது...ஆனா இந்த 4 நாளில் உருப்படியான வேலைகள் நிறைய நடந்தது....

ஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ் எழுத்தணி வைப்பு முறை....

ஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ் எழுத்தணி வைப்பு முறை....
-----------------------------------------------------------------------------------
தொகுப்பாசிரியர்
செந்தமிழ் சொற்பிறப்பியல்
அகர முதலி இயக்கம்
அருங்காட்சி வளாகம்
எழும்பூர் ,சென்னை..
_________________________________________________
http://infitt.org/drupal7a/TI%20conference%20papers/TI%202000/Pages%20from%20papersA-5.pdf

(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..


aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்த மகதை கோவரையன்கள் துரோகத்தால் வீழ்ந்தது எப்படி..?

படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது..போரிட்டு வெல்ல முடியாமல் வஞ்சகத்தால் வென்றனர் எமது ஊர் மன்னனை...900 ஆண்டுகள் கழித்து படிக்கும்போதே ரத்தம் கொதித்தால் அந்த காலத்து மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்....ராஜ விசுவாசம் ரொம்ப இருந்திருக்கும் உயிரை துச்சமாய் மதித்து போரிட்டு இருப்பார்கள்....நாம் பிறந்த மண்ணின் மீதுள்ள பாசம் எப்போதும் குறையாது.....

-------------------------------------------------------------------------------------
கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் பக்க எண்..67 பாடல் 54 பொன் பரப்பிய மகதை பெருமானை பற்றி இப்படி சொல்கிறது...
----------------------------------------------------------------------------------------------
சூரிய காங்கேயன்
54.

வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே.

(க-ரை) தமிழ் நாட்டு மூன்று மன்னர்களையுந் திகிலடையும் படி
செய்ய வல்ல ஆறகழூர் வாணனைப் பிடித்து, பாண்டியன் முன்னம்
நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு : சேலஞ் ஜில்லாவும் ஆற்காடு ஜில்லாவும் சந்திக்கிற
இடத்தில் ஒன்றினுள் ஒன்றாக ஆறு அகழிகளால் சூழப்பெற்றதான
ஆறகழூர், மகத மண்டலம் - (அது மலாடு ஜனனாதவள நாடு) அவ்விடத்து
மாவலிவாண வமிசத்தானான வாண அரசனானவன் பராக்கிரமத்தோடு
அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நாடு நாட்டதிபதியானதால் மகதைப்
பெருமாள் என்னும் மற்றொரு பெயரும் உள்ளான். இவன் சேர சோழ
பாண்டியர்களான மூவேந்தரையும் மதிப்பதில்லை குறும்பு செய்வன். ஆனால்
பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளான். இவனை யாரேனும் பிடித்துத்
தன்முன் அடக்கி நிறுத்துவரேல் வேண்டுவன உதவுவேன் எனப் பாண்டியன்
பறைசாற்றுவித்தான். கீழ்கரைப் பூந்துறை மோரூர் கண்ண குலத்தானான
சூரியன் என்னுஞ் சேனா வீரவாலிபன், இதனை முடிப்பதாக முன் வந்தான்.
தனக்கு வேண்டிய சாதனங்களைப் பெற்றுப்போய் ஆறகழூரில் மாறுவேடம்
பூண்டு உளவறிந்திருந்தான். சமயம் வாய்த்த பொழுது உடன் வந்த
துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளால் எடுத்தபடியே மகதை எல்லை கடந்து கொண்டு வந்து விட்டான். இடையே வைக்கப்பட்டிருந்த
பாண்டிவீரர்கள் சேர்ந்து கொண்டார்கள். மலைமேற் சுற்றுக்
கோட்டைகளுள்ள சங்ககிரி துர்க்கத்திற் பாண்டிய ராஜன் முன்
கொண்டு வந்து நிறுத்தினான்.

ஆறை வாணனைக் குறித்த செய்யுட்கள் திருவண்ணாமலை
அருணாசலேசுரர் ஆலயமுதற்பிராகரத்து வடவண்டைச் சுவரில்
செதுக்கப்பட்டுள்ளன
.
அவற்றுளொன்று:
"கொங்குங் கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்
தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்
பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்
செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே"

இவனைப் பற்றிய சாசனம் ஆறகமூர் காமநாதேசுரர் ஆலயத்து
மிருக்கிறது. கி.பி. 1178-ல் இருந்திருக்கிறான். அப்பொழுது மூன்றாங்
குலோத்துங்கன் காலம்.


சூரிய காங்கேயனைப் பற்றிய செய்யுட்கள்

மிண்டாறை வாணனைமன் வெட்டாமற் பாண்டியனோ
கொண்டு வந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ
தெண்டிரைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே
மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ்சூரிய காங்கேயனே"
(பழம் பாடல்)

பூதந் துனைகொண்ட போர்வாணன் மாறனிரு
பாதத் துணைகாணப் பண்ணினோர் ஓதுமிசை
ராமா யணங்கேட்டோர் நவலர்வைப் புப்பொருளாங்
கோமான்வாழ் மோரூர் குடி.
(பழம் பாட்டு)