ஆறகழூர் சலவை தொழிலாளி ராமலிங்கம் கொலையில் துப்பு துலங்கியது.....மகன் ,மருமகன் கைது..
------------------------------ ------------------------------ ------------------------------ ---
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மகன் உள்பட மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆத்தூர் அருகே தலைவாசலை அடுத்துள்ள வடசென்னிமாலை அருகே கடந்த 12-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது.
தலைவாசல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ராமலிங்கம், அடிக்கடி காணாமல் போய் விடுவாராம். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியுடன் வந்த ராமலிங்கம் வீட்டிலிருந்த மகளை குத்திக் கொன்று விடுவேன் என்று கூறி விரட்டினராம். இதைப் பார்த்த அவரது மகன் செந்தில்குமார் (31), மருமகன் வசந்தகுமார் (38) ஆகியோர் சேர்ந்து ராமலிங்கத்தின் கழுத்தை நெரித்ததில், அவர் உயிரிழந்தார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலத்தை வடசென்னிமலை முருகன் கோயில் அருகே வீசிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் செந்தில்குமார், வசந்தகுமாரையும், இவர்களுக்கு உதவியதாக வசந்தகுமாரின் நண்பர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். — Aragalur-இல்.
------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக