புதன், 25 மார்ச், 2015
aragalur-ஆறகழூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் மீனவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 30-03-2015 திங்கள் கிழமை காலை 6-7 க்குள் நடைபெற உள்ளது..அனைவரும் வருக..இதற்கான அழைப்பிதழும்...இவ்விழா தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளும்..ஊரை களை கட்ட வைத்துள்ளது..அன்று இரவு இன்னிசை நிகழ்சி(ஆர்கெஸ்ட்ரா)நடைபெற உள்ளது
புதன், 18 மார்ச், 2015
aragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கேற்பு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்றது...
மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொண்டார்கள்....தினத்தந்தி செய்தி
லேபிள்கள்:
அஷ்டபைரவர்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
காமநாதீஸ்வரர் கோவில்,
aragalur,
ashtapairavar,
kamanatha esvaran,
siva temple
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஆறகழூர் பருவதராஜ குலத்தின் சார்பாக அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் கும்பாவிசேகம்
லேபிள்கள்:
அங்காளம்மன்,
ஆறகலூர்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
பொன்.வெங்கடேசன்,
ankala parameswari amman,
aragalur,
pon.venkatesan
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
aragalur-ஆறகழூர் அருகே புளியங்குறிச்சி இந்திராநகர் பள்ளியில் பேய் பீதி
ஆறகழூர் அருகே பேய் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ள இந்திரா நகர் அரசு பள்ளியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், வீரகனூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பேய் நடமாடுவதாக பீதி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சி ஊராட்சியில் இந்திராநகர் உள்ளது. இந்த பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 28 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக மருதமுத்து என்பவரும், ஒரு ஆசிரியரும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் பேய் நடமாட்டம் உள்ளதாக கடந்த சில நாட்களாக பீதி ஏற்பட்டது. குறிப்பாக பள்ளி வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புத்தகப்பைகளில் எலுமிச்சைப்பழம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து அனுப்பினர். இந்த பேய் நடமாட்டம் பீதி குறித்து ‘தினத்தந்தி‘யில் நேற்று செய்தி வெளியானது.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
இதன் எதிரொலியாக, தலைவாசல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மா.நெடுமாறன், வீரகனூர் வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் கைலாசம் ஆகியோர் நேற்று அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர்களான சதீஸ், சந்தோஷ், சஞ்சய், ரம்யா, யுவராணி, தமிழ்செல்வன், அரவிந்த் அருண் ஆகியோரிடமும், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின் போது, பள்ளியில் ஏற்கனவே மயங்கி விழுந்த மாணவ,மாணவிகளுக்கு தலைவாசல் அரசு மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், உடல் நலம் சரியான பின்னர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படியும் பெற்றோர்களிடம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நெடுமாறன் அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.
இந்திரா நகரில் ஏற்பட்டுள்ள நில பிரச்சினை காரணமாக ஒரு சிலர் மந்திரவாதி மூலம் செய்வினை செய்து இதுபோன்ற கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதாக அதிகாரிகளிடம் பொதுமக்களில் சிலர் கூறினார்கள். இதுபோன்ற பிரச்சினை மறுபடியும் ஏற்படாமல் இருக்க மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
செவ்வாய், 17 மார்ச், 2015
aragalur-ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்.
ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்..
----------------------------------------------------------------------------தினம் ஆறகழூர் ஏரிகரை வழியாக வரும்போது தியாகனூர் ஏரியில் மான்,மயில் இருக்கான்னு பாத்திட்டே வருவேன்...இது வரை மான் கண்ணில் சிக்கல...ஆனா மயிலை அடிக்கடி பாத்திருக்கேன் ,,ஆனா படம் எடுக்க முடியல...இன்னிக்கி காலை வரும்போது ஏரி அருகே உள்ள வயலில் நெல் அறுவடை செய்திருந்ததால் அங்கு கூட்டமாய் மயில் இருந்தது...பைக்கை நிறுத்திட்டு கேமிரா எடுப்பதற்க்குள் பாதி மயில் ஓடி போச்சி...5 மயில்கள் கேமிராவின் கண்களுக்கு சிக்கியது
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகழூர் ஏரி,
ஆறகளூர்,
தியாகனூர்,
தியாகனூர் ஏரி,
aragalur,
aragalur lake,
peecock,
thiyakanur lake
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஞாயிறு, 15 மார்ச், 2015
aragalur-ஆறகழூரில் 2 தலையுள்ள ஆடு
லேபிள்கள்:
2 தலை ஆடு,
2 head goat,
ஆடு,
ஆறகழூர்,
ஆறகளூர்,
பொன்.வெங்கடேசன்,
aragalur,
goat
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)