வியாழன், 20 பிப்ரவரி, 2014

ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....

ஆறகழூரின் பழைய பெயர் ஆறை.....

---------------------------------------------------------

பழைய பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் ஆறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.....

காமநாத கோவையில் வரும் பாடலிலும்

வினோத ரசமஞ்சரியில் குறிப்பிட்டுள்ள பாடலும்

ஆறை என்றே குறிப்பிடுகிறது..இந்த இரண்டு பாடல்களும் ஆறை நகரின் பெருமையை எடுத்து சொல்கின்றன.....










கூகையூர் அடிகளாசிரியர் தொகுத்த காமநாத கோவையின் பாடலும் பொருளும்.....

”சங்கீன்ற முத்தனைத் தன்னின மென்றேகருதி
அங்கம் குருகணைக்கும் ஆறையே!- எங்கோன்
முருகன் அவதரியா முன்னாளில் காமன்
உருவமுடன் பூசித்த ஊர்.”

இந்த பாடலின் பொருள்..
----------------------------------------------
அன்னங்கள் வாழும் அளவிற்கு நீர்,நில வளம் மிக்க ஊர்,ஆழ்கடல் முத்துக்கள் நீர் நிலைகளில் தோன்றியுள்ளன.அம்முத்துக்களை அன்னங்கள் தம் இனமென்று கருதி அணைத்து சென்றன.இத்தகைய வளமிக்க ஊரே ஆறகழூர்..
இவ்வூரை இப்பாடல் ஆறை என்றே கூறுகிறது...

புலவறாற்று படையில்----வினோத ரச மஞ்சரி என்ற நூலில் வாணர் குல பெருமையையும் ஆறகழூர் பெருமையையும் பேசுகிறது..........அந்த பாடல்.....
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெனது நாமமேது புகழ்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!

இந்த பாடலின் பொருள்..
---------------------------------------------
ஒரு புலவர் வாணர் குல மன்னரிடம் பாடல்கள் பாடி பரிசு பெற எண்ணி நடந்து போய் கொண்டிருக்கிறார் அப்போது அவர் முன் தேரில் அமர்ந்து பொன் பொருளோடு ராஜ கம்பீரமாய் ஒருவர் வருகிறார்..அவரை மன்னன் என எண்ணி புலவர் வணங்குகிறார்..அப்போது தேரில் வந்தவர்..நானும் உம்மைபோல் ஒரு புலவன்தான் ஆறை நகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்து கொடுத்த செல்வங்கள்தான் இவை ..நீயும் சென்று பரிசை பெற்று கொள் என சொல்லி போகும் வழியின் அடையாளத்தையும் சொல்கிறார்......
மாட மாளிகையும் கூட கோபுரங்களும் நிறைந்திருக்கும் ஆலமரம்,வேப்பமரம் ,பனைமரம் எல்லாம் நிறைந்திருக்கும்
அங்கு அரசர்கள் எல்லாம் வாணபூபதியை காண காத்திருப்பர்....
என்று வழி சொல்லி அனுப்புவர்......
இயல்பாகவே புலவர்கள் தங்களுக்கு உதவியர்களின் பெருமையை மிகைப்படுத்தி பாடுவர் எனினும் அடிப்படை உண்மை மாறாது...........
இத்தகைய பெருமையையும் இயற்கை வளமும் கொண்ட ஆறகழூர் தற்காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமையாததால் சுருங்கி சின்ன கிராமமாய் இருக்கிறது......
இருப்பினும் தேய்பிறை அஷ்டமி அன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள்......8 பைரவர்களும் ஒரே கோவிலின் உள்ளே உள்ள சிறப்பு பெற்றது காமநாதீஸ்வரர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக