செவ்வாய், 27 ஜூன், 2017

ஆணி செருப்பு பாத குறடு

ஆணி செருப்பு

ஆத்தூர் அருகே வளையமாதேவிக்கும், மஞ்சினிக்கும் இடையே குன்னுடையான் கோயில் என்ற ஓர் கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஒரு ஆணி செருப்பு ஒன்று பார்த்தேன். இந்த மாதிரி ஆணி செருப்பு நீங்க பாத்திருக்கீங்களா..???
அது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது கிடைத்த செய்தி..ஓர் அறிவியல் விளக்கம்
காவடி தூக்கும்போது சிலர் ஆணிச்செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகளின் மேல் முனை, அதாவது கால்வைக்கும் பகுதி (பரப்பு) கூராக இருக்கும். கூர் ஆணிகள் மீது கால்வைத்து ஏறிநின்று, ஆணிச்செருப்பைப் போட்டுக் கொண்டே நடப்பார்கள்.
இதைப் பார்க்கின்ற பக்தர்கள், ஒரு ஆணி குத்தினாலே எவ்வளவு வலிக்கிறது, இரத்தம் வருகிறது. ஆனால், இவ்வளவு கூர் ஆணியில் ஏறி நடக்கிறாய் வலிக்கவில்லை; இரத்தம் வரவில்லை! எப்படி?கூர்மையான ஆணிகளாக இருந்தாலும் அவை நெருக்கமாகவும், ஒரே மட்டமாகவும் இருப்பதால்தான் ஆணி காலில் குத்துவதில்லை. அதனால்தான் வலிப்பதில்லை, இரத்தம் வருவ-தில்லை. மாறாக ஒரேஒரு ஆணி மட்டும் இருந்து அதன்மீது ஏறினால் காலில் ஏறிவிடும். அதேபோல் நிறைய ஆணிகள் இருந்து, அதில் ஒரே ஒரு ஆணிமட்டும் உயரமாக இருந்தால், அந்தச் செருப்பில் ஏறும்போது அந்த ஆணி குத்திவிடும்.
ஆணிச் செருப்பு காலில் குத்தாமல் இருப்பதற்குக் காரணம், ஆணிகள் நெருக்கமாக அதிக அளவில் இருப்பதும், ஆணிகளின் கூர் ஒரே மட்டமாக இருப்பதுமே காரணம்.
ஒரே ஒரு கூர் ஆணியில் நாம் ஏறினால் நம் எடை முழுக்க அந்த ஆணியை அமுக்க, அந்த அழுத்தத்தில் கூர் ஆணி காலில் ஏறிவிடும். நிறைய ஆணிகள் சமமாக இருந்து அதில் ஏறும்போது நம் எடை எல்லா ஆணி-களிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஒரு தனி ஆணியிலும் கால் பதிவதில்லை. அதனால் ஆணிச் செருப்பு குத்துவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக