aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்
கி.பி.1207 ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஆறகழூர் திருக்காமீசுவரமுடைய நாயனார்(காமநாதீஸ்வரர்) கோவில் திருக்கோலம் பூண்டிருந்தது கோவில் எங்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம்..அனைவர் முகத்திலும் அளவில்லா மகிழ்சி...
மன்னர் வாணகோவரையர் மற்றும் சான்றோர்கள் அமர்ந்துள்ளனர்.
ஆறகழூரை சார்ந்த செல்வன் சிவதொண்டன் மாலை மரியாதையோடு அழைத்து வரப்படுகிறார்...மக்கள் கரகோசம் செய்து சிவ தொண்டனை வரவேற்கின்றனர்......
அப்படி என்ன செய்து விட்டார் சிவதொண்டன்.....?
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் ஆகியோருக்கு சிலைகள் செய்து அதை கோவிலின் சுற்றுபிரகாரத்தில் அமைத்து நால்வருக்கும் திருமஞ்சனம்,திருவிளக்கு திருப்பள்ளிதாமம்,மற்றும் கோவில் பூசை செலவினங்களுக்காக 5,000(அய்யாயிரம்)பொற்காசுகளை கொடையாக வழங்கி அதை கோவிலின் கருவூலத்தில் சேர்த்தார்....
அந்த கொண்டாம்தான் இந்த விழா....
எத்தனையோ முறை கோயிலுக்கு சென்றபோதும் கண்ணில் படவில்லை சிவ தொண்டன்......கல்வெட்டுகளில் இதை படித்து விட்டு சிவதொண்டனை தேடினேன்... 808 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆறகழூர் செல்வ சீமான் இன்று என் கண்களுக்கு சிக்கினார்...
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் சிலைகளுக்கு முன்புறம் உள்ள தூணில் அழகு மிளிர நிற்கிறார் சிவ தொண்டன்....
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் பல மன்னர்கள்,அரசிகள் உருவம் தெரிந்த போதும் அவர்கள் யார்..?அவர்கள் பெயரென்ன என்பதை அறிய முடியவில்லை.....ஆனால் சிவ தொண்டன் உருவத்துக்கு மேலே செல்வன் சிவத்தொண்டன் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது.....
800 வருடத்துக்கு முன் எங்கள் ஆறகழூரை சார்ந்த ஒரு முன்னோரின் முகம் பார்த்ததில் மனம் துள்ளி குதிக்கிறது
நீங்கள் காமநாதீஸ்வரர் கோவிலுக்கு வரும் போது இந்த சிவ தொண்டனை கண்டு களியுங்கள்....
அக்காலத்தில் ஒரு பொற்காசு என்பது 100 சோழிய காசுகள்..
சிவதொண்டன் 5,000 பொற்காசுகள் கொடுத்தது அக்காலத்தில் ஆறகழூரின் வளமையையும் செல்வ செல்வ செழிப்பையும் உணர்த்துவதாகவே உள்ளது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக