.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள நவகண்ட சிலைகள்.
.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள நவகண்ட சிலைகள்...
.
....மொத்தம் 6
..இவை இன்னும் முறைப்படி முழுமையாக ஆவணப்படுத்த படவில்லை..பேஸ்புக்கில் மட்டுமே என்னால் பதியப்பட்டுள்ளது... இவற்றை எப்படி ஆவணப்படுத்துவது..??.....மொத்தம் 6..இவை இன்னும் முறைப்படி முழுமையாக ஆவணப்படுத்த படவில்லை..பேஸ்புக்கில் மட்டுமே என்னால் பதியப்பட்டுள்ளது... இவற்றை எப்படி ஆவணப்படுத்துவது..??
---------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை நவகண்டமுன்னா என்னான்னே எனக்கு தெரியாது...நான் பிறந்த மண்ணான ஆறகழூரின் வரலாற்றை அறிய ஆர்வம் வந்த போது ஆங்காங்கே சிதறி கவனிப்பார் இன்றி இருந்த சில சிலைகளை உற்று கவனித்தேன்...சின்ன வயசில் இருந்து பார்த்ததுதான் என்றாலும் ஊன்றி அதை கவனித்ததில்லை...
பேஸ்புக்கில் நடுகற்கள் குழுவில் பதியப்படும் படங்களை பார்த்த பின்னரே இவையும் நவ கண்டம் என புரிந்தது ..இது வரை 6 நவகண்ட சிலைகள் பார்வைக்கு வந்துள்ளது...
இந்த சிற்பங்கள் ஒன்றிலும் எழுத்துக்கள் இல்லை...அதனால் அவர்கள் யார்..?அவர்களின் வரலாறு என்ன என்று அறிந்து கொள்ள முடியவில்லை.....
சிற்பங்களின் அமைப்பை வைத்து அதன் காலத்தை வல்லுனர்கள் மதிப்பிட்டால் ஒரளவு வரலாறு விளங்கும்....
மொத்தம் 6 நவகண்டங்கள்..
1.திருகாமீச்சுரமுடைய நாயனார் கோவில் முன் அரசு ஆரம்ப பள்ளின் முன்2.வெளிப்பாளயத்தில் காட்டுக்குள்3,4,5...மூன்றும் அம்பாயிரம்மன் கோயிலின் உள்ளே..6.திருக்காமீசுர நாயனார் கோவிலின் உள்ளே......
நவகண்டம் அரி கண்டம் என்றால் என்ன ..?ஒரு விளக்கம்..
-------------------------------------------------------------------------------------------------
நவகண்டம் என்பது தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வதாகும். இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.............
-------------------------------------------------------------------------------------------------
நவகண்டம் என்பது தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வதாகும். இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.............
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் / அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு:
1. வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
3. நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
4. குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவது.
5. ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
6. ஒருவன் மிகப் பெரிய அவமானத்தை பெற்றபின் அதற்க்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புகிறான். ஆனால் கோழை மாதிரி சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.
ஆனால் பிற்காலங்களில் கோவில் கட்டுவதற்க்கு, தடைபட்ட தேரோட்டத்தை நடத்த இன்னும் பல காரணங்களுக்காக நவகண்டம் நடந்தது.......
ஆறகழூரில் உள்ள இந்த 6 பேரும் எதற்காக சுய தலை பலி கொடுத்து கொண்டார்கள்..?????
ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..
ஆறகழூரில் உள்ள இந்த 6 பேரும் எதற்காக சுய தலை பலி கொடுத்து கொண்டார்கள்..?????
ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக