வெள்ளி, 29 மே, 2015
ஆறகழூர் சதிக்கல்-நடுகல்
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஆறகழூர் சதிக்கல்(கோட்டைகரையான்)
ஆறகழூர் கோட்டை கரையில் உள்ள சிலை இது ஒரு நடு கல். சதி கல்லாக இருக்ககூடும். நாங்க இதை முனி என்று சொல்லி வழி படுகிறோம்
.வருடம் ஒரு முறை இதற்க்கு ஆடு கோழி பலியிட்டு வணங்கப்படுகிறது...அடர்த்தியான புளிய மரங்களுக்கு நடுவில் உள்ளது..இரவு நேரங்களில் இந்த முனியின் நடமாட்டம் இருக்கும் என்பது கோட்டைகரை மக்களின் நம்பிக்கை
இது ஒரு நடுகல்...சதி கல்லாக இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..இதன் காலம் இன்னும் கணக்கிடப்படவில்லை..
இது எங்கள் பாரம்பரிய வாழ்விடமான ஆறகழூர் கோட்டைகரையில் உள்ளது சார் 5 தலைமுறைக்கு முன்பிருந்தே இருப்பதாக சொல்கிறார்கள்..இது எங்கள் முன்னோரில் ஒருவராக இருக்க கூடும்
இதை முனி என்ற பேரில் வருடம் ஒரு முறை ஆடு கோழி பலி கொடுத்து எங்கள் ஆட்கள் வணங்குகிறார்கள்
எங்கள் குல தெய்வம் தீப்பாஞ்சாயி என சொல்கிறார்கள்...(கணவன் இறந்தவுடன் தீயில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ளல்)...அதற்க்கும் இந்த சதி கல்லுக்கும் தொடர்பு இருக்க கூடும்
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
கோட்டைகரை,
சதிகல்,
நடுகல்,
aragalur,
hero stone,
kottaikarai,
sathikal
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
சேலம் மாவட்ட கல்வெட்டுக்கள் -ஒரு பார்வை 1
சேலம் மாவட்ட கல்வெட்டுக்கள் -ஒரு பார்வை 1
சில கல்வெட்டுக்கள் வடமொழி,கன்னடம்,கிரந்தத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன...
சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்களில் இது வரை வெளியிடப்பட்டவை 350 கல்வெட்டுக்கள்
இதில் 252 கல்வெட்டுக்கள் மைசூரிலுள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டு துறை ,கல்வெட்டு இயக்குநர் அலுவலகத்தாரால் படி எடுக்கப்பட்டவையாகும்..70 கல்வெட்டுக்கள் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன98 கல்வெட்டுகள் புதியவனவாக கண்டுபிடிக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன..கி.பி 13 ஆம் நூற்றாண்டில் அதிகமான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன....13 ஆம் நூற்றாண்டில்---------------------------125 கல்வெட்டுக்கள்10 ஆம் நூற்றாண்டில்----------------------------27 கல்வெட்டுக்கள்11 ஆம் நூற்றாண்டில்----------------------------20 கல்வெட்டுக்கள்12 ஆம் நூற்றாண்டில் --------------------------21 கல்வெட்டுக்கள்14 ஆம் நூற்றாண்டில் ------------------------- 14 கல்வெட்டுக்கள்16,17,18,19 ஆம் நூற்றாண்டில்.--------------112 கல்வெட்டுகளும்
பொறிக்கப்பட்டுள்ளன..சில கல்வெட்டுக்கள் வடமொழி,கன்னடம்,கிரந்தத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன...
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்
லேபிள்கள்:
அருங்காட்சியகம்,
சேலம்,
தமிழ் எழுத்து,
மைல்கல்,
mail kal,
muciyam,
salem,
tamil
இருப்பிடம்:
Salem, MA, USA
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில்கி.பி 1183 ல் சனவரியில் (மகரஞாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது..வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது ஐந்தாவது வானத்துக்கானது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம .அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்
http://wikimapia.org/26133043/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
This is the Vayu sthalam of the Pancha bootha sthalams
WIKIMAPIA.ORG
http://wikimapia.org/26133043/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
கூகையூர்,
சொர்ணபுரீஸ்வரர்,
aragalur,
kukaiyuur,
siva temple,
sornapuriswarar
இருப்பிடம்:
Villupuram, Tamil Nadu, India
சனி, 16 மே, 2015
aragalur ஆறகழூர் அம்பாயிரம்மன் முற்கால துர்க்கை
ஆறகழூர் அம்பாயிரம்மன் கோவில் வரலாறு..
--------------------------------------------------------------------------------------தலவரலாறு
--------------------ஆறகழூரில் வசித்த மண்பாண்ட தொழிலாளர்கள்(குயவர்கள்) வசிஷ்ட நதிக்கரையில் இருந்த செம்மண் குவியலை பெயர்த்தனர் ஆனால்.முடியவில்லை . கோடாரியால் வெட்டியபோது உள்ளிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த மக்கள் மன்னரிடம் தகவல் தெரிவித்தனர்.அங்கு பூமிக்கு அடியில் மகிஷாசுரமர்த்தினி சிலை இருப்பது தெரியவந்தது.அதை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட துவங்கினர்....
துர்க்கைக்கு அமைந்த தனிக்கோவில் இது
பேச்சு மணி ஆட்டுமணி
-------------------------------------------அம்பிகை வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறாள்.மகிஷனை அழிப்பதற்காக அம்பிகை ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்தாள்.
இதனால் இவளை ‘’அம்பாயிரம்மன்’ என அழைக்கின்றனர்
பவுர்ணமியன்று விசேச பூசை உண்டு,செவ்வாய் வெள்ளியில் ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு....
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு எலுமிச்சை தீபம் ஏற்றி தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.வஷிஷ்ட நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அதை அம்பிகையாய் கருதி ஆற்று நீரால் அபிசேகம் செய்கின்றனர் பின் அதை மரத்தில் கட்டி
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
குழந்தை பிறந்தால் மணி கட்டுவதையே இப்படி குறிப்பிடுகின்றனர்.
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..
ராகு கேது விநாயகர்
------------------------------------இங்குள்ள இரட்டை விநாயகர் சன்னிதி முகப்பில் ராகு கேது உள்ளனர்,
விநாயகர் கேதுவுக்கு உரிய தெய்வம் என்பதால் கேது தோசம் விலகி நன்மை உண்டாகும்..
நீதி பிரார்த்தனை
---------------------------------
கோவில் வளாகத்தில் பக்தர்கள் கொடுத்த சூலங்கள் உள்ளன.ஏமாற்றப்பட்டோர்,தவறு செய்யாமல் தண்டனை பெற்றோர் நீதி வேண்டி சூலத்தை தலைகீழாக குத்தி வைக்கின்றனர்,வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து பொங்கல் இடுகின்றனர்.
இதற்க்கு ஈடு போடும் வழிபாடு என்று பெயர்
---------------------------------
கோவில் வளாகத்தில் பக்தர்கள் கொடுத்த சூலங்கள் உள்ளன.ஏமாற்றப்பட்டோர்,தவறு செய்யாமல் தண்டனை பெற்றோர் நீதி வேண்டி சூலத்தை தலைகீழாக குத்தி வைக்கின்றனர்,வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து பொங்கல் இடுகின்றனர்.
இதற்க்கு ஈடு போடும் வழிபாடு என்று பெயர்
விபத்து,தற்கொலை செய்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் வடித்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர் .
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.
நடுகற்கள்-நவகண்டம்
---------------------------------------------ஊரின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட 3 நவகண்ட சிலைகள் இங்கு உண்டு..
திறக்கும் நேரம்
--------------------------------
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
இருப்பிடம்-
---------------------
சேலம்-ஆத்தூர்=52கி.மீ, ஆத்தூர்-ஆறகழூர்= 23 கி.மீ தொலைவு
ஆறகழூர் பஸ்நிலையத்தில் இருந்து அரை.கி.மீ தொலைவில் கோவில் உள்ளது...
லேபிள்கள்:
அம்பாயிரம்மன்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
துர்க்கை,
நடுகல்,
ampayiramman,
aragalur,
thurkai
வியாழன், 14 மே, 2015
காமக்காபாளையம் கல்வெட்டு
மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பைக் சட்டென்று நின்றது..காமக்காபாளையம் என்ற ஊரின் பெயரை படித்தவுடன்..
காமநாதீஸ்வரர்----காமக்காபாளையம் இது இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ மனம் யோசித்தது....பைக் ஊருக்குள் திரும்பியது...உயர்ந்து நின்ற கோபுரத்தை நோக்கி பயணித்தது...ஒரு பழைய சிவன் கோவில் ஆனா அது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தது...கோவிலும் பூட்டியிருந்தது..
கோவிலின் முன் வழக்கம் போல் நம் மக்கள் அறுவடை செய்த எள்ளை காயவைத்து உதிர்த்து கொண்டிருந்தனர்.....
ஏங்க இங்க எங்காவது தனியா சிலையோ அல்லது எழுத்துக்கள் அடிச்ச கல்லோ இருக்கா..?
இங்கயா...?அப்படி ஏதும் இல்லையே இது ஒரு இளைஞரின் குரல்...
ஏம்பா அந்த முள்ளு காட்டுகிட்ட 2 கல்லு இருக்கே..அங்க கூட பொம்பளங்க..தீட்டானவங்க போவ கூடாதும்பாங்களே...50 வயது மதிக்கதக்க ஒரு பெண் குரல்....
அட ஆமாம்....அந்த இளைஞருடன் சற்று தொலைவு நடந்தவுடன்
அடர்த்தியாய் முள் வளர்ந்திருந்த ஓர் இடத்தை சுட்டி காட்டினார்..
அய்யோ இதுக்குள்ள எப்படி போறது...?
ஆனாலும் விட்டுப்போக மனமில்லை....
மெள்ள முள்ளை விலக்கி விலக்கி உள்ளே நுழைந்தேன்..உடல் முழுக்க முற்களின் கீரல்கள்...இன்னும் கொஞ்சம் முன்னேறியபோது
2 கற்கள் தென்பட்டன....மனதில் உற்சாக வெள்ளம்...
ஆனால் கிட்ட நெருங்க முடியல...கையை மட்டும் நீட்டி குத்து மதிப்பாய் காமிராவில் படம் எடுத்தேன்....சில படங்களும் சில எழுத்துக்களும் உள்ளன...இது என்ன கல்லாக இருக்கும்....?
லேபிள்கள்:
ஆறகழூர்,
கல்வெட்டு,
காமக்காபாளையம்,
aragalur,
inscription,
kamakkaapalaiyam
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















