ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூரில் அகோரசிவம் முதலியார் மகன் என்னுடைய நாயனார்

சோழர்களின் குருக்களான அகோரசிவாசார்யார் முதலியோரே ஆகமங்களுக்கு பத்ததி எழுதியவர்கள்.
அகோரசிவாசார்யார் இரண்டாம் ராஜராஜனின் காலத்தில் இருந்தவர். அவர் ராஜகுருவாக இல்லாத போதிலும் அவர்தம் பத்ததியே அக்காலத்தில் விளங்கி வந்தது. அவர்தம் பத்ததியில் அவருடைய குருபரம்பரையைச் சேர்ந்தவர்கள் சோழபரம்பரைக்கு குருமார்களாக விளங்கிய செய்தி முழுவதையும் தொகுத்துத் தருகிறார். முதலாம் ராஜராஜனுக்கு ஈசான சிவமும் ராஜேந்த்ரனுக்கு சர்வசிவமும் இப்படி வரிசையாகப் பலர் இருந்தனர்.... Sankara Narayanan G
கி.பி.1375,7-12-1375 ஆம் ஆண்டு தேதிட்ட ஆறகளூர் கல்வெட்டில்
//திருகாமீசுரமுடைய நாயனார் கோவில் ஆறைநாயகர் திரு மண்டபத்தில் ஸ்ரீ ருத்திரர் ஸ்ரீ மாயேசுவரர்தேவகன்மியர் கோயில் கணக்கர் முதலிய அலுவலர்கள் அகோரசிவம் முதலியார் மகனுன் என்னுடைய நாயனாருக்கு  திருமடைவளாகத்துத் தெற்க்கு வீதியில் ஒரு மனையும் அதைச் சூழ்ந்த இடமும் கொடுத்ததை பற்றி குறிப்பிடுகிறது.//.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக