சனி, 30 மே, 2015

இந்த கல் சொல்லும் செய்தி என்ன..?


இந்த கல் சொல் சொல்லும் செய்தி என்ன..?

-------------------------------------------------------------------------

றகழூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் உள்ளது இது...சின்ன வயசில் இருந்து இதை பார்த்திருந்தாலும் கூட கவனமாய் பார்த்ததில்லை...இப்ப சற்று கவனித்து பார்த்த போது சில வீரர்களின் உருவங்கள் தெரிகிறது..

ஆவுடையார் இல்லாத பாணம்??/ போன்ற தோற்றமுடன் உள்ளது .எழுத்துக்கள் ஏதும் இல்லை...இது சாதாரண கல்தானா..?அல்லது இதில் சிறப்பான வரலாறு ஏதேனும் இருக்க கூடுமா..? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க





.

வெள்ளி, 29 மே, 2015

அம்பாயிரம்மன் தேர் திருவிழா-பெரியேரி.


ஒவ்வொரு கிராமங்களிலும் துர்கை வழிபாடு பழங்காலங்களில் சிறப்பாகவே நடைபெற்று வந்துள்ளது

 ஊருக்கு ஊர் பெயர் மாறினாலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது...
ஆறகழூர் துர்க்கையின் பெயர் அம்பாயிரம்மன்..எதிரியின் மீது ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்ததால் அம்பாயிரம்மன் என பெயர் பெற்றதாய் வாய் வழி செய்திகள் தெரிவிக்கின்றன..
ஆறகழூர் பெரியேரி இரண்டும் ஒரே ஊராய் இருந்த போது கட்டப்பட்டதால் இரண்டு ஊருக்கும் பொதுவானதாய் இருந்து வருகிறது..பூசாரிகளும் இரு ஊரை சார்ந்தவர்களே...திருவிழா முற்காலத்தில் ஒன்றாகவும்..சில நூற்றாண்டுகளாய் தனித்தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது....
தேர் முடிந்து மறு நாள் துர்க்கைக்கு ஒரு எருமை கிடா பலி கொடுக்கப்படும்...இரு ஊரை சார்ந்தவர்களும் தங்கள் கொடுவாளால் வெட்டுவார்கள்..
தேருக்கு ஒரு வாரம் முன் கடவுள் சிலைகளை ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்து வாங்கி செல்ல பெரியேரி மக்கள் மேளதாளம் பல்லாக்கோடு வந்து வாங்கி சென்று தங்கள் ஊரில் உள்ள கோவிலில் வைத்து வழிபடுவார்கள்..அந்த நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு..
ஜீன் 2ம் தேதி 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரி கிராமத்தின் சார்பில் தேர்திருவிழா நடைபெற உள்ளது..

      .15 ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.காமநாதன் முதலியார் தலையில் ஆறகழூரின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடைபெற்றது. அப்போது எருமை குளத்தின் அருகே வெட்டப்பட்டது...இப்போது 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரியின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடத்தப்படுகிறது











ஆறகழூர் -அடையாளம் தெரியாத சிலை


ஆறகழூரில் உள்ள அடையாளம் தெரியாத சிலை


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் அருகே உள்ள தேர்நிலை(தேர்முட்டி)யின் முன்பு அகழியின் ஓரம் உள்ள சிலை து..இது பல்லவர் காலமாக இருக்கக்கூடும்.இந்த சிலை யாராக இருக்கும் என பல்வேறு கோணங்களில் விசாரித்தும் சரியான முடிவு கிட்டவில்லை... சண்டிகேஸ்வரர்(அ),அய்யனார்(அ)சமண சாத்தன் சிலையாக இருக்ககூடும் என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன

ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்


ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்


 மகதைக்கு பெருவழி காஞ்சிபுரம் -என்ற எழுத்துள்ள கல்லில் எழுத்தின் கீழே மொத்தம் 16 குழிகள் உள்ளன.ஒவ்வொரு குழியும் 10 காதத்தைக் குறிக்கும் அதியமான் பெருவழிக் கல்வெட்டில் உள்ளபடி.எனவே இக்கல்வெட்டில் காணப்படும் குழிகள் காஞ்சிபுரத்திற்கு 160 காதம் தூரம் என்பதைக் குறிக்கின்றன.


           
ஒவ்வொரு குழியும் ஒரு காதம் என்றும் கொள்ளலாம். ஒன்றுக்கும் பத்துக்கும் வித்தியாசப் படுத்த அதியமான் பெருவழிக் கல்வெட்டில் பத்து என்பதைக்குறிக்க பெரிய குழிகளைக் காட்டியிருந்தனர்.

ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு







சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள-ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு


ஆறகழூர் கோட்டைகரையை தாண்டி அகழியின் அருகே இந்த கல் உள்ளது.நீண்ட காலமாக இந்த கல் பற்றி அறியப்படாமல் இருந்தது..இதன் புகைப்படத்தை நான் முகநூலில் இட்டு கேட்டபோது தொல்லியல் அறிஞர்கள் இது வணிக குழுவின் கல்வெட்டு எனவும் 13 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனவும் தெரிவித்தனர்..இந்த கல்லில் இன்னும் ஆராய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன..
      

          இந்த கல்லானது முக்கால் வாசி பூமியின் மேலும் கால் வாசி பூமிக்கு அடியிலும் இருப்பதை போல் தோன்றுகிறது.வெளியில் காணப்படும் பகுதியில் கல்வெட்டு ஏதும் காணப்படவில்லை...முன்பு ஒரு முறை இதை பதிந்து கேட்டபோது திரு Sankara Narayanan G அவர்கள் இதில் மங்கல பொருட்கள் இருக்கின்றன..வணிக கல்வெட்டாக இருக்கும் என்று கூறினார்..?வணிக கல்வெட்டுக்கு என தனி அடையாளம் (இலக்கணம்) உள்ளதா..?இந்த வணிக கல்வெட்டுக்களின் நோக்கம் என்ன..? எங்கள் மகதை தேசன் 11ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து 13ஆம் நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்தது..வணிகர்கள் மற்றும் வழிபோக்கர்களுக்கு வழிகாட்ட மகதை பெருவழிக்கல் காஞ்சிபுரம் என்ற மைல்கல் எங்கள் காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்தது..இப்போது அது அருங்காட்சியகத்தில் உள்ளது....இந்த வணிககல் அப்போது கோட்டை இருந்த இடத்தில் இப்போது வயல்வெளியாக உள்ள இடத்தில் உள்ளது..



      
இந்த வணிகக் கல்வெட்டுகளெல்லாம் அந்தக் காலத்தில் குழுவாக வணிகம் செய்வோர் போகும் போது 
அங்காங்கே தங்கியே செல்ல வேண்டியதிருந்தது,அப்போது ஆங்க்காங்கே இருக்கின்ற அரசியல் தலைகளுக்குட்பட்டே வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது, அந்த நிலையையும்,சில பிரச்சினைகளையும் தீர்த்தாற்பொருட்டே இந்த கல்வெட்டுகள்  

ஆறகழூர் சதிக்கல்-நடுகல்


ஆறகழூர் சதிக்கல்-நடுகல்


ஆறகழூர் அய்யனார் கோவில் அருகே உள்ள விளைநிலத்தில் இருந்த இந்த சதிகல் இப்போது அய்யனார் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது..
     இவர் ஒரு சிறந்த வீரனாய் இருக்க கூடும்

ஆறகழூர் சதிக்கல்(கோட்டைகரையான்)


ஆறகழூர் கோட்டை கரையில் உள்ள சிலை இது ஒரு நடு கல். சதி கல்லாக இருக்ககூடும். நாங்க இதை முனி என்று சொல்லி வழி படுகிறோம்


.
வருடம் ஒரு முறை இதற்க்கு ஆடு கோழி பலியிட்டு வணங்கப்படுகிறது...அடர்த்தியான புளிய மரங்களுக்கு நடுவில் உள்ளது..இரவு நேரங்களில் இந்த முனியின் நடமாட்டம் இருக்கும் என்பது கோட்டைகரை மக்களின் நம்பிக்கை
இது ஒரு நடுகல்...சதி கல்லாக இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..இதன் காலம் இன்னும் கணக்கிடப்படவில்லை..
   






    இது எங்கள் பாரம்பரிய வாழ்விடமான ஆறகழூர் கோட்டைகரையில் உள்ளது சார் 5 தலைமுறைக்கு முன்பிருந்தே இருப்பதாக சொல்கிறார்கள்..இது எங்கள் முன்னோரில் ஒருவராக இருக்க கூடும்
      
        

      
        
இதை முனி என்ற பேரில் வருடம் ஒரு முறை ஆடு கோழி பலி கொடுத்து எங்கள் ஆட்கள் வணங்குகிறார்கள்
         
          
 
எங்கள் குல தெய்வம் தீப்பாஞ்சாயி என சொல்கிறார்கள்...(கணவன் இறந்தவுடன் தீயில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ளல்)...அதற்க்கும் இந்த சதி கல்லுக்கும் தொடர்பு இருக்க கூடும்
     
          

சேலம் மாவட்ட கல்வெட்டுக்கள் -ஒரு பார்வை 1

சேலம் மாவட்ட கல்வெட்டுக்கள் -ஒரு பார்வை 1

சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்களில் இது வரை வெளியிடப்பட்டவை 350 கல்வெட்டுக்கள்

இதில் 252 கல்வெட்டுக்கள் மைசூரிலுள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டு துறை ,கல்வெட்டு இயக்குநர் அலுவலகத்தாரால் படி எடுக்கப்பட்டவையாகும்..

70 கல்வெட்டுக்கள் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன98 கல்வெட்டுகள் புதியவனவாக கண்டுபிடிக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன..கி.பி 13 ஆம் நூற்றாண்டில் அதிகமான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன....13 ஆம் நூற்றாண்டில்---------------------------125 கல்வெட்டுக்கள்10 ஆம் நூற்றாண்டில்----------------------------27 கல்வெட்டுக்கள்11 ஆம் நூற்றாண்டில்----------------------------20 கல்வெட்டுக்கள்12 ஆம் நூற்றாண்டில் --------------------------21 கல்வெட்டுக்கள்14 ஆம் நூற்றாண்டில் ------------------------- 14 கல்வெட்டுக்கள்16,17,18,19 ஆம் நூற்றாண்டில்.--------------112 கல்வெட்டுகளும்

பொறிக்கப்பட்டுள்ளன..





சில கல்வெட்டுக்கள் வடமொழி,கன்னடம்,கிரந்தத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன...

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்

தமிழ் எழுத்துடன் கூடிய மைல் கல்இது சேலம் அருங்காட்சியகத்தில் இருக்கு 
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில்கி.பி 1183 ல் சனவரியில் (மகரஞாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது..வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது ஐந்தாவது வானத்துக்கானது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம .அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்
This is the Vayu sthalam of the Pancha bootha sthalams
WIKIMAPIA.ORG

http://wikimapia.org/26133043/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

சனி, 16 மே, 2015

aragalur ஆறகழூர் அம்பாயிரம்மன் முற்கால துர்க்கை

ஆறகழூர் அம்பாயிரம்மன் கோவில் வரலாறு..

--------------------------------------------------------------------------------------

தலவரலாறு

--------------------
ஆறகழூரில் வசித்த மண்பாண்ட தொழிலாளர்கள்(குயவர்கள்) வசிஷ்ட நதிக்கரையில் இருந்த செம்மண் குவியலை பெயர்த்தனர் ஆனால்.முடியவில்லை . கோடாரியால் வெட்டியபோது உள்ளிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்த மக்கள் மன்னரிடம் தகவல் தெரிவித்தனர்.அங்கு பூமிக்கு அடியில் மகிஷாசுரமர்த்தினி சிலை இருப்பது தெரியவந்தது.அதை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட துவங்கினர்....
துர்க்கைக்கு அமைந்த தனிக்கோவில் இது

பேச்சு மணி ஆட்டுமணி

-------------------------------------------
அம்பிகை வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறாள்.மகிஷனை அழிப்பதற்காக அம்பிகை ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்தாள்.
இதனால் இவளை ‘’அம்பாயிரம்மன்’ என அழைக்கின்றனர்
பவுர்ணமியன்று விசேச பூசை உண்டு,செவ்வாய் வெள்ளியில் ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு....
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு எலுமிச்சை தீபம் ஏற்றி தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.வஷிஷ்ட நதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அதை அம்பிகையாய் கருதி ஆற்று நீரால் அபிசேகம் செய்கின்றனர் பின் அதை மரத்தில் கட்டி
“பேச்சு மணி கொடுத்தால் ஆட்டுமணி தருவேன்”
எனச்சொல்லி வேண்டுகின்றனர்..
பேசும் திறன் கொண்ட குழந்தையை பேச்சு மணி என்றும்
ஆட்டினால் ஓசை எழுப்பும் வெண்கல மணியை ஆட்டுமணி
என்றும் குறிப்பிடுகின்றனர்...
குழந்தை பிறந்தால் மணி கட்டுவதையே இப்படி குறிப்பிடுகின்றனர்.
குழந்தைக்கு அம்பாயிரம், அம்பாயி என பெயர் சூட்டப்படுகிறது..

ராகு கேது விநாயகர்

------------------------------------
இங்குள்ள இரட்டை விநாயகர் சன்னிதி முகப்பில் ராகு கேது உள்ளனர்,
விநாயகர் கேதுவுக்கு உரிய தெய்வம் என்பதால் கேது தோசம் விலகி நன்மை உண்டாகும்..
நீதி பிரார்த்தனை
---------------------------------
கோவில் வளாகத்தில் பக்தர்கள் கொடுத்த சூலங்கள் உள்ளன.ஏமாற்றப்பட்டோர்,தவறு செய்யாமல் தண்டனை பெற்றோர் நீதி வேண்டி சூலத்தை தலைகீழாக குத்தி வைக்கின்றனர்,வேண்டுதல் நிறைவேறியதும் அதை நிமிர்த்தி வைத்து பொங்கல் இடுகின்றனர்.
இதற்க்கு ஈடு போடும் வழிபாடு என்று பெயர்
விபத்து,தற்கொலை செய்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்களின் உருவத்தை ஒரு கல்லில் வடித்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர் .
முத்தையன்,கருப்பையா,வாமுனி,செம்முனி, வளர்ந்த ஜடாமுனி,வேங்கை,ஆகாய துரைமுனி, ஆகிய காவல் தெய்வங்களும் சப்த கன்னியரும் இங்கு உண்டு..
.

நடுகற்கள்-நவகண்டம்

---------------------------------------------
ஊரின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட 3 நவகண்ட சிலைகள் இங்கு உண்டு..
திறக்கும் நேரம்
--------------------------------
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
இருப்பிடம்-
---------------------
சேலம்-ஆத்தூர்=52கி.மீ, ஆத்தூர்-ஆறகழூர்= 23 கி.மீ தொலைவு
ஆறகழூர் பஸ்நிலையத்தில் இருந்து அரை.கி.மீ தொலைவில் கோவில் உள்ளது...










வியாழன், 14 மே, 2015

காமக்காபாளையம் கல்வெட்டு


மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பைக் சட்டென்று நின்றது..காமக்காபாளையம் என்ற ஊரின் பெயரை படித்தவுடன்..

காமநாதீஸ்வரர்----காமக்காபாளையம் இது இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ மனம் யோசித்தது....
பைக் ஊருக்குள் திரும்பியது...உயர்ந்து நின்ற கோபுரத்தை நோக்கி பயணித்தது...ஒரு பழைய சிவன் கோவில் ஆனா அது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தது...கோவிலும் பூட்டியிருந்தது..
கோவிலின் முன் வழக்கம் போல் நம் மக்கள் அறுவடை செய்த எள்ளை காயவைத்து உதிர்த்து கொண்டிருந்தனர்.....
ஏங்க இங்க எங்காவது தனியா சிலையோ அல்லது எழுத்துக்கள் அடிச்ச கல்லோ இருக்கா..?
இங்கயா...?அப்படி ஏதும் இல்லையே இது ஒரு இளைஞரின் குரல்...
ஏம்பா அந்த முள்ளு காட்டுகிட்ட 2 கல்லு இருக்கே..அங்க கூட பொம்பளங்க..தீட்டானவங்க போவ கூடாதும்பாங்களே...50 வயது மதிக்கதக்க ஒரு பெண் குரல்....
அட ஆமாம்....அந்த இளைஞருடன் சற்று தொலைவு நடந்தவுடன்
அடர்த்தியாய் முள் வளர்ந்திருந்த ஓர் இடத்தை சுட்டி காட்டினார்..
அய்யோ இதுக்குள்ள எப்படி போறது...?
ஆனாலும் விட்டுப்போக மனமில்லை....
மெள்ள முள்ளை விலக்கி விலக்கி உள்ளே நுழைந்தேன்..உடல் முழுக்க முற்களின் கீரல்கள்...இன்னும் கொஞ்சம் முன்னேறியபோது
2 கற்கள் தென்பட்டன....மனதில் உற்சாக வெள்ளம்...
ஆனால் கிட்ட நெருங்க முடியல...கையை மட்டும் நீட்டி குத்து மதிப்பாய் காமிராவில் படம் எடுத்தேன்....சில படங்களும் சில எழுத்துக்களும் உள்ளன...இது என்ன கல்லாக இருக்கும்....?